Peaceful Protest Leh Cycle பயணத்தின் 29 ஆம் நாள் மார்ச் மாதம் 4 ஆம் தேதி வியாழக்கிழமை.
அதிகாலையில் ஏழு முப்பது மணி அளவில் ஊழியர்கள் வந்து எங்களை எழுப்பினார்கள். தேநீர் குடிக்கிறீர்களா என்று வருவாளா இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு தயாரானோம்.
அவர்களோ எங்களுக்கு ரொம்ப உதவியாக இருந்தனர். அன்பாகவும் பேசினார்கள்.
நேற்று வைத்த பொருட்கள் அனைத்தையும் மூட்டை கட்டிக்கொண்டு அவர்களிடமும் சென்று வருகிறோம் என்று கூறிவிட்டு பயணம் அருகில் உள்ள ஏரிக்கரையை நோக்கி தொடர்ந்தது 8 மணி அளவில்.
8:30 மணி போல் வயலில் உள்ள பம்பு செட்டில் அனுமதி கேட்டு அங்கு குளிக்க தயாராகினோம். ஆனால் 9 மணி ஆகியும் குளிக்காமல் கைபேசியை உபயோகித்துக் கொண்டிருந்தோம்.
குளிக்காமல் துணிகளை மட்டுமே துவைத்துக்கொண்டு 11:20 க்கு அங்கிருந்து பயணம் தொடர்ந்தது உணவு கடையை தேடி.
12 மணி அளவில் ஒரு சிறிய பொட்டி கடை ஒன்றை பார்த்து அங்கு சென்று பிஸ்கட் லட்டு குளிர்பானம் போன்ற பொருட்களை 30 ரூபாய் விற்கு வாங்கி உன் ரோம்.
அதன் பிறகு மறுபடியும் பயனை தெரு ஒரு மணி நேரத்தில் ஒரு மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்து சுற்றிக் கொண்டிருந்தோம்.
உச்சி வெயில் 1 மணிக்கு மதிய உணவு சாப்பிடுவதற்காக தேடி கொண்டு சென்றோம். ஒரு வழியாக பிரியாணி இருக்கும் கடையை கண்டுபிடித்து பிரியாணி ஆர்டர் செய்தான். ஆனால் இளைய 120 ரூபாய் என்று சொல்லிவிட்டார்கள்.
ஆனால் பிரியாணியை பார்த்ததும் விட மனசு இல்லை. வேறு வழியின்றி சாப்பிட்டு விட்டு பயணம் தொடர்ந்து.
கடந்த தூரமோ குறைவாக இருந்தது. சாந்தரம் ஆனது கையில குறைந்தது. இதுதான் சாக்கு என்று எதையும் பொருட்படுத்தாமல் மிதிக்க ஆரம்பித்தோம் நன்றாகவே தூரம் சென்றோம்.
எப்படியாவது பஞ்சாப் மாநிலத்தில் இன்று இரவு தூங்க வேண்டும் என்று திட்டமிட்டு விரித்துக் கொண்டே இருந்தோம். எல்லையை தொட போகிறோம் என்ற சந்தோஷத்துடன் நெருங்கினோம் ஆனால் எல்லையிலோ அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
நெல்லைப் பகுதியில் நூறுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிந்து கிடந்தன. வாகனங்களே மரித்து திசையை திருப்பி உள்ளூர் வழியாக அனுப்பி வைத்துக் கொண்டிருந்தனர். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
அதன் பின்பு அவரிடம் சென்று கேட்டதற்கு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மக்கள் போராட்டம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அதனால் இப்படி செல்ல முடியாது 3 கிலோமீட்டர் ஊருக்கு சென்று சுற்றி போ என்று கூறினார்கள் அந்த நேரம் இருட்டியும் இட்டது.
உள்ளூர் செல்லும் பாதையில் இலக்கை தெரிய வைத்துக் கொண்டு பயணம் தொடர்ந்தது. பெரிய வாகனங்கள் எங்களை கடந்து சென்றால் உங்கள் முகம் முழுவதும் மண்ணின் புகை எங்களை தடுத்துக் கொண்டே இருந்தது.
