தமிழ் சினிமாவை 2025 ஆம் ஆண்டில் ஆளப்போகும் திரிஷா!

தமிழ் சினிமாவை 2025 ஆம் ஆண்டில் ஆளப்போகும் திரிஷா!

தமிழ் சினிமா துறையில் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் உள்ளன. குறிப்பாக கடந்த ஐந்து வருடங்களாக பல முன்னணி நடிகைகள் புதியதாக களம் இறங்கி உள்ளனர்.

புதிய நடிகைகளால் பழைய நடிகைகளின் படங்கள் தவிர்க்கப்படுகின்றன. வருடத்திற்கு 300க்கும் அதிகமான தமிழ் திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.

Trisha will rule Tamil cinema 2025
Trisha will rule Tamil cinema 2025

300 படங்களில் குறிப்பிட்ட சில திரைப்படங்களில் மட்டும் முன்னணி நடிகைகள் நடிக்கின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் படங்களில் பெரிய பட்ஜெட் படம் மற்றும் சிறிய பட்ஜெட் படம் என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு வருகிறது.

அதிலும் பெரிய ஹீரோக்கள் படம் என்றால் அதுக்கு ஒரு தனி பட்ஜெட் படமாக எடுக்கப்படுகிறது. சிறிய ஹீரோக்கள் படம் என்றால் கம்மி பட்ஜெட்டில் படம் எடுக்கப்படுகிறது.

வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களில் புதிய அறிமுக நடிகைகளை நடிக்க வைக்கின்றனர். இதற்கு காரணம் புதிய நடிகைகளின் சம்பளம் சற்றே குறைவு என்பதால்.

இந்த சூழ்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமா துறையை சில முன்னணி நடிகைகள் தன் கைவசம் வைத்துள்ளனர்.

Read more…விஜய் சேதுபதி ராஜினாமா செய்வாரா?

அதன் அடிப்படையில் நயன்தாரா மற்றும் திரிஷா இவர்கள் இன்று வரை சினிமா துறையில் பெரும் பங்கு வகித்து வருகின்றனர்.

வருடம் வருடம் பல முன்னணி நடிகைகள் வந்து செல்வது வழக்கம். அதிலும் சில நடிகைகள் ஒரு படம் அல்லது இரண்டு படம் நடித்ததற்கு பிறகு அவர்களின் மார்க்கெட் கீழ இறங்கி விடும்.

ஆனால் நயன்தாரா மற்றும் திரிஷா இவர்களின் மார்க்கெட் மட்டும் இன்றுவரை கையொங்கியுள்ளது. இதற்கு காரணம் இவர்கள் நடிக்கும் படங்களின் கதாபாத்திரமும் இவர்களின் நடிப்புத் திறமையும்.

திரிஷா 20 வருடங்களாக தொடர்ந்து தமிழ் சினிமா துறையில் தன்னுடைய ஆதிகத்தை செலுத்து வருகிறார்.

இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அன்று முதல் இன்று வரை திருஷாவுக்காக இளம் ரசிகர்கள் முதல் பெரியவர்கள் வரை வெறித்தனமான ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

திரிஷா எந்த படத்தில் நடித்தாலும் தன் தனித்திறமையை வெளிக்காட்டுவதில் பெரும்பங்கு வைக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் அதிக நடிகர்களுடன் நடித்த நடிகை என்ற பெயரும் இவரை சேரும்.

தமிழ் சினிமாவின் பெரிய பட்ஜெட் படங்களில் தொடங்கி சிறிய பட்ஜெட் படங்கள் வரை தன் திறமையை காட்டியுள்ளார். சில நடிகைகள் வருடத்திற்கு ஒரு படம் அல்லது இரண்டு படம் நடித்து வெளிவரும் ஆனால் திரிஷா வருடத்திற்கு குறைந்தது ஐந்து படமாவது நடித்து விடுவார்.

2025 திரிஷா ஆண்டு

Trisha will rule Tamil cinema 2025
Trisha will rule Tamil cinema 2025

பல நடிகைகள் நடித்த படங்கள் இன்று வரை வெளிவராமல் உள்ளது. ஆனால் திரிஷா நடித்த படங்கள் அனைத்தும் திரையிடப்படும். 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ரசிகர்கள் தங்களின் நடிகர் நடிகைகளின் படம் வெளிவரும் என்ற பெரும் எதிர்பார்ப்பு வருடம் வருடம் இருக்கும்.

அதே போல் இந்த வருடமும் யாருடைய படங்கள் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரிதும் ஏற்பட்டுள்ளது.

பெரிய நடிகர்கள் படம் வெளியாக போகும் என்ற தகவல் ஒரு பக்கம் இருக்க அந்தப் படங்களில் யார் நடிகையாக நடித்திருக்கிறார் என்ற ஏக்கம் எழுந்து வருகிறது.

குறிப்பாக 2025 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் Vidaa Muyarchi, Identity, Good Bad Ugly, Thug Life, Vishwambhara, Suriya 45  போன்ற பெரிய படங்கள் வெளியாக உள்ளது. இந்த ஆறு படங்களும் பெரிய பட்ஜெட் படங்களாக வெளிவர உள்ளது.

முக்கியமாக ஆறு படங்களும் உலக அளவில் திரையிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் மற்றும் கமல் மற்றும் சூர்யா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள்.

2025 ஆண்டில் இவர்கள் படம் வெளியாக உள்ளது. இந்த ஆறு படங்கள் திரையில் வெளிவர போகும் நிலையில் ஆறு படங்களில் யார் கதாநாயகி என்ற தகவல் வெளியாயின.

அதன் அடிப்படையில் 2025 இல் வெளிவரும் ஆறு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் திரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஆறு படங்களும் ஒரு வருடத்தில் வெளிவரும் நிலையில் அந்த ஆறு படங்களிலும் திரிஷா நடித்திருக்கிறார் என்பது பெரிய ஆட்சி இடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் இந்த ஆறு படங்களும் மிகப்பெரிய பட்ஜெட் படம் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னாடி தவிர்க்க முடியாத நடிகர்களின் படம் என்பதால்.

இதனால் 2025 ஆம் ஆண்டு திரிஷா தன் வசம் வைத்திருப்பது தெரிந்துள்ளது. அந்த ஆண்டில் அதிக படங்களை நடித்த நடிகை என்ற பெயரும் அவருக்கு வந்து சேரும் என்று மக்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள். 2025 திரிஷா ஆண்டாக இருக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top