Trisha

பயணம் ஜமுகை நோக்கி Kashmir to Ladakh Ride Day 35

0 0
Spread the love
Read Time:3 Minute, 39 Second

Travel to Jammu Kashmir பயணத்தின் 35 ஆவது நாள் ஏப்ரல் 10 ஆம் தேதி புதன்கிழமை. காலை 9 மணி அளவில் பயணம் தொடங்கியது.

Travel to Jammu Kashmir to Ladakh Ride Day 35
Travel to Jammu Kashmir to Ladakh Ride Day 35

10 மணி அளவில் ஜம்மு அண்ட் காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்தோம். காலை உணவும் சாப்பிட்டோம். இரண்டு ரொட்டி டால் என 90 ரூபாய் செலவு ஆகிவிட்டது.

பயணம் ஜமுகை நோக்கி தொடர்ந்து கொண்டிருக்கிறது. 10:50 மணி அளவில் புதிய சிம் வாங்க கடையில் நிறுத்தினோம். ஆனால் விளையோ 500 என்று கூறவோ வாங்காமல் வந்து விட்டோம்.

1:30 மணி அளவில் பானிபூரி கடையில் நிறுத்தினோம். அவனிடம் 50 ரூபாய் மொய் வைத்தோம். அதன் பின்பு 2 மணி நேரம் ஒட்டிய பிறகு மறுபடியும் பயணத்தை நிறுத்தினோம்.

ஏன் என்றால் கரும்புச்சாறு குடிக்கலாம் என்று. விலையோ 20 ரூபாய் என்று சொன்னார்கள் அதனால் 2 கரும்புச்சாறு குடித்தோம் 40 ரூபாய் அங்கு மொய் வைத்தோம்.

பின்னர் பயணம் தொடங்கியது. மிகவும் கடினமாக இருந்தது. சாலை போடும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.

அதனால் ஒரு வழியாக அனைத்தையும் கடந்து இரவு நேரமும் நெருங்கியது. மலையேற்றங்களையும் பசியோ அதிகமாக எடுத்தது.

அதனால் ஒரு கடையை நெருங்கி அங்கு மேகி சாப்பிடலாம் என்று. அதனின் விலையை கேட்டோம் ஒரு மேகியின் விலை 70 ரூபாயும். அப்படியே அங்க இருந்து வெளியில் வந்து விட்டோம்.

அதன் பின்பு ஒரு வழியாக தூங்குவதற்கு இடத்தை தேடி கண்டுபிடித்து விட்டோம். பின்னர் அருