லாரியை பிடித்துக் கொண்டு Ladakh Cycle Ride Day 10

பயணத்தின் 10 நாள் மார்ச் மாதம் 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலையிலே எழுந்து 6:00 மணி அளவில் ஐதராபாத்தில் இருந்து பயணம் தொடங்கியது.

காலை உணவு உண்டதற்குள் 40 கிலோமீட்டர் கடந்து விட்டோம். காலை உணவாக தள்ளுவண்டி கடையில் நாளைக்கு ஒரு வடை சாப்பிட்டோம் பின்னர் பயணம் தொடங்கியது.

டோல்கேட் இந்த வரிசையில் வாகனங்கள் என்று கொண்டு இருந்தன அதனால் நாங்கள் புரிந்து பூந்து செல்வதற்கு ஈஸியாகவும் ஜாலியாகவும் இருந்தது அதனால் சிறு செருப்பாக பயணித்தோம்.

பல லாரியை பிடித்துக் கொண்டு அவ்வளவு தூரங்களை கடந்தோம் 12 மணி ஆவதற்குள் 80 கிலோமீட்டர்களை கடந்து விட்டோம்.

அதன் பிறகு மதிய உணவு உண்பதற்கு உணவு கடையை தேடி அலைந்ததில் 30 கிலோமீட்டர் பயணித்தோம். அதன் பின்னர் ஒரு பஜ்ஜி கடையினை கண்டுபிடித்து அதை நீனுள் சென்று சாப்பிட்டோம்.

அங்கே இருந்தவனும் ஒரு சிறிய பையன் அவன் தான் கடையை பார்த்துக் கொள்கிறான். அவனுடைய அட்டகாசம் தாங்க முடியவில்லை.

ஏனென்றால் சைக்கிளை ஒரு ரவுண்டு கேட்டு ரொம்பவும் தொந்தரவு செய்து விட்டான். அவனிடமிருந்த பஜ்ஜி பகோடா இன்னும் சில பொருட்களை சாப்பிட்டு விட்டு அங்க இருந்து விடை பெற்றோம்.

Ladakh Cycle Ride Day 10 started hyderabad
Ladakh Cycle Ride Day 10 started hyderabad

இன்று இவ்வளவு தூரம் ஓட்டியது போதும் என்று தூங்குவதற்கு இடம் தேட ஆரம்பித்தோம். அதை தேடியே முப்பது கிலோமீட்டர் பயணம் செய்தோம். ஒரு வழியாக ஒரு கிராமத்தில் கோவிலில் போய் விசாரித்தோம் அவர்கள் தங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.

ஆனால் அங்கே பாத்ரூம் வசதி இல்லாததால் யோசித்துக் கொண்டே இருந்தோம். ஏனென்றால் சுற்றி வீடுகள் மட்டுமே இருந்தது ஒதுக்குப்புறமாக செல்வதற்கு கூட இடமில்லை வேறு வழியும் இல்லை.

நேரம் ஆகிவிட்டதால் முடிவு செய்துவிட்டு சாப்பிடுவதற்கு கொஞ்ச தூரம் சைக்கிளை தள்ளி கொண்டு சென்றோம்.

அப்பொழுது நடுவில் பாரத் பெட்ரோல் பங்க் ஒன்றை கண்டோம் அங்கு போய் விசாரித்தோம். அவர்களும் தங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.

யோசித்துக் கொண்டே உண்பதற்கு சென்றோம். நாங்கள் போனதோ பேருந்துகளில் வந்து கஸ்டமர் இறக்கிவிட்டு பணம் சம்பாதிக்கும் ஹோட்டல் அது தெரியாமல் வேறு வழியின்றி அங்கே சாப்பிட்டோம் பணத்தையும் அதிகமாக பெற்று விட்டார்கள்.

பின்னர் அங்கிருந்து சென்று வந்து பெட்ரோல் பங்கிலே தங்கிவிடலாம் என முடிவு செய்து அங்கேயே இரவு தூங்கி விட்டோம் கட்டில் மெத்தையுடன்.

சமோசா ஜிலேபி Ladakh Solo Cycle Budget Trip 

Ladakh Cycle Ride Distance: 150
Food cost:214
Night Stay: petrol bank

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top