திருச்சி திரையரங்குகளில் லியோ படம் வெளியிட்டதின் வசூல் சாதனை விவரம்.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் லியோ படத்தின் வசூல் சாதனையை விரிவாக பார்க்கலாம். பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டு திரையிடப்பட்டது லியோ படம்.
மணி சந்திராவின் வாழ்க்கை வரலாறு
பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது லியோ.
லோகேஷ் கண்ணகராஜ் மாநாடு கைதி ஜெய்லர் விக்ரம் ஆகிய படங்களை எடுத்திருக்கிறார். இந்த படங்கள் அனைத்துமே வேற லெவல் வெற்றியை கொடுத்தது.
யுகேந்திரன் அவர்களின் வாழ்க்கை பயணம்
அதைத் தொடர்ந்து தற்போது லியோ படம் எடுத்திருக்கிறார். இவர் படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டம் இருக்கின்றனர்.
இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிக் கொண்டிருக்கின்ற படம் லியோ.
இப்படத்தில் கனவுக்கன்னி திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
ஆக்சன் கிங் அர்ஜுன் சஞ்சயத்தை அவர்கள் வில்லனாக நடித்திருக்கிறார்.
அனிருத்வின் பிரம்மாண்டமான இசையமைப்பில் பாடல்கள் வெளியாகி இருக்கிறது.
லியோ திரைப்படம் காஷ்மீரில் எடுக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமான திரை கதையுடன் சண்டை காட்சிகள் அதிகமாகவும் உள்ள திரைப்படம் ஆக இருக்கிறது.
விஜய் அவர்கள் அரசியலில் வரப்போகிறார் என அறிவித்திருந்ததால் இவரின் படம் வெளியாவதற்கு பல சிக்கல்கள் ஏற்பட்டது.
லியோ படம் பாடல் வெளியீட்டு விழாவை நடத்துவதற்கும் தடைகள் ஏற்பட்டது.
அது மட்டும் இன்றி திரையரங்குகளில் விடியற்காலை நாலு மணி காட்சிகள் திரையிடுவதற்கு பல சர்ச்சைகளும் பிரச்சனைகளும் ஏற்பட்டது.
நீதிமன்றங்களில் வாக்குவாதங்கள் ஏற்பட்டு தமிழ்நாட்டில் விடியற்காலை நாலு மணி காட்சி திரையிடக் கூடாது என அறிவிப்புகள் வந்தன.
இதனால் ரசிகர்கள் ஏமாற்றப்பட்டனர் .இருந்தாலும் விஜயின் நடிப்பிற்காக ரசிகர்கள் வெளி ஊர்களில் சென்று படத்தை பார்த்தனர்.
சர்ச்சையில் இருந்து வெளியாகி இருந்தாலும் ரசிகர்கள் அமோக வெற்றி தேடித் தந்தனர்.
லியோ படம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்திருந்தது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் அனைத்து வெளி மாநிலங்களிலும் வெற்றியைத் தேடித் தந்தது.
தமிழ்நாட்டில் திருச்சியில் லியோ படத்திற்கான வசூல் சாதனை விவரம். அதில் திருச்சியில் ஆறு நாட்களில் 84 ஷோக்கள் போடப்பட்டது. லியோ படத்தில் 18 ஸ்கிரீன்களில் திரையிடப்பட்டது.
திருச்சியில் விஜய் ரசிகர்கள் அதிகம் உள்ளார்கள் என தெரிகிறது. வசூல் சாதனை பட்டைய கிளப்பி இருக்கிறது.
திருச்சியில் முதல் நாள் வசூல் 63.9 லட்சம் வசூலிக்கப்பட்டது. லியோ படத்தில் இரண்டாம் நாள் வசூல் 47.7 லட்சம் ஆக வசூலிக்கப்பட்டது.
மூன்றாம் நாள் வசூல் சாதனை 47.7 லட்சம் வசூல் செய்யப்பட்டது. விடுமுறை நாட்கள் என்பதால் நான்காம் நாளில் 48.5 லட்சம் வசூலிக்கப்பட்டது.
ஐந்தாம் நாளில் 48.1லட்சம் வசூலிக்கப்பட்டது. திருச்சி திரையரங்குகளில் ஆறாம் நாளில் 47.6 லட்சம் வசூல் செய்யப்பட்டது.
மொத்தமாக ஆறு நாட்களில் 3.03 கோடி பிரம்மாண்டமான வசூலை திருச்சி மக்கள் தேடித் தந்தனர்.
உலக அளவிலும் சரி, மாநிலங்கள் அளவிலும் சரி, மாவட்டங்களிலும் லியோ படத்திற்கான வெற்றி மாபெரும் வெற்றியாக அமைந்திருக்கிறது.
விஜய் ரசிகர்கள் விஜய்க்கு கொடுத்த பரிசு எனவும் சொல்லலாம். அந்த அளவிற்கு வசூலில் சாதனை படைத்துள்ளது லியோ திரைப்படம்.
விஜயின் அடுத்தடுத்த படங்களின் வெளியிடு பிரச்சினைகள் இன்றி வெளிவர போகுமா இல்லை அரசியலில் மக்களின் நலனுக்காகவரப்போகிறாரா என எதிர் பார்க்கலாம்.