பிக்பாஸ் விசித்ராவின் கடந்து வந்த பாதை
விசித்ரா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்திருந்தவர். தமிழ் சினிமவில் நிறைய படங்கள் நடித்திருக்கிறார். 90 களில் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருந்தது. இவங்களோட உண்மையான பெயர் ஜெயந்தி ,ஜெயா என்று அழைப்பார்கள். அவருடைய அப்பா வில்லியம்ஸ், அம்மா மேரி வசந்தா, நாலு பெண்கள் ஒரு தம்பி உள்ளார்கள். இவர் புது விதமாக யோசிப்பதில் வல்லவர்.
சென்னையில் பிறந்து வளர்ந்து படித்து இருக்கிறார். அவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்திருக்கிறார். பி.எஸ்.சி, எம்.எஸ்.சி ஆகிய கல்லூரி படிப்புகள் தபால் மூலம் படித்திருக்கிறார். படிப்பு மற்றும் நடிப்பை விடவும் மனதில் என்று கூறினார். இவருக்கு படிப்பு மிகவும் முக்கியமாக இருந்தது.
அவருடைய அப்பா வில்லியம்ஸ் திரைத்துறையில் தயாரிப்பாளராகவும் , வில்லன் கதாபாத்திரத்தில் நடிகராகவும் நடித்திருக்கிறார். அம்மா நாடகத்தில் நடிப்பவர். அதனால் அவர் அம்மா, அப்பா இருவரும் திரை துறையை சார்ந்து இருந்ததால் இவருக்கு சிறுவயதிலேயே பட வாய்ப்பு கிடைக்க பெற்றிருக்கிறது.
விசித்ரா 17 வயதில் நடிகையாக நடித்த படம் பொற்கொடி. அந்த படம் பிரபலமடையவில்லை. பிறகு அவள் ஒரு வசந்தா மற்றும் தலைவாசல் ஆகிய படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இவர் ரஜினிகாந்த், சத்யராஜ், கமலஹாசன், கார்த்தி ஆகிய அனைத்து நடிகர்களுடனும் நடித்திருக்கிறார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கிறார். இவர் 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.
இவர் காதல் திருமணம் செய்து இருக்கிறார். திருமணம் செய்து மைசூரில் குடி பெயர்ந்திருக்கிறார். அங்கே ஒரு ஹோட்டல் நடத்தி வந்திருக்கிறார். அதில் சமைக்கவும் செய்வார்.
உணவு பரிமாறும் வேலையும் செய்வார்.மூன்று குழந்தைகள் உள்ளது. அவர் குடும்பத்தின் மீது அளவு கடந்த பாசத்துடன் இருப்பார். இவரை மேல் தோற்றத்தில் மூலம் கோபமான பெண் என்று நினைப்பார்கள்.
ஆனால் அவர் சாதுவான பெண்ணாக இருப்பார். உன்னால் இந்த வேலையை செய்ய முடியாது என்று சொன்னால் அந்த வேலையை செய்து முடிப்பாராம். அந்த அளவுக்கு கடினா உழைப்பாளியாம் விசித்ரா.
சமைப்பதில் விருப்பம் இருந்ததால் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியின் மூலம் அவரின் சமையல் திறமையை கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதின் மூலம் அவருக்கு பிக் பாஸ் சீசன் 7 கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
விஜய் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் விசித்ரா கலந்து கொள்ள போகிறார். குடும்பத்தின் மீது பாசம் உள்ளதால் பிரிவு தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறுவாரா இல்லை கடைசி வரை விளையாடி வெற்றி பெறுவாரா.
விளையாட்டில் வயதில் மூத்தவர் என்பதற்காக அனைவரிடமும் தனது கெத்து காட்டுவாரா இல்லை அனைவரையும் அரவணைத்து தனது தாயுள்ளத்தை காட்டுவாரா என எதிர்பார்க்கலாம்