பிக் பாஸ் ரவீனா பற்றி தெரிந்ததும்? தெரியாததும்?
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் சென்னையில் பிறந்து வளர்ந்திருக்கிறார். ரவீனாவுக்கு 19 வயது ஆகிறது. சென்னையில் படித்து முடித்து இருக்கிறார். அவர் குடும்பமும் சென்னையிலேயே உள்ளது.
இவங்க குடும்பத்தில் உள்ள நபர்கள் தாத்தா, அம்மா, அண்ணா, ரவீனாவின் தந்தை ஜெயராமன், தாய் லதா ஜெயராமன், அண்ணன் ராகுல் பிரகாஷ் ஆகியோர் குடும்பம் உறுப்பினர்கள்.
ரவீனாவின் தந்தை இல்லை. சிறிய வயதிலிருந்து வீட்டில் முழு பொறுப்பையும் ஏற்று நடத்தியவர். ரவீனா சந்தோஷமா பேசி கலகலப்பா சிரிச்சு பேசுவாங்க, தெரியாதவங்க கிட்டயும் நல்ல பழகுவாங்க ஆனா இவங்களுக்கு அதிகமாக நண்பர்கள் கிடையாதாம்.
சின்ன வயதில் இருந்தே நடிப்பதில் அளவு கடந்த விருப்பமானவராய் இருந்தார். நடிப்பதின் மேல் கொண்ட காதலால் 2009 ஆம் ஆண்டு தங்கம் என்ற நாடகத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். சிறிய வயதில் 12 நாடகங்களில் நடித்திருக்கிறார்.
எத்தனை சீரியல் நடித்தாலும் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்த நாடகம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மௌன ராகம் தொடரில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் பெரும் வரவேற்பு பெற்றது. இதனால் மக்களிடையே தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.
பிறகு தளபதி விஜய் அவர்களோடு ஜில்லா , ராட்சசன் ஆகிய படங்களில் நடித்ததின் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரவீனா சமூக வலைத்தளங்களில் வீடியோஸ் பதிவிட்டதின் மூலம் பிரபலமடைந்திருந்தார்.
ரவீனாவிற்கு நடனமாடுவாதில் வல்லவராக திகழ்கிறார். நடனம் ஆடுவதின் மூலம் இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோஸ் நடனமாடி கொண்டிருந்தார். டான்ஸ் மாஸ்டர் மணியும், ரவீனாவும் வெளிநாடுகளுக்குச் சென்று நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்.
சமூக வலைத்தளங்களில் இருவரும் நடனமாடும் பல வீடியோக்கள் பகிர்ந்து வந்துள்ளார்கள். அதனால் அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என கிசு கிசுவும் வந்தது ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் தன் திறமைகளை வெளி கொணர வேண்டும் என்ற ஒரு நோக்கம் மட்டுமே அவர்களிடம் இருந்தது .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருக்கும் குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்றிருந்தார். எதிர்பாராத விதமாக அவர் பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
ரவீனா திடீரென மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவர் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் கார் ஒன்று வாங்கி புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்திருந்தார்.
அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மக்களிடையே பல கதாபாத்திரங்களில் நடிப்பதின் மூலம் அடுத்தடுத்து என்ன செய்வாங்க என்ற எதிர்பார்ப்புகளை கொடுத்தவங்க ரவீனா.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி இவருக்கு எதுவும் தெரியாது ஆனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன் திறமை மூலமாக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா ரவீனா. ரவீனாவின் சேட்டைகளையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.