Hyderabad Day 17
பயணத்தின் எட்டாவது நாள் 17 ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு தூங்கிய பெட்ரோல் பங்கில் காற்றின் வேகம் அதிகமாக காற்று அடித்துக் கொண்டு இருந்தது அதனால் வியர்வை வராமல் நன்றாக தூங்கி காலையில் 6 மணி அளவில் எழுந்தோம்.
அங்கிருந்து மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு பயணம் ஹைதராபாத் சிட்டிக்குள் தொடங்கியது.
உள்ளே செல்ல செல்ல ரோடுகள் குறுகியன வாகன நெரிசல்கள் அதிகமானது பல flyover bridge கடக்க நேரிட்டது கடும் வேதனைக்கு உள்ளானோன்.
9:30 மணி அளவில் சாப்பிட முடிவெடுத்தோம் ஏனென்றால் கடந்து வந்த பாதையோ கடினம் மிகவும் சோர்வுற்றதால் சாப்பிட்டு விட்டு தங்குவதற்கு இடம் தேடினோம்.
Dormitories தேடித்தான் இவ்வளவு தூரம் சாப்பிடாமல் பயணித்தோம். ஒரு வழியாக அதை கண்டுபிடித்து சென்று விசாரித்தால் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. Budget Ladakh Solo Cycle
அதனால் பக்கத்தில் உள்ள தங்கு விடுதியில் விசாரித்தோம். அவர்கள் எங்களிடம் வாருங்கள் உங்களுக்கு கம்மியாக செய்து தரொம் என்று கூறினார்கள்.
போய் பார்த்ததில் எங்களுக்கு ஏற்றார் போல் இருந்தது விளையும் குறைவாக இருந்தது.
Trip Hotel
ஒரு நாளைக்கு 500 ரூபாயும் ஆனால் இரண்டு படுக்கையும் வேறு வழி இன்றி சரி என்று கூறி இரண்டு நாட்கள் தங்குகிறவும் என்று கையொப்பமிட்டு விவரங்களை கொடுத்து அறையை எடுத்தோம்.
அறையில் சென்று தனது அனைத்து பொருட்களையும் வைத்த பிறகே பெருமூச்சு விட்டோம் அப்பாடா!!!! என்று இருந்தது.
பின்பு துவைக்க வேண்டிய அனைத்து துணிகளையும் எடுத்துக்கொண்டு தொலைக்க ஆரம்பித்தேன்.
அதுவே பெரிய வேலையாக இருந்தது ஒரு வழியாக துவைத்து முடித்து விட்டேன். பின்னர் நானும் குளித்துவிட்டு நேரத்தை பார்த்தால் 12 மணி.
சரி சிறிது நேரம் தூங்கி விட்டு மாலையில் வெளியே சென்று தேவையான பொருட்களை வாங்கலாம் என்று முடிவு செய்தேன். ஒரு மணி அளவில் உறங்க ஆரம்பித்தேன் ஆனால் விழித்ததோ 4:40 மணி அளவில்.
சரி சீக்கிரமாக நான் தயாராகி வெளியே பொருட்களை வாங்க சென்றேன். முதலாவதாக Decathlon சென்றேன் ஏனென்றால் எனது cycle’க்கு extra tube வாங்குவதற்காக சென்றேன். Budget Ladakh Solo Cycle
Ride Dress
ஒரு track மட்டுமே இருப்பதால் இன்னொரு track அங்கேயே வாங்கினேன். சைக்கிளை உள்ளே கொண்டு சென்று அவனில் ஏதாவது குறை இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டு சரி பார்த்துக் கொண்டு வெளியில் வர மணி 6 ஆகிவிட்டது.
பின்னர் அருகில் உள்ள சுற்றுலா தலத்திற்கு சென்று சுற்றி பார்க்க ஆரம்பித்தேன். அதை முடித்துவிட்டு என்னுடைய அறைக்கு வருவதற்கு மணி 8 ஆனது. Ladakh Solo Cycle Ride Day 8
Hyderabad special biryani
என்ன சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு சாப்பிட சென்றேன் சரி இவ்வளவு தூரம் வந்துவிட்டு இங்கே உள்ள Hyderabad special biryani சாப்பிடவில்லை என்றால் வருத்தம் என்று அதை சாப்பிட முடிவெடுத்தேன்.
அதனை தேடி கடை கிடையாது சிற்றினேன் ஒரு வழியாக கடையை கண்டுபிடித்து ஆர்டர் செய்தேன்.
விலையோ 120 ரூபாய் வேறு வழி இன்றி வாங்கினேன் சாப்பிட்டேன் நன்றாகவே இருந்தது. அதன் பின்பு அறைக்கு திரும்பினேன். Ladakh Solo Cycle Ride Day 8
Distance: 40
Food cost:150
Stay: room