விஷ்ணு விஜய் திரைதுறையில் எப்படி வந்தார்?
விஷ்ணு விஜய் கிறிஸ்டியன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். இவருக்கு 35 வயது ஆகிறது. படிக்கும் வயதிலிருந்து விளையாட்டு துறையில் கிரிக்கெட் வீரராக வேண்டுமென்பது அவருடைய விருப்பமாக இருந்தது. அது தவிர்க்க முடியாத காரணத்தினால் நிறுத்தப்பட்டது.
விஷ்ணு விஜய் படிப்பு விஷயத்துல கொஞ்சம் நடுத்தரமானவர். கல்லூரி படிப்பு முடிந்ததும் விஷ்ணு விஜய் இயக்குனராக வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக இருந்து. ஆனால் அதுவும் முடியவில்லை.
இவருக்கு சிறு வயதில் இருக்கும் போது நகைச்சுவை உணர்வுடன் பேசுவாராம். ஆனால் சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லாத காரணத்தால் கல்லூரி படிப்பு முடித்தவுடன் தனது தேவைக்காக வேலைக்குச் சென்று தன் பணியை தொடங்க வேண்டும் என்று நினைத்தார்.
அப்பொழுது கனா காணும் காலங்கள் சீரியலுக்கு ஆடிஷன் நடந்தது அதில் விளையாட்டாக சென்று பார்க்கலாம் என நினைத்தார். பிறகு விஜய் தொலைக்காட்சியில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. விஷ்ணு விஜய் முதல் முதலில் நடித்த கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகினார்.
பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்லூரி, ஆபீஸ் ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார். அப்பொழுது அவருக்கு நிறைய வரவேற்பு கிடைத்தது. விஷ்ணு விஜய், கார்த்தி ஆபீஸ் நாடகத்தில் நடித்ததின் மூலம் இருவரின் நட்பு தொடர்ந்து கொண்டது. தற்போதும் இருவருடைய ஒற்றுமையுடன் இருக்கின்றனர்.
கல்லூரி மாணவர்களுக்கு விருப்பமான நம்ம வீட்டுப் பிள்ளையாக வலம் வந்தார். சில நாட்கள் அடிக்காமல் இருந்த போது போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா என்ற சீரியல் கிடைத்தது. அதில் ஆயிஷாவுக்கு ஜோடியாக நடித்தார். அந்த நாடகத்தில் அவர் நகைச்சுவையாக நடித்திருப்பார்.
இத்தொடர்களில் நடித்ததின் மூலம் அமுல் பேபி எனவும் பட்டப் பெயர் வைக்கப்பட்டது. சில இடங்களில் பெண்கள் தனது அண்ணன் கூறப்பட்டார். இந்த தொடரின் மூலம் விஷ்ணுவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. விஜய் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் அங்கீகாரம் கொடுத்து கௌரவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து சில படங்கள் எல்லாம் அவர் துணை நடிகராக நடித்துள்ளார்.
தொலைக்காட்சிகளில் தொடர்களில் நடித்து வந்திருந்த நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 7 னில் போட்டியாளராக விஷ்ணு விஜய் கலந்து கொள்ளப் போகிறார் என அறிவிக்கப்படுகிறது .
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இதுவரை வந்ததில்லை. இந்த போட்டியை பற்றி எதுவும் தெரியாத நிலையில் விஷ்ணு விஜய் போட்டியில் விளையாடுவதின் மூலம் தனது திறமைகளை வெளிக் கொண்டு வந்து தனது உண்மையான முகங்களை வெளிக்காட்டுவாரா என எதிர்பார்க்கப்படுகிறது.