பெரிய மனசு உடையவர்கள் உதவி Leh Ladakh Cycle Ride Day 25

Big-hearted people help பயணத்தின் 25 ஆம் நாள் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி செவ்வாய்க்கிழமை.

Big-hearted people help Leh Ladakh Cycle Ride Day 25
Big-hearted people help Leh Ladakh Cycle Ride Day 25

நேற்று இரவு தூங்கிய பெட்ரோல் பங்கில் இருந்து காலை 6:00 மணி அளவில் விழித்து உடனடியாக தயாராகி பயணம் தொடர்ந்தது.

இரவு நேரங்களில் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருந்தது அந்தப் பகுதியில் காலையில் சீக்கிரமாக பயணம் ஆரம்பித்தது.

வெயிலோ குறைவு பணியோ சிறிது பெய்து கொண்டு மிகவும் அருமையாக இருந்தது பயணம் செய்வதற்கு.

டெல்லியின் உள் சென்று போவதா அல்லது டெல்லிக்கு போகாமல் ஹைவேஸ்லையே அரியநாக்கு போவதாய் என்று குழப்பத்துடன் போய்க்கொண்டே இருந்தோம்.

40 கிலோமீட்டர் முடிவெடுத்த ஆக வேண்டும். டெல்லிக்கு உள் போவதா இல்லை நெடுஞ்சாலையிலேயே பயணம் செய்வதாக என்று.

மணி ஒன்பது ஆகியும் சாப்பிடாமல் மிதித்து கொண்டே இருந்தோம். உணவு கடையை தேடி ஒரு வழியாக 10 மணி ஆவதற்குள் காலை உணவு சாப்பிட்டு முடித்து விட்டாச்சு முப்பது ரூபாய் பூரி.

நீண்ட தூர பயணத்தின் பிறகு சாலையோரம் வாழைப்பழம் வித்து கொண்டு இருந்தார்கள். அதை மூன்று வாங்கி சாப்பிட ஆரம்பித்தோம் ஒரு மணி அளவில்.

சாப்பிட்டுவிட்டு பயணம் தொடங்கியது. ஆனால் அரை மணி நேரம் கூட ஆகவில்லை ஒரு பெரிய பாலத்திற்கு அடியில் சிறு கடைகள் இருந்தன.

மணியோ ஒன்னு 30 சரி இங்கு மதிய உணவை முடித்துக் கொள்ளலாம் என்று சாப்பிட்டோம் 40 ரூபாய் ஆகிவிட்டது.

Decathlon

அதன்பின் இரண்டு மணி அளவில் பயணம் தொடங்கியது. இதுவரையிலும் 68 கிலோ மீட்டரை கடந்து இருக்கிறோம் இன்றைய நாளில்.

ஹாய் சார் அவர் கூட ஆகல இப்ப ரெண்டு முப்பது தான் டைம் ஆகுது. அதுக்குள்ளவே ஒரு ஸ்டாப் அடிச்சாச்சு எதனால பாத்தீங்கன்னா லட்டு கட ஒன்னு பார்த்தோம் போல இருந்துச்சு.

அதுக்காக போய் வாங்கி சாப்பிட்டோம். ரெண்டு தான் வாங்கணும் எவ்ளோன்னு கேட்டா பத்து ரூபாய் சொல்லிட்டாரு.

மேலும் ரெண்டு வாங்கி 20 ரூபாய்க்கு நாலு லட்டு வேற லெவல் டேஸ்ட் அவங்களோட பட்ஜெட்டுக்கு ஏற்றது போல இருக்கு.

சாப்பிட்டு பயணம் மறுபடியும் தொடர்ந்து இருக்குது. பாப்பொம், எங்க போய் அடுத்த ஸ்டாப் அடிக்கிறோம்ன்டு.

லட்டு சாப்பிட்டதும் வைரம் நிரம்பி விட்டது. வெகு தூரம் பயணித்தோம் ஒரு பெரிய நகரத்திற்குள் புகுந்து அங்குள்ள சாலை நெரிசல்களை கடந்து ஒரு வழியாக Decathlon வந்து அடைந்தோம்.

Decathlon இல் உள்ளே சென்று sleeping bag ஒன்றே ஒன்று வாங்கிக் கொண்டு மூணாயிரம் ரூபாய் அழுது கொண்டே பணத்தையும் செலுத்தி விட்டு அங்கிருந்து மறுபடியும் சாலை இடுக்குகளில் பயணம் தொடங்கியது.

நகரத்திற்குள் வருவது மிகவும் கடினமாக இருந்தது. வாகனங்களோ அதிகம் குறுகிய நெரிசல் நிறைந்த பாதைகள் google மேப்பை நம்பி முட்டு சந்தையில் போய் நின்றோம்.

சைக்கிளை காக தூக்கிக்கொண்டு ஒரு பாலத்தின் மேலே ஏற்றி இறக்கி பயணம் தொடங்கியது.

