மாற்றமும் இல்லை மகிழ்ச்சியும் இல்லை விதி வரைந்த பாதையில் என் வாழ்க்கை பயணம்💙.
என் வலிகளுக்கும் கண்ணீருக்கும் நானும் என் எதிர்பார்ப்புகளும் மட்டுமே காரணம்💙.
வாழ வேண்டும் என்ற ஆசையே வரமாட்டேன் என்கின்றது சில வரம்புகள் மிக்க வார்த்தைகளால்💙.
நீ அழும்போது உனக்கு ஆறுதல் சொல்வது நீ நேசித்த ஒருவராக இருக்க மாட்டார்கள் உன்னை நேசித்த ஒருவராக மட்டுமே இருப்பார்💙.
இரு கண்களும் கண்டு இரு இதயங்களும் இணைந்து ஊழல் தொடங்கி தேடல் அடங்கியும் தொடர்கிறது நம் காதல்💙.
சண்டை போட்டு சற்று நேரத்திலேயே சரணடைவது உன்னிடத்தில் மட்டும்தான் என் வாழ்நாள் முழுவதும்💙.
இந்த உலகத்தில் அனைவரும் ஏதோ ஒரு உறவுக்காக அடிமையாக தான் உள்ளார்கள் நானும் அடிமைதான் என்னவளின் அன்பிற்காக💙.
நீ உச்சரித்த பின்பு தான் தெரிகிறது என் பெயர் இவ்வளவு அழகு என்று💙.
மறக்க நினைக்கிறேன் உன்னை அல்ல உன்னிடம் பேசாமல் தொலைத்த அந்த நாட்களை💙.
உன் உதடுகள் பேச துடிக்கும் வார்த்தைகளை என் விழிகள் புரிந்து கொள்ளும் அதன் உறவே காதல் என்பது💙.
எனக்கு கவிதை எழுத தெரியாது ஆனால் உன் பெயரை எழுதும் பொழுது நானே என்னை கவிஞ்சனாக உணர்கிறேன் இப்படிக்கு நான் நீ💙.
பொய்யான உள்ளங்களை விட உன்னோடு உரிமையோடு சண்டை போடும் உறவை நேசி அதுவே உண்மையான அன்பு💙.
உண்மையான அன்பில் தான் அதிகம் கோபங்களும் கட்டுப்பாடுகளும் இருக்கும் இதை புரிந்து கொண்டவர்களை விட பிரிந்தவர்களே அதிகம்💙.
நீ எப்படி வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறாயோ அப்படியே வாழு யாருக்காகவும் இறங்கி போகாதே, உன்னை மாற்றிக் கொள்ளாதே நிமிர்ந்துநில் நேர்கொண்ட பார்வையோடு💙.
ஒருத்தரை ஏன் பிடிக்கவில்லை என்று யோசித்தால் நிறைய காரணங்கள் இருக்கும் ஆனால் ஒருத்தரை ஏன் பிடிக்கும் என்று யோசித்தால் மட்டும் காரணம் கிடைப்பதில்லை அந்த காரணம் இல்லாத ஒன்றுதான் நான் நீ💙.
நீ என்பதன் பொருளே நான் தான் நான் என்பதன் அர்த்தம் நீ மட்டும் தான் நம் இருவருக்கும் அர்த்தமுள்ள இலக்கணமாய் திகழ்வதுதான் நம் அன்பின் நான் நீ💙.
உண்மையான உறவுகள் என நம்பியவர்கள் சில சமயம் வேஷம் போடுவதால் உண்மையான அன்பும் உண்மையாகி போகிறது உங்களை நம்பியவர்களை ஒருபோதும் காயப்படுத்தாதீர்கள் அதன் வழியை போக்க எப்போதும் வலி இருக்காது💙.
தந்தைகளுக்கும் கடவுளுக்கும் சில வித்தியாசம் தான் எப்பொழுதும் கண்ணுக்கு தெரியாதவன் கடவுள் இருக்கும் வரை தெரியாதவர் தான் நம் தந்தை💙.
ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட இருந்தாலும் அன்னையே உன் போன்று அன்பு செய்ய யாரும் இல்லை💙.
ஏமாந்து போவதற்கு முட்டாளாக இருக்க வேண்டும் இல்லை அன்பிற்கு ஏங்கியவராக இருந்தாலே போதும்💙.
அப்பாவின் அன்பு 💙
தன் வறுமை தெரிந்தும் தன் முதல் குழந்தையின் தனிமை தெரியாமல் இருக்க இன்னொரு குழந்தை.
தன் இயலாமை தெரிந்தும் தன் குழந்தைகளின் ஆசைக்காக தனியார் பள்ளி வாகனங்களில் தன் குழந்தைகளும்.
தன் கையிருப்பு தெரிந்தும் தன் மகன்களோ தனியார் கல்லூரிகளில் தன் சொத்துக்களோ பாத்திரமாய் வங்கிகளில்.
தன் மகனின் திருமணத்திற்காய் வங்கிகளில் இருந்த பத்திரமெல்லாம் தன் மகனின் திருமண பத்திரிக்கையாய் அடுத்தவரின் கையில் சொத்துக்களாய்.
தன் மகனும் மருமகளும் சந்தோஷத்தில் குளிர்ச்சியான அறையில் இருக்க தானும் தன் மனைவியும் முதியோர் இல்லத்தில்💙.
ஓர் நாள் உன் ஞாபகங்களை கூட மறந்து விடுவேன் நான் ஆனால் ஒரு பொழுதும் உன்னை மறக்காத என் இதயம்💙.
தேடிப் போகும் அன்பை விட தேடி வரும் அன்பை நேசி அழகாக இல்லாமல் வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் ஆழமான அன்பு இருக்கும்💙.
உன்னை நேசிப்பவர்களுக்கு என்ன பரிசு வேண்டுமானாலும் கொடு. ஆனால் ஒருபோதும் தனிமையும் கண்ணீரையும் மட்டும் கொடுத்து விடாதே இப்படிக்கு காதல்💙.
சிலர் அன்பு வார்த்தைகளால் உணர்த்தலாம் சிலர் அன்பு உணர்வுகளால் உணர்த்தலாம் சிலர் அன்பு புரியாது அது காலம் உணர்த்தும் பொழுது கண்கள் கலங்கும்💙.
அன்பு இல்லாத இடத்தில் மரியாதை இருக்காது மரியாதை இல்லாத இடத்தில் அன்பு இருக்கவே இருக்காது💙.
உன் பாதையில் வேகத்தடை இருக்கலாம் ஆனால் உன் லட்சியத்தில் ஒரு பொழுதும் மனதடை இருக்கக் கூடாது💙.
உனக்கானவை என்றும் உன்னை விட்டு விலங்காது அப்படி வழங்கினால் அது என்றும் உனக்கானதாக இருக்க முடியாது💙.
அவளை தொட்டு தடவி உரசி காமம் கண்டு தான் உன் காதல் முழுமை அடையும் என்றால் தேவையில்லை அந்த காதலை நீயே எரித்து விடு💙.
காதல் கிடைக்குமா என்பதில் பிரச்சனை இல்லை அதில் அன்பு நிலைக்குமா என்பது தான் பிரச்சனை💙.
Top 20 Love Inspiring Tamil Poems