இரவு நேரங்களில் லைட்டை பிடித்துக் கொண்டு கஷ்டப்பட்டு அப்பகுதியை கடந்து அவர் சாலையினை நெருங்கினார்.
போராட்டம்
அங்கே பார்த்தால் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் தனது வாகனங்களை சாலையில் நிறுத்திக் கொண்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
இவர்கள் ஆறு மாதமாக போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். முந்தைய காலத்தில் தெரியும் ஆனால் எல்லையிலேயே போராட்டம் பண்ணி கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரியாமல் வந்து விட்டோம்.
7 கிலோமீட்டருக்கு மேல ாக வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தன. பசி அடங்காததால் இரண்டு வாழைப்பழம் Ladakh Ride Day 26
கங்கை சமையல்கள் நடந்து கொண்டே இருந்தது. அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
எங்களையும் இரண்டு இடத்தில் கூப்பிட்டார்கள் நாங்கள் தான் வருவாளா என்று சொல்லிவிட்டு அதை மிதித்து கொண்டு தூங்குவதற்கு பெட்ரோல் பங்க் தேடி பறந்து வந்து விட்டோம்.
அவர்களிடம் சிறிது நேரம் கூட பேசாம அவர்களெல்லாம் கடந்து வந்து ஒரு பாரத் பெட்ரோல் பங்க் நுழைந்தோம். உள்ளே இருந்து ஓனர் வெளியே வந்தார் அவரிடம் நேரடியாக சென்று தகவலை சொன்னோம்.
அவரோ தாராளமாக தங்கிக் கொள்ளுங்கள் எல்லா வசதியும் இங்கே இருக்கிறது என்று சொன்னார் சந்தோஷம் அடைந்தோம்.
சரிங்க ஐயா இங்கே சாப்பிடுவதற்கு உணவகம் எங்கே இருக்கிறது என்று கேட்டோம். என்ன சொல்கிறீர்கள் நீங்கள் அப்பொழுது இன்னும் சாப்பிடவில்லையா என்று கேட்டு இல்லை என்று கூறியதும்.
முதலில் சுத்தமாகி விட்டு சிறிது நேரம் உட்காருங்கள் உணவு உங்களை தேடி வரும் என்று ஊழியர்களிடம் எங்களுக்கு சாப்பிடுவதற்கு இரவு உணவு வாங்கிட்டு வர சொல்லி விட்டு பேசிக்கொண்டிருந்தார்.
பின்னர் சாப்பாடு வந்துவிட்டது. எங்களை உள்ளே அழைத்து அவர் தூங்கும் பெட்டினில் கரை வைத்து எங்களுக்கு பரிமாறவும் செய்தார். நாங்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை வெளியே காத்துக் கொண்டிருந்தார்.
இங்கு தங்க போகிறீர்கள் என்று கேட்டு எந்த இடம் வசதியாக இருக்கிறது என்று பார்த்து தானே அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து விட்டு எங்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார்.
பயணம் எப்படி போய்க்கொண்டு இருக்கின்றது எங்கே எங்கெல்லாம் சென்றீர்கள் விவரங்களை ஏன் கேட்டு தெரிந்து கொண்டு, பின்னர் நாங்கள் கூடாரம் அமைத்த பின்பு சைக்கிள் வெளியே வைக்காதீர்கள், அறைக்குள் வைத்து விடுங்கள் என்று, ஒரு அரை இணை திறந்து அங்கு சைக்கிளை பத்திரமாக வைத்துக் கொண்டு மழை பெய்தால் உள்ளே வந்து படுத்துக் கொள்ளுங்கள் என்றும் ஊழியர்களிடம் சொல்லிவிட்டு சென்ற.
என்ன சொல்வது எப்படி இதெல்லாம் நடக்கிறது என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. நாம் என்ன செய்தோம் எதனால் நமக்கு இவ்வளவு உதவிகளும் இவ்வளவு பாராட்டுகளும்.
26 நாள் பயணத்தில் பார்த்த அனைவரும் அன்பானவர்கள் பாசமானவர்கள் மட்டுமே கடந்து வந்த பாதையை நினைத்துக் கொண்டே இரவு உறங்க ஆரம்பித்தேன்.
Distance: 88
Food cost:150
Night stay petrol pump