மனசாட்சியே இல்லையாடா உனக்கு Ladakh Cycle Ride Day 19
Ladakh Cycle Ride you have no conscience
பயணத்தின் 19 ஆவது நாள் மார்ச் மாதம் 28ஆம் தேதி வியாழக்கிழமை நேற்று இரவு ஆற்றில் குளித்தது ரொம்பவும் கலை போற்றதால் அதிக நேரம் தூங்கிவிட்டோம். 7:30 மணி அளவில் தான் விழித்தோம்.
சரி செய்து கொண்டு அங்கிருந்து கிளம்புவதற்கு ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. மணியோ எட்டு முப்பது சரி இரவு சாப்பிடாதே தாவாவில் காலை உணவும் சாப்பிட்டு விட்டு செல்லலாம் என்ற முடிவெடுத்து காலை உணவை அங்கேயே சாப்பிட்டோம்.
காலை உணவு சாப்பிட்டு விட்டு ஒன்பது முப்பது மணி அளவில் பயணம் ஆரம்பித்தது. வணக்கம் போல் அமைதியாக பயணம் சென்று கொண்டிருந்தது.
மதிய உணவு நேரமும் வந்தது. ஆனால் சாப்பிடுவதற்கு சிறிய உணவகம் கிடைக்கவில்லை.
அனைத்து ஹோட்டல்களும் தாபாவாக மட்டுமே இருந்தது. அதில் சாப்பிட விருப்பம் இல்லாததால் சிறிய கடையை தேடி பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
நாலு மணி ஆகியும் கடை கிடைக்கவில்லை. ஆனால் போக வேண்டிய இடத்தை அடைந்து விட்டோம்.
உத்திர பிரதேஷ் மாநிலத்தில் ஜான்சி என்ற நகரத்தில் வீர தமிழச்சி ஜான்சி ராணி லட்சுமி பாய் அவர்களுடைய கோட்டையை பார்ப்பதில் தான் இன்று பிளான்.
நேரம் ஆகிவிட்டால் அதனை பார்க்க முடியாது என்ற முடிவு செய்து சாப்பிடுவதற்கு முன் கோட்டையை போய் சுற்றி பார்த்து விட்டலாம் என திட்டமிட்டு இருந்தோம்.
திட்டமிட்டபடி கோட்டையையும் போய் சுற்றி பார்த்தோம். வாகனத்தை விட்டுவிட்டு போவதற்கு மனம் வரவில்லை.
வேறு வழி இன்றி பார்க் செய்துவிட்டு அனைத்தையும் சரி செய்து பக்காவாக வைத்துவிட்டு சுற்றி பார்த்தோம்.
ஒரு மணி நேரம் அங்கேயே நேரம் கடந்தது ஒரு வழியாக முடித்துவிட்டு கீழே வந்து வாகனத்தை பார்த்தவுடன் தான் சந்தோஷம் வந்தது.
ஜான்சியும் மிகப்பெரிய நகரம் நெரிசல் நிறைந்த பகுதி தவறான பாதையில் நாங்கள் சென்று மாட்டிக்கொண்டோம். சிறு சந்துகளில் எல்லாம் பூந்து பூந்து சென்றோம்.
அதன் பின் அங்குள்ள சிறிய கடைகளில் பானிபூரியினை சாப்பிட்டுவிட்டு நெடுஞ்சாலையை வந்து அடைந்தோம்.
மதுரை முத்து
ஆக்ரா நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து 200 கிலோமீட்டர் என்ன தெரியவந்தது.
இருட்டிக் கொண்டே போய்க் கொண்டிருந்தது. பயணத்தின்போது ஒரு கோவிலைக் கண்டு அங்கு சென்று விசாரித்தோம்.
அவர்கள் தங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிட்டார்கள். ஆனால் அங்கு வசதிகள் கம்மி என்பதால் அங்கு தங்காமல் மறுபடியும் பயணம் தொடர்ந்து, சிறு தூரத்திலேயே ஒரு பெட்ரோல் பங்கை கண்டுபிடித்து, அங்கு கேட்டதற்கும் ஒன்றும் பிரச்சனை இல்லை வங்கி கோள்கள் என்று சொல்லிவிட்டார்கள்.
அதன் பின் அங்கே அமர்ந்து சிறிது நேரம் கைபேசியை பார்த்துவிட்டு சாப்பிடுவதற்காக உணவகத்தை தேடிச் சென்றோம்.
கடைக்காரரிடம் பிரைட் ரைஸ் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டோம். சிக்கன் பிரைடு ரைஸ், எக் ஃபிரைட் ரைஸ் என்று அவர்களும் இருக்கிறது என்று கூறினார்கள்.
அதனுடைய விலையினை கேட்டோம். அவர்கள் திருத்திரு என்று முழித்தார்கள் என்ன விலை கூறலாம் என்று.
ஏனென்றால் அங்கு வரும் சப்பாத்தி மட்டும் தான் கிடைக்கும் போல. அது எங்களுக்கு தெரியவில்லை. அவர் வழியாக இருவரும் பேசி ஒரு விலை இன்னைக்கு கூறினார்கள். சரி என்று நாங்கள் சிக்கன் பிரைடு ரைஸ் ஆர்டர் செய்தோம்.
மறுபடியும் குசுகுசுவென என்று பேசி பைசாவை எடுத்து கடைக்கு போவது போல் தெரிந்தது. ஏனென்றால் சிக்கன் வாங்கிட்டு வருவதற்காக.
அதனைப் பார்த்ததும் சுதாரித்துக் கொண்டு அடடா சிக்கன் இல்லை போல என்று முட்டை இருக்கும் அல்லவா அதனால் எக் ஃபிரைடு ரைஸ் என்று ஆர்டரை மாத்தி பதிவு செஞ்சோம்.
அவர்கள் சரி என்று தமைக்க ஆரம்பித்தார்கள். நேரமாக ஆக ஆக தான் தெரிந்தது. அவர்கள் சாப்பாடு இப்பதான் செய்கிறார்கள் என்று.
சரி செய்து முடித்துவிட்டு ப்ரை பண்ணி தருவார்கள் என்று நினைத்து காத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அதிர்ச்சி தரும் வகையில் ஒன்று அங்கு நடந்தது.
ஆர்டர் பண்ணது வந்துவிட்டது. ஆனால் வந்ததோ வெறும் வெள்ளை சாதமும், அவித்த ரெண்டு முழு முட்டையும், வைத்துவிட்டு இது எங்கு இது ரைஸ் எக் ரைஸ் அப்படி என்று கூறி வைத்து விட்டார்கள்.
மதுரை முத்து கூறியது போலவே தான் இருந்தது ஏகே இது ரைஸ் எக் ரைஸ் அப்படி என்று. வேறு வழியின்றி அதனையும் சாப்பிட்டோம். இப்போ அதிகம் சாப்பிட முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
இன்னொரு விஷயம் இந்த சாப்பாட்டினை சாப்பிடும் போது அவன் பாதியில் கேட்டான் எப்படி இருக்கிறது என்று. நன்றாக இருக்கிறதா? மனசாட்சியே இல்லையாடா உனக்கு என்று தான் எங்களுக்கு தோன்றியது. Ladakh Cycle Ride Day 19 you have no conscience
அதன் பின்னர் பெட்ரோல் பங்கில் வந்து கூடாரம் அமைத்து தூங்கி விட்டோம்.
Distance: 105
Food cost: 200
Night stay: petrol pump