Beware very dangerous place பயணத்தின் 32 வது நாள் ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி ஞாயிற்றுக்கிழமை. நேற்று இரவு 5 மணி அளவில் எழுந்து ஆறு மணி அளவில் புறப்படலாம் என்ற திட்டமிட்டு தூங்கி இருந்தோம்.
ஆனால் விழித்ததோ ஐந்து முப்பது அதனால் சிறிது காலதாமதம் ஆகிவிட்டது. ஆறு முப்பது மணி அளவில் பயணம் அங்கிருந்து தொடர்ந்தது அனைவரிடமும் கூறிவிட்டு விடை பெற்றோம்.
தங்க கோவிலை நோக்கி பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது. 10 மணி அளவில் உணவு கடையை பார்த்து நிறுத்தினோம். பரோட்டா ரொட்டி என 80 ரூபாய்க்கு காலை உணவு முடிந்தது 45 கிலோமீட்டர் ஐ கடந்து வந்திருக்கிறோம்.
சாப்பிட்டு விட்டு பதினொரு மணி அளவில் பயணம் மறுபடியும் தொடர்ந்தது. வெயிலின் தாக்கமும் இப்பொழுது தான் சிறிது சிறிதாக ஏறுகிறது காலநிலையோ நன்றாக இருக்கிறது.
12:30 மணியளவில் 70 அல்லது 75 கிலோமீட்டர் முடித்து இருப்போம் பத்து கிலோமீட்டர் க்கு ஒரு டிராக்டர் வண்டி உதவியாக இருந்தது.
மூணு மணி அளவில் பாலத்திற்கு அடியில் உள்ள சிறு பானி பூரி கடைகளில் மதிய உணவு சாப்பிட ஆரம்பித்தோம். விரைந்து கடைகளில் சாப்பிட்டோம்.
ஒன்று பாணி பூரி இன்னொன்று பண்ணு என்று பாணி பூரி கடையில் இருந்த ஒரு இளைஞர் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவராம். அவர் இங்கு சிறிய கடை வைத்து பொழப்பை ஓட்டுகிறாராம்.
அன்பாக பேசினார் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இறுதியில் எங்களிடம் பைசா ஏதும் வாங்காமல் பரவால்ல சென்று வாருங்கள் சென்று விட்டார்.
எவ்வளவு வற்புறுத்தியும் பைசா வேண்டாம் பத்திரமாக போகுங்கள். இது மிகவும் ஆபத்தான இடம் ஜாக்கிரதையாக போயிட்டு வாருங்கள் என்றான்.
இப்பொழுது 107 கிலோ மீட்டரை கடந்து விட்டாச்சு. ஆனால் நேரம் இன்னும் இருக்கவோ பயணத்தை தொடர்ந்தோம்.
அவனிடம் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு இரவு நேரங்களிலும் பயணம் நீடித்தது.
ஒருவழியாக 152 கிலோ மீட்டரில் பயணம் முடிந்தது. பெட்ரோல் பங்க் இடம் வாங்குவதற்கு இடம் கேட்டு அனுமதி கிடைத்துவிட்டது.
அன்று இரவு அருகில் எந்த ஒரு கடையும் இல்லை. பெரிய கடையான தாபா மட்டுமே இருந்தது. ஆனால் அங்கு சென்று ஒரே ஒரு பிஸ்கட் பாக்கெட் மட்டும் வாங்கிக் கொண்டு வந்து விட்டோம். சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்டோம்.
Place: panjab
Distance: 152
Food cost: 110
Stay: petrol pump