பயணத்தின் பன்னிரண்டாவது நாள் மார்ச் மாதம் 21ஆம் தேதி வியாழக்கிழமை நேற்று இரவு அருமையான தூக்கம். ராமர் கோவிலில் காலையில் எழுந்து அனைத்து பொருட்களையும் சரி செய்து கொண்டு பயணம் தொடங்கியது.
காலை உணவு உண்டோம் ஆனால் காலை உணவில் வரும் மாற்றம் நம்மளது உணவான இட்லி கிடையாது.
போண்டா பஜ்ஜி என்ன மகாராஷ்டிரா அவர்களது உணவு முறை காலை உணவாக ஒன்றும் அதன் பிறகு கொஞ்சம் தின்பண்டங்களையும் வாங்கிக் கொண்டே பயணம் புறப்பட்டது.
பஞ்சர்
மதிய நேரம் ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு இடம் தேடி பயணித்துக் கொண்டிருந்தோம். ஆனால் பயணத்தின் போது முதல் முறையாக சைக்கிளின் பஞ்சர் ஆனது.
மூன்று மாநிலங்களை கடந்து வந்து முதல்முறையாக பஞ்சர்.
அதன் பிறகு வெயிலின் தாக்கம் அதிக மரங்களை இடையில் வரும் என்று, மரநிழலை தேடி சிறிது தூரம் தள்ளி கொண்டு சென்று, ஒருவழியாக ஒரு இடத்தில் சைக்கிளை நிறுத்தி,
குளிரின் தாக்கத்தில் 11 வது நாள் Ladakh Cycle Ride
அனைத்து பொருட்களையும் கழட்டி தலைகீழாக தவிர்த்து சைக்கிளை ஆப் செய்து டயரை தனியாக பிரித்து எடுத்து அத நினைவில் உள்ள டியூபை எடுத்து புடுங்கி பார்த்தால் சிறிதளவில் ஒரு ஆணி சுற்றி இருந்தது.
செயின்
அதன் பிறகு அந்த ஆணியை எடுத்துவிட்டு புது டியூப்பை உள்ளே இணைத்துவிட்டு சைக்கிளை பூட்டி விட்டோம். மறுபடியும் 10 கிலோமீட்டர் தொலைவில் விட்டு தான் வந்திருப்போம்.
ஆனால் அதற்குள் செயின் அறுந்து விட்டது. ஒரு வழியாக அதை நாங்களே சரி செய்து விட்டோம். இருந்தாலும் பயமாகவே இருந்தது எங்கேயாவது தட்டிக்குமோ என்று.
Which is the biggest serial in Telugu?
அதனால் அடுத்த கிராமத்தின் நூல் அதாவது மார்க்கெட் பகுதியில் உள்ளே நுழைந்து சைக்கிள் கடையை கண்டுபிடித்து அங்கு சென்றோம்.
ஆனா அவர் என்னுடைய சைக்கிளை பார்த்து வியந்தார். எதனால் என்றால் அவர் சாதாரண சைக்கிளை சரி செய்பவர். நாம் வைத்து இருப்பதோ கியர் சைக்கிள் வேறு வழியும் இல்லை.
அவர் அவருடைய தொழில்முறையில் சைக்கிள் பல்லை அடித்து உடைத்து சரி செய்து விட்டார்.
பழைய பொருட்களை வைத்து அதன் பின் டியூபையும் கொடுத்தோம் அதனையும் பஞ்சர் ஒட்டி கொடுத்துவிட்டார்.
நல்ல மனிதர்கள் தான் வெகுநேரம் அவரிடம் பேச்சு கொண்டு இருந்தோம். பல விஷயங்களைப் பற்றி பின்னர் அவர் செல்லும் பொழுது காசேதும் வேண்டாம் நல்லபடியாக சென்று வாருங்கள் என்று பாசமாக தெரிவித்து அனுப்பி வைத்தார்.
அங்கிருந்து கிளம்புனது அப்புறம் சைக்கிளில் ஏதோ மாற்றம் இருப்பது போல் இருக்கவோ அங்கே உள்ள சிறிய பசங்களிடம் கியர் சைக்கிள் சரி செய்யும் சாப் எங்கே என்று கேட்டு,
அங்கே சென்று அவர்களிடத்தில் கேட்டோம். அந்த சைக்கிள் ரெடி பண்ணுபவரை ஓட்டி பார்க்க சொன்னோம்.
அவர் நன்றாக தான் இருக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆயில் மட்டும் விடுகிறேன் என்று செயினில் ஆயில் விட்டு அவரும் காசு வாங்கவில்லை ஹாப்பி ஜர்னி என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டார்கள்.
பெட்ரோல் பம்பு
அதன் பிறகு இரண்டு பெட்ரோல் பம்புகளை பார்த்தோம் இரவு தங்குவதற்கு அனுமதி கிடைத்தது. ஆனால் வசதி இல்லை அதனால் அதை புறக்கணித்துவிட்டு மேலும் பயணித்தோம்.
ஒரு வழியாக பாரத் பெட்ரோல் பங்க் ஒன்றை கண்டு பிடித்தோம். அது புதிய பெட்ரோல் பங்க் என்பதால் சுத்தமாகவும் நன்றாகவும் இருந்தது.
வேலை செய்யும் ஊழியர்களிடம் கேட்டதற்கு சரி என்று சொல்லிவிட்டார்கள். அதனால் அங்கு சென்று ஓரமாக உட்கார்ந்து கொண்டிருக்கும்.
அப்பொழுது பெட்ரோல் பங்கின் ஓனரின் அப்பா வந்து எங்களிடம் பேச்சு கொடுத்தார். அவர் வியந்து போனார் எங்களிடம் பெருமையாக எங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
அவரின் வீட்டு மாப்பிள்ளையிடம் தொலைபேசியில் அழைத்து பின்னர் அறையில் இருந்து அப்பாவின் மகன் அதாவது பெட்ரோல் பங்கின் ஓனர் வந்தார். Leh ladakh bike travel
அவர் ஆங்கிலத்தில் பேசினார் ஒன்றும் பிரச்சனை இல்லை இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள். எல்லா வசதியும் செய்து கொடுக்கச் சொல்கிறேன்.
எதனாவது ஒன்று என்றால் எனக்கு நேரடியாக தொலைபேசியில் அழையுங்கள் என்று அவருடைய தொலைபேசி எண்ணையும் கொடுத்தார்.
காரில் ஏறி செல்லும் பொழுது நிறுத்தி அப்பா திரும்பி பின்பக்கம் சென்று காரில் இருந்து பழங்களை கொண்டு வந்து எங்களுக்கு கொடுத்தார்.
மிகவும் சிறப்பான தருணம் அது அதன் பின்பு அங்க உள்ள வாட்ச்மேன் ஊழியர்களிடம் பேசிக் கொண்டு விட்டு உறங்க ஆரம்பித்தோம் நன்றாக உறக்கம். Leh ladakh bike travel
Distance: 98
Food cost: 185
Stay: petrol bank