இயக்குனர் அட்லீ விஜய்யுடன் தொடர்ந்து 100 கோடி மேல் வசூல் செய்து இருக்கிறாரா?
Director Atlee continues to collect more than 100 crores with Vijay? |
இயக்குனர் அட்லி படம் என்றாலே அந்த படத்தில் காதல் காட்சிகள், சண்டை காட்சிகள், காமெடி கலந்த நகைச்சுவை காட்சிகள் என பல வகை சிறப்பம்சங்கள் கொண்ட திரைப்படமாகவே இருக்கும். இயக்குனர் அட்லி ராஜா ராணி படம் தொடங்கி பிகில் படம் வரை அவர் இயக்கிய படங்கள் எல்லாமே மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனையில் பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றுள்ளது.
அட்லி படம் என்றாலே சுவாரிசமான திரைக்கதை இருக்கும் என்று ரசிகர்களிலேயே மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பு. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து இயக்கி இருப்பார். மேலும் படிக்க…
அந்த வரிசையில் ராஜா ராணி படம் மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக அந்த படத்தில் காதல் காட்சிகள் அனைத்தும் மிகவும் தத்துவமாக எடுக்கப்பட்டிருக்கும். இதனாலேயே அந்த படம் சுமார் 84 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தினால் இயக்குனர் அட்டைக்கு நல்ல ஒரு பெயரை பெற்றுதந்தது. இந்த படம் முதல் படம் தான் ஆனால் முதல் படமே பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக இளைய தளபதி விஜய் அவர்களை வைத்து தெறி படத்தை இயக்குனர் அட்லீ இயக்கியிருந்தார். இந்த படம் ஒரு ஆக்சன் கலந்த படமாக இருந்தது. தளபதி என்றாலே காதல் காட்சிகளுக்கும், சண்டைக் காட்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது என்று சொல்லலாம். மேலும் படிக்க…
அதை சிறிதும் குறை வைக்காமல் இயக்குனர் அட்லி பூர்த்தி செய்துள்ளார். இந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வசூல் 150 கோடி வசூலை செய்து மாபெரும் வெற்றி படமாக அமைத்தது.
இளைய தளபதி விஜய் வைத்து மறுபடியும் ஒரு படத்தை இயக்கினார் அட்லி. அந்த தான் படம் மெர்சல். இந்த படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக வெளிவந்தது. இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரமாக நடித்திருப்பார். அட்லியின் சென்டிமென்ட் காட்சிகள் மிகவும் அற்புதமாக அமைந்திருக்கும். அதனாலேயே மெர்சல் படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் சுமார் 250 கோடி வசூலை செய்து மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது. மேலும் படிக்க…
|
பல வெற்றி படங்களை தொடர்ச்சியாக கொடுத்து பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்து எல்லா தரப்பு ரசிகர்களையும் தன் வாசம் ஆக்கிக் கொண்டவர் தான் அட்லீ. இந்தநிலையில் அடுத்தப்படமும் இளைய தளபதி விஜய் உடன் பயணத்தை தொடங்கினார்.
விஜய் படம் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போல் இருக்கும். அதே போல் அட்லி இளைய தளபதி விஜய் இருவரின் காம்போ படம் என்றால் டபுள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமைந்துள்ளது. அப்படி அமைந்த திரைப்படம் தான் பிகில் திரைப்படம்.
இந்த திரைப்படம் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விளையாட்டு துறைக்கு பெண்கள் மிகவும் பின்தங்கி இருக்கின்றனர். அதனால் விளையாட்டு துறையிலும் பெண்கள் சிறந்து விளங்க வேண்டும் என்ற மையக்கருத்தை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. இந்த படமும் சுமார் 300 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றி திரைப்படமாக இயக்குனர் அட்லிக்கு அமைந்தது.
அட்லீ எடுக்கும் அனைத்து திரைப்படமும் நல்ல கலெக்ஷன்களை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பெற்றது. இயக்குனர் அட்லி படத்தை எடுத்தாலே அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்று விடும் என்று அர்த்தமாகிவிட்டது. அந்த அளவிற்கு இவர் எடுக்கும் அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
இளம் இயக்குனர் ஆகிய இவர் சில படங்களிலேயே அதுவும் சினிமா துறைக்கு வந்த குறுகிய நாட்களிலேயே 100 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பெற்றுள்ள படங்களாக இவருடைய படங்கள் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களில் அட்லி படங்களுக்கு மாபெரும் எதிர்பார்ப்பு படமாக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து.