பிக் பாஸ் வீட்டில் உடம்பை காட்டி தான் பிழைக்குமா?
Boomer அக்கா என்னும் விசித்திரா அவர்கள் சின்ன பசங்க எல்லாம் இருக்காங்க இந்த பொன்னு இப்புடி dress போட்டு இருக்கு அது தவறு அதனால நாமினேஷன் பண்ணுறேன்.
என் கருத்தை சொல்லி விடுகிறேன் :
biggbosstamil7 |
இன்னும் எத்தனை வருசத்துக்கு தான் இதையே உருட்ட போறீங்க. எந்த பெண்ணும் இங்கே விருப்பட்டு தன் உடலை பிறருக்கு காட்ட வேண்டும் என்று எல்லாம் ஆள் பாதி ஆடை பாதி என்று உடை அணிந்து நடப்பது இல்லை. உடை நாகரிகம் என்ன என்பதை இப்போது உள்ள பொது சமூகம் அறிந்தே நடக்கிறது.
Biggboss வீட்டில் பெண்கள் அணிந்து இருந்த உடை தவறாக தெரிந்து இருந்தால் அதை நேரடியாக அவரிடமே சொல்லி இருக்கலாம் நாமினேஷன் ல் சொல்லி அவர் குடும்பத்திற்கும் அவமானம் கொடுப்பது ஏன் தங்களை ஆக சிறந்த அறிவாளிகளாக காட்டி கொள்பவர்கள் தான் இது போன்ற கருத்துக்களை பரவிட்டு சந்தோசமா நடப்பர்கள்.
இல்லை இப்புடி எல்லாம் உடை அணிந்து வந்தாலே ஆண்கள் தவறு செய்து விடுவார்கள் என்று சொல்பவர்கள் என் இன்னொரு கேள்வி க்கான பதில் சொல்லுங்கள். இங்கே இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடதிற்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை யால் பாதிக்க பட்டு கொண்டு இருக்கிறாள், அதுக்கு எல்லாம் காரணம் dress தான. சின்ன குழந்தை களுக்கு கூட வன்கொடுமை நடக்கிறது அந்த குழந்தைகள் உடை மீது என்ன குற்றம் கண்டோம்.
biggbosstamil7 |
இது ஒரு mindset மாறுவது நம் பொது சமூகத்தே நல்லது. மீண்டும் சொல்கிறேன் எந்த பெண்ணும் நாகரிகம் இல்லாமல் உடை அணிய மாட்டார்கள் 7 சீசன் இல்லை 70 சீசன் வந்தாலும் boomer களை திருத்த முடியாது முதல் elimination க்கு வாழ்த்துக்கள் அக்கா.
நேற்று தவறாக பேசி இருந்தாலும் இன்று ஒரு சிறிய வயது பெண் கஷ்டப்படும் போது அவருக்காக நான் இருக்கிறேன் என்று நிற்கும் அந்த குணம். நல்ல மனம் தான். சில நேரங்களில் சில மனிதர்கள் அவர்களையும் அரியாமல் நல்ல குணத்தை வெளிபடுத்தி விடுகிறார்கள் ♥
அவ்வளவு தான் நண்பா வாழ்க்கை ♥