மணியோ ஐந்து ஆனது தூங்குவதற்காக இடம் கேட்டு மூன்று பெட்ரோல் பங்குகள் ஏறி இறங்கினோம்.

Petrol Pump

நகர்ப்புறங்களில் உள்ளதால் அவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுங்கள் இரவு நேரத்தில் படுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். ஆனால் அவர்கள் டென்த் போடுவதற்கு இடம் காமித்த இடம் சரியில்லை.

அதாவது வாகனங்கள் வரும் வழியிலேயே எங்களை கூடாரம் அமைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அது எங்களுக்கு ஆபத்தாக விளங்கியது.

அதனால் இரண்டு பெட்ரோல் பங்கேயிலும் தவிர்த்துவிட்டு மூன்றாவது ஆக இந்தியன் பெட்ரோல் பங்க் ஒன்றை கண்டுபிடித்து அங்கு சென்று கேட்க முடிவெடுத்து சாலையை கடக்க காத்திருந்தோம்.

அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் எங்களை வீடியோ எடுத்து எங்கு செல்கிறீர்கள் எங்கே இருந்து வருகிறீர்கள் என்று கேட்டுக் கொண்டே அனைத்தையும் ரெக்கார்ட் பண்ணிக் கொண்டிருந்தார்.

நின்று அவரிடமும் ஐந்து நிமிடம் அன்பாக பேசிக்கொண்டிருந்தோம். அவரும் எங்களிடம் உங்களுக்கு என்ன வேண்டும். சாப்பாடு வாங்கி தரட்டுமா என்ன ஏது என்று விசாரித்தார். எதுவும் வேண்டாம் என்று கூறியும் அவர் ஏற்றுக் கொள்ள வில்லை.

அதன் பிறகு petrol pump உள்ளே வந்தோம். பாங்கோ மிகப்பெரியது கேட்டவுடன் ஒத்துக்கொன்றார். மிகவும் சந்தோசம் சிறிது நேரம் அங்கே இருந்து விட்டு மொபைலை பார்த்துக் கொண்டிருந்தோம்.

நீங்கள் என்ன சாதி என்று கேட்டுவிட்டார் Ladakh Cycle Trip Day 24

மொபைலில் வரும் மெசேஜ் வீட்டில் இருந்து ஸ்வேதா ஒரு நோட்டீசை அனுப்பி இருந்தால். ஆனால் அது யார் என்று என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

அவர்களிடமும் அனுப்பி அவர்களிடமும் கேட்டேன் அவர்களுக்கும் தெரியவில்லை. உன்னுடைய நண்பர்கள் வந்து வைத்தார்கள் என்று அவர் கூறிவிட்டால்.

ஆனால் மாப்பிள்ளை பேரோ அல்லது மணமகள் தெரு இரண்டும் எனக்கு யார் என்று தெரியவில்லை. வைத்தவர்களும் யார் என்று புரியவில்லை குழப்பத்துடன் முற்றுப்புள்ளி ஆகவே இருந்தது.

அதை தொடர்ந்து சாப்பிடுவதற்கு ஒரு கடையை தேர்வு செய்த அங்கு போய் சாப்பிட ஆர்டர் செய்தால் எங்களை பற்றி விசாரித்துவிட்டு இவ்வளவு கொடுத்தால் போதும் என்று ஒரு தொகை சொல்லி பரிமாறினார்கள்.

நாங்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அவர்களும் கடையினை மூடிக்கொண்டு இருந்தார்கள்.

பின்பு சாப்பிட்டு முடித்துவிட்டு பணம் செலுத்த தயாரானால் அவர்கள் பணம் எல்லாம் தேவையில்லை. பயணத்தை நல்லபடியாக முடியுங்கள் அது போதும் என்று பாசத்துடன் பேசினார்கள்.

மிகவும் பெரிய மனசு உடையவர்கள் உதவி அவர்களிடம் ஐந்து நிமிடம் உட்கார்ந்த ிருது நேரம் பேசிவிட்டு அவர்களுடன் புகைப்படம் எடுத்துவிட்டு அவர்களிடம் உங்கள் பெட்ரோல் பங்கில் போய் இரவு தூங்க தரவு கேட்டு இருக்கிறோம்.

அதனால் அங்கேயே சென்று தங்கிக் கொள்கிறோம் என்று கூறிவிட்டு அவர்களிடத்தில் இருந்து விடை பெற்றோம்.

பின்பு பெட்ரோல் பங்கில் வந்து கூடாரம் அமைத்து அனைத்து துணிகளையும் அலசி காய வைத்து விட்டு, முகம் கழுவி, பல் தேய்த்து விட்டு, அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு , அடுத்து உறங்கினோம் புது sleeping bag இல்.

Distance: 130
Food cost:
Night stay: petrol pump

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top