பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இந்த காரணத்தால் தான் ரேகா நாயர் பிக் பாஸ் வீட்டிற்க்கு போகிறார்
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இந்த காரணத்தால் தான் ரேகா நாயர் பிக் பாஸ் வீட்டிற்க்கு போகிறார்
Bigg boss Tamil season 7 Rekha Nair entry |
ரேகா நாயர் இதற்கு முன்பு எவ்வளவோ சமூக ஆர்வலராக பலருடைய வாழ்க்கையில் நிறைய மனிதர்களுக்கு குரலாகவும் செயலாகவும் உதவியுள்ளார். அப்போதெல்லாம் பெரிதும் பேசும் பொருளாக சமூக வலைத்தளத்தில் இருந்ததில்லை.
சில மாதங்களுக்கு முன்பு பார்த்திபன் இயக்கத்தில் நான் லீனியர்ஸ் சிங்கிள் ஷார்ட் பிலிம் நேஷனல் அவார்ட் பெற்று பலரால் இரவின் நிழல் பாராட்டைப்பெற்றது. படத்தின் முழு அர்த்தத்தை சொல்லும் வகையில் ஒரு நிமிட காட்சியாக ரேகா நாயர் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
தன்னுடைய ஒரு பக்க மார்பை காட்டி நடித்ததால் பெரிய அளவில் சமூக வலைதளத்தில் சர்ச்சையாக பேசப்பட்டது. இதற்கு மறுப்புத் தெரிவித்த சர்ச்சை நாயகன் பயில்வான் ரேகா நாயர் இருவரும் நடை பயிற்சி செய்யும் பொழுது எதார்த்தமாக இருவரும் சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் அடிக்கும் வகையில் சண்டை முற்றியது.
இவர் ஆண்களுக்கு ஆதரவு செய்யும் வகையில் பல எதார்த்தத்தை பேசி இருப்பார். இதனால் பல காரணங்களால் சர்ச்சைக்கு உள்ளானார். பெண்கள் அணியும் உடை அடுத்தவர் பார்த்து ரசித்து பாராட்டுவதற்கு தான் எல்லா பெண்களும் எதிர்பார்ப்பார்கள்.
பெண்கள் பெண்களிடம் சொன்னால் தப்பில்லை ஆனால் ஆண்கள் பெண்களிடம் சொன்னால் தவறாகுமா?
சினிமா இண்டஸ்ட்ரியில் வாய்ப்பு தேடி வரும் நிறைய பெண்களிடம் அட்ஜஸ்மென்ட் பேசுவதை பெண்கள் அப்போது பேசும்போதே அதை எதிர்க்காமல் தவிர்க்காமல் பல வருடங்களுக்குப் பிறகு அவர் இப்படி சொன்னார் இப்படி கேட்டார் என்று நேர்காணலில் வந்து அவர்கள் மீது பழி சுமத்துவார்கள்.
இப்படி பல சர்ச்சைகளிலும் பாராட்டையும் பெற்று பலர் மனதில் இடம் பிடித்திருக்கும் இவர் ரேகா நாயர். பல திறமையாளர்களையும், பல கலைஞர்களையும், இப்படி பல துறையில் இருக்கும் திறமையாளர்களை கண்டறிந்து பல சாதனையாளர்களை உருவாக்கிய கலமான தான் பிக் பாஸ்.
பிக் பாஸ் சீசன் 7 ரேகா நாயர் போனால் பலருக்கும் பேசும் பொருளாக இருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதனால் இவர் போனால் நன்றாக இருக்கும் என்று பல ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் தொடங்குவதாக கூறி சில நாட்களே ஆகும் நிலையில் புதிய திருப்பமாக நிறைய ஆச்சரியங்களும் எதிர்ப்பார்ப்புகளும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. இந்நிலையில் வீடு இரண்டாக மாற்றுவதாக கூறியுள்ளார்கள்.
இப்படி பல கோணங்களில் எதிர்பார்ப்புகளோடு இருக்கும் பிக் பாஸ் இதில் ரேகா நாயர் இருந்தால் விமர்சனத்திற்கும் சர்ச்சைக்கு எந்தவித பஞ்சமும் இருக்காது என்பது உறுதி.