சாப்பாடு கிடைக்குமா என்ற பயத்தில் இரண்டாம் நாள் பயணம் Ladakh

இன்று இரண்டாம் நாள் மார்ச் மாதம் 11-ம் தேதி திங்கட்கிழமை புத்தூர் நகரத்தில் ஒரு பெட்ரோல் பங்கில் கிடைத்த நல்ல மனிதர்களிடமிருந்து விடை பெற்று இன்றைய நாள் தொடங்கியது.

Ladakh 2024 Cycle Ride Day 2 Andhra
Ladakh 2024 Cycle Ride Day 2 Andhra

காலையில் சீக்கிரம் ஆகவே பயணம் தொடங்கியது காலை உணவு உண்பதற்கு முன்பாகவே பல தூரம் கடந்து வந்தோம்.

காலை உணவு ஒரு சிறிய வயதானவர்கள் நடத்தி வந்த கடையில் ஒன்றும் அதன் பிறகு ஒரு மார்க்கெட் பகுதியில் நமது நாட்டு தேசிய கொடியை வாங்கினோம்.

நம் நாட்டு கொடியை மிதிவண்டியில் கற்றுக்கொண்டு பயணிக்கும் பொழுது அப்படி ஒரு உற்சாகம் கொடுத்தது வரவேற்பும் கொடுத்தது இரண்டாம் நாளும் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது.

நாங்கள் சென்று கொண்டிருந்தது வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அதனால் அங்கு அதிகமாக கடைகளும் கிடையாது வீடுகளும் கிடையாது சுற்றி மரங்களும் விலங்குகளும் மட்டுமே இருந்தன.

எங்களுக்கோ வெயிலில் மிதிவண்டியை ஓட்டி வந்ததால் மிகவும் உடம்பு சோர்வற்றது மதிய சாப்பாட்டின் நேரமும் கடந்தது ஆனால் நாங்கள் போகும் வழியில் ஒரு உணவகமும் இல்லை.

அதே போல் சாலையும் சமமாக இல்லை மேடு பள்ளமாக இருந்தது ஏற்றத்திலும் இறுக்கத்திலும் போற்றிக் கொண்டு இருந்தோம் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வழியாக சிறிய பொட்டி கடை ஒற்றை பார்த்தோம் அதை சிற்றுண்டிகள் மட்டுமே இருந்தது வேறு வழி இல்லாமல் அவைகளையும் நன்றாக சாப்பிட்டுவிட்டு அங்கே சிறிது நேரம் ஓய்வெடுத்தோம் பின்பு பயணத்தை தொடங்கினான்.

நான் பிறந்த மண்ணிற்க்கு பெருமை சேர்க்கபோகிறேன்! LADAKH 2024

முதல் நாள் இரவு குளிக்காததினால் இன்று எப்படியாவது குளித்து விட வேண்டும் என்று ஏரிகளை தேடினோம்.

நாலு மணி அளவில் ஒரு ஏரியை கண்டுபிடித்தோம் ஏரியின் குளிப்பதற்கு முன் அருகில் உள்ள கோவிலில் விசாரித்தோம் இரவு தங்குவதற்கு அவர்கள் கோவிலை நாங்கள் ஏழு மணிக்கு பூட்டி விடுவோம் நீங்கள் வேண்டுமானால் கோவிலுக்கு வெளிப்புறத்தில் உள்ள வராண்டாவில் படுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.

Which is the biggest serial in Telugu?

இரவு தூங்கவும் அருகிலேயே இடம் கிடைத்துவிட்ட சந்தோசத்தில் நாங்கள் அந்த ஏரி நோக்கி சென்றோம் துணிகளை துவைத்துக் கொண்டு குளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறுவதற்குல் இருட்டிவிட்டது பயத்துடன் அந்த பகுதியில் இருந்து வெளியேறினோம்.

சுற்றி நடுத்தர கடைகள் ஏதும் இல்லை தாபாக்கள் மட்டுமே இருந்தது வேறு வழி இல்லாமல் அங்கு சென்று சாப்பிட்டோம் அங்கெல்லாம் விலைகள் அதிகம் ரொட்டி மட்டுமே சாப்பிட்டுவிட்டு அந்தக் கோவிலுக்கு வெளியில் உள்ள வராண்டாவில் கூடாரம் அமைத்து தூங்கினோம் பயத்துடன். Ladakh 2024 Cycle Ride Day 2 Andhra

ஆனால் நாங்கள் பயந்த அளவிற்கு எதுவும் தெரியவில்லை நன்றாகவே தூங்கினோம்.

Distance: 100
Food cost: 170
Night stay: temple

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top