பவா செல்லதுரை தமிழ் இலக்கியம் ஆகியவைகளின் கதை சொல்வதில் பிரபலமானவர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி பிறந்திருக்கிறார். இவருக்கு 61 வயது ஆகிறது. கல்லூரியில் பேச்சுலர் ஆஃப் காமர்ஸ் என்ற படிப்பை படித்திருக்கிறார். இவருக்கு தமிழின் மீது ஆர்வம் உள்ளதால் தன்னை தமிழ் எழுத்தாளராக அறிமுகப்படுத்தினார். தமிழ் இலக்கிய கதைகளை எழுதுவதில் சிறந்தவர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வம்சி புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். நிறைய புத்தகங்கள் படிப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகம். இலக்கிய கதைகள் எழுதுவதிலும் வல்லவர். இலக்கிய கதைகளை குழந்தைகளுக்கு புரியும் வகையில் கருத்துக்களை தெளிவாக எடுத்துரைப்பதில் வல்லவர். இவர் மேடைப்பேச்சுகளில் பேசுவார். மேலும் படிக்க…
பவா செல்லதுரை சமுதாயத்திற்காக பாடுபடும் சமூக ஆர்வலர். தலித் மக்களின் கொடுமைகளையும் அவர்களின் மரணம் காரணமாக அவர் மிகவும் பாதிக்கப்பட்டார். அதனால் அவர்களின் உரிமையை கொடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டார். ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காகவும் பாடுபட்டார். சமூகத்தின் மீது பற்று அதிகம் உள்ளதால் சமூகத்தை பற்றி கருத்துக்களை எடுத்துரைப்பார்.
20 வருடம் அவர் தமிழ் முற்போக்கு கழகத்தில் பிரதிநிதியாக இருந்திருக்கிறார். இவருடைய சிந்தனையும், அணுகுமுறையும் மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. சிறு வயதில் இருப்பவர்களிடம் எப்படி பேச வேண்டும் வயது முதிர்ந்தோரிடம் எப்படி பேச வேண்டும் என அறிந்து பேசுவதால் இவருக்கு மக்களிடையே தனி வரவேற்பு உள்ளது.
மேடைப்பேச்சுகளில் பேசிக்கொண்டிருந்தாலும் அவர் தன்னை ஒரு நடிகராகவும் பிரதிபலித்திருக்கிறார். திரைத்துறையில் வெளிக்காட்டிக்கொள்ள சில படங்களில் நடித்துள்ளார்.அவர் 2015 பூலோகம் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். ஜோக்கர், சீதக்காதி, குடிமகன், சைக்கோ, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிப்பு திறமையும் அவரிடம் உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக விளையாட போவதாக அறிவித்திருக்கிறார். பவா செல்லதுரை இவர் ஒரு விறுவிறுப்பான போட்டியாளர். இவருக்கு வயது அதிகம் இருந்தாலும் தன்னை உலகிற்கு வெளி காட்ட வேண்டும் என நினைத்து வந்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு குறைந்த வயது உடையவர்கள் விளையாட்டில் கலந்து கொண்டிருந்தாலும் தன் திறமையை வெளிக்காட்ட வந்திருக்கிறார். மேலும் படிக்க…
இந்நிகழ்ச்சியின் மூலம் சமூகத்தைப் பற்றிய கருத்துக்களை எடுத்துரைப்பாரா அல்லது கதை சொல்லும் திறமையும், எழுத்து திறமையும் பிக் பாஸ் வீட்டில் கொண்டு வருவாரா என பார்க்கலாம். பவா செல்லதுரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வரை நின்று விளையாட போகிறாரா இல்லை பாதையிலே வெளியேறுவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.