வசமாக சிக்கிய பிரபல Youtuber இர்பான் – இர்ஃபானுக்கு தடை

பிரபல யூட்யூபர் ஆன இர்பான் தன்னுடைய குழந்தையின் பாலினத்தை பற்றி தெரிந்து கொண்டு அதை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.

What is the gender of Irfan's baby
What is the gender of Irfan’s baby

தன்னுடைய சிறுவயதில் இருந்தே மிகவும் கஷ்டப்பட்டு வாடகை வீட்டிலிருந்து வளர்ந்துள்ளார். பள்ளியில் சக மாணவ மாணவியர்கள் அவரின் உடல் எடை பற்றி கேலி கிண்டல் செய்வதால் தன்னுடைய மனதில் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டார்.

தன்னுடைய தாய் அவருக்கு சிறுவயதில் இருந்தே ஒழுக்கத்தை பற்றி கூறி வளர்த்துள்ளார். இதனால் அவர் தன்னுடை பள்ளிக்கு சரியான நேரத்தில் செல்வதும் ஒழுக்கமுடன் பள்ளியில் நடந்து கொள்வதும் இதனால் அனைவராலும் பாராட்டை பெற்ற இர்ஃபான் தன்னுடைய மேல் படிப்புகளை தொடர்வதற்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பினை பெற்று தன்னுடைய மேல் படிப்பினை அமெரிக்காவில் முடித்துவிட்டு இந்தியாவில் மீண்டும் வந்து தன்னுடைய படிப்புகளை தொடர்ந்து கொண்டிருந்தரர்.

சாப்பாடு கிடைக்குமா என்ற பயத்தில் இரண்டாம் நாள் பயணம் Ladakh

இர்ஃபான் அவரது ஆசையால் சமூக வலைத்தளத்தில் வரவேண்டும் என்று நினைத்து புதிதாக இஎம்ஐ மூலமாக போன் வாங்கி தனக்கென்று யூட்யூபில் ஒரு சேனலை உருவாக்கி அதில் திரைப்படங்களைப் பற்றி கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

இதனை தெரிந்து கொண்ட சக மாணவ மாணவியர்கள் அவரை மேலும் கேலி கிண்டல் செய்துள்ளனர். அதை சிறிதும் பொருட்படுத்தாத இருப்பான் தன்னுடைய ஒழுக்கத்தினால் தினமும் தவறாமல் வீடியோக்களை தன்னுடைய சப்ஸ்கிரைபர்ஸ் காக பதிவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து இவர் உணவுகளை சுவைத்து அதன் கருத்துக்களை வெளியிடுவதை பலரால் பாராட்டப்பட்டு பெரிதளவில் பேசப்பட்டு வந்தார்.

youtube சப்ஸ்க்ரைபர்களை சம்பாதித்து தனக்கு பிடித்த கார் வீடு என்று அவருக்குப் பிடித்த அனைத்தையும் செய்து கொண்டார்.

இதனால் அனைவருக்கும் தெரிய வந்த இர்பான் பிரபல நடிகர் நெப்போலியன் அவர்களின் அமெரிக்காவில் இருக்கும் வீட்டுக்கு சென்று அவரது வாழ்வியலை பற்றி வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.

பிரபல தொழிலதிபரான சிட் அவரின் வாழ்வியலை பற்றியும் அவரின் வளர்ச்சிகளைப் பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இர்பானுக்கு திருமணம் நடந்து சில மாதங்களே ஆன நிலையில் தனது மனைவி கருவுற்றுள்ளார்.

இதனை தெரிந்து கொள்வதற்காக துபாய்க்கு சென்று தன்னுடைய மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை பற்றி தெரிந்து கொண்டு இந்தியாவிற்கு வந்து குழந்தையின் பாலினத்தை யூடியூபில் வெளியிட்டதால் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.

இந்தியாவில் குழந்தை பிறப்பதற்கு முன் அதன் பாலினத்தை தெரிந்து கொள்வது தடை. இன்றும் நடைமுறையில் உள்ளது இதைப் பற்றி தெரியாமல் இர்ஃபான் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதைக் கண்டித்து சுகாதாரத் துறையில் இருந்து இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதை பற்றி தெரியாததால் இர்ஃபான் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். What is the gender of Irfan’s baby

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top