தமிழ் பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி பிக் பாஸ் சீசன் செவென் போட்டிக்கு வருவதன் நோக்கத்தை விரிவாக பார்க்கலாம் .
அன்ன பாரதி தமிழ்பட்டிமன்ற பேச்சாளர். இவர் ஜூன் 13 1990 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறார்.
தந்தை பெயர் தர்மராஜ் தாய் சகாயம் மேரி அண்ணன் ஆண்டனி. பாரதிக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது.
பாரதி சிறு வயதில் பள்ளி படிக்கும்போது பேச்சுப்போட்டி எழுத்துப்போட்டி கற்றல் போட்டி பாட்டுப் போட்டி நினைவாற்றல் போன்ற போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் வாங்கினார்.
கல்லூரி படிப்பு எம்.எஸ்.சி எம்.பில் எலக்ட்ரானிக்கல் படித்து முடித்து இருக்கிறார்.
துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர் |
ஹெச்.டி.எஃப்சி பேங்கில் ஒரு வருடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்தியா ரேடியோவில் சி.சி.ஏவாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
தமிழின் மீது பற்று கொண்டிருந்ததால் மக்கள் டிவியில் உரிமைக்குரல் என்ற நிகழ்ச்சியில் இவர் பங்கு பெற்றிருந்தார்.
ரேடியோவில் வேலை செய்திருந்ததால் மங்கையர் மன்றம் என்ற பட்டிமன்றங்களில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது.
மேடைப் பேச்சுக்கள் பேசுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். நகைச்சுவையாக பேசுவதில் திறமையானவர்.
பட்டிமன்றங்களில் நகைச்சுவை கலந்த பேச்சு பேசுவதின் மூலம் பல வாய்ப்புகள் தேடி வந்தது.
பாரதி முதல் முதலில் பட்டிமன்றத்தில் பேசிய தலைப்பு ஆணோட வெற்றிக்கு காரணம் தாயா தாரமா.
பாரதி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.
சன் மற்றும் ஆதித்யா தொலைக்காட்சியில் காமெடி ஜங்ஷன், சண்டே கலாட்டா, லொள்ளு சபா போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.
பாரதி மதுரை முத்து கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.
இருவரும் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் நகைச்சுவை கலந்த பேச்சுக்களின் மூலம் மக்களின் மனதை கவர்ந்துள்ளார் .
இவர்கள் இருவரின் பேச்சுத்திறமையை கண்டு தமிழ்நாட்டில் மட்டும் இன்றி வெளிநாடுகளில் துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பட்டிமன்றங்களில் நகைச்சுவை கலந்து பேசி இருக்கிறார்.
இவர் சமூக வலைத்தளங்களில் நிறைய டிக் டாக் வீடியோஸ்கள் பதிவிடுவார்.அதன் மூலம் அவர் பிரபலம் அடைந்தார்.
மதுரை முத்து, அறந்தாங்கி நிஷா போன்ற மேடைப் பேச்சாளர்களுடன் கலந்து கொண்டு பேசுவார்.
சமீப காலத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பெண் வர்ணனை யாளராக அன்ன பாரதி பங்கேற்று இருந்தார்.
பட்டிமன்றங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருந்தாலும் அவருக்கான கிடைக்கவில்லை என நினைத்ததால்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு எடுத்திருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களை போட்டியாளர்களை கொண்டு நடந்து கொண்டிருக்கிறது. தற்போது வைல்டு கார்டு போட்டியாளராக ஐந்து போட்டியாளர்களை உள்ளே அனுப்பப் போகிறார்கள்.
5 போட்டியாளர்களில் ஒருவராக அன்னபாரதி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
அன்ன பாரதியின் பேச்சுத்திறமையை பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் தன் திறமையை காட்டி விளையாடப் போவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
15 போட்டியாளர்களின் விளையாட்டுத் திறமையை தெரிந்து கொண்டு உள்ளே செல்வதால்100 நாட்கள் இருந்து விளையாடுவாரா இல்லை பாதியிலேயே வெளியேறுவாரா என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.