பயணத்தின் 15 வது நாள் மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. நேற்று இரவு ஒரு தாபாவில் தூங்கி இருந்தோம். ஆனால் எழுந்ததோ ஏழு மணி அளவில் நல்ல உறக்கம்.
எழுந்த பின்பு அனைத்து பொருட்களையும் சரி செய்து தயாராகிவிட்டு அங்கேயே சாப்பிட ஆரம்பித்தோம். 8:30 மணி அளவில் காலை உணவு தொடங்கியது.
ஆலு பரோட்டா என்று சொன்னார்கள் காலை உணவு இருக்கின்றதே என்று எவ்வளவு ரூபாய் என்று கேட்டோம். ஒன்று 18 ரூபாய் என்று சொன்னார்கள்.
அதனால் 4 ஆர்டர் செய்தோம் ஆனால் சாப்பிட்டுவிட்டு போய் பணம் செலுத்தும் போது ஒரு ஆலு பரோட்டா 80 ரூபாய் என்று சொல்கிறார்கள்.
வேறு வழி இல்லாமல் 360 ரூபாய் காலை உணவாக செலுத்தி விட்டு 9:30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பயணம் தொடர்ந்தது.
மறுபடியும் காட்டுப்பகுதியில் பயணம் தொடங்கியது. சாலையோ மிகவும் மேடாக இருந்தது. அதனால் கஷ்டப்பட்டு பயணம் செய்தோம்.
மதிய உணவு நேரம் வந்துவிட்டது. ஆனால் எங்களுக்கோ சிறிய உணவு கடை கிடைக்கவில்லை.
வேறு வழி இன்றி பழக்கடையில் சென்று அங்கிருந்த பழங்களை 50 ரூபாய்க்கு வாங்கி அவற்றை மரத்தடியில் கண்டு உன்றோம்.
அதன் பின்பு பயணம் தொடங்கியது நாலு முப்பது மணி அளவில் ஒரு கிராமத்தில் வந்து சேர்ந்தோம்
அங்கே இருந்த சிறிய கடையில் பஜ்ஜி நெய் சாப்பிட்டு விட்டு அருகில் காவல் நிலையம் இருந்தது. அங்கு சென்று எங்களை பற்றி கூறி தங்குவதற்கு இடம் கேட்டோம்.
பக்கத்தில் இருந்த கோவிலில் தங்கிக் கொள்ளுங்கள் ஒரு பிரச்சனை வராது என்று கூறினார்கள். அதன் பின்பு அங்க போய் தங்கினோம்.
காவல் நிலையத்தில் கேட்கும் போது ஊர் பொதுமக்களும் இருந்தார்கள் அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.
Top 10 Best Tamil Kavithaigal 2024
பின்பு கோவிலில் சென்ற பொழுது நன்றாக கவனித்தார்கள் எங்களுக்கு தங்குவதற்கு மெத்தைகளை அமைத்துக் கொடுத்தனர். இரவு உணவு இங்கேயே வரும் என்று கூறினார்கள் தண்ணீர் வசதியும் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.
எங்களுடன் சேர்ந்து மூவர் பின்னர் வந்து தங்கினார்கள். அவர்கள் யார் என்று பார்த்தீர்கள் என்றால் யாத்திரைக்கு செல்பவர்கள்.
கோவில் யாத்திரைக்கு நடைப்பயணம் செல்பவர்கள் ராமர் கோயிலுக்கு. அதில் இரண்டு பெரியவர்கள் நடந்து கொண்டே செல்கிறார்கள்.
அவர்களுடைய துணிப்பைகளை இன்னொரு இளைஞர் பைக் எனில் எடுத்துக்கொண்டு பின்தொடர்கிறார். அதன் பின் அவர்களிடமும் பேசிவிட்டு இரவு சாப்பிடுவதற்கு உணவும் வந்தது.
அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் உரையாடிவிட்டு உறங்க ஆரம்பித்தோம். 360 Rupees Breakfast Ladakh Journey Day 15
ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். அங்கு சென்று எங்களை பற்றி கூறி தங்குவதற்கு இடம் கேட்டோம்.
360 Rupees Breakfast Ladakh Journey Day 15
Distance: 75
Food cost: 250
Night stay : temple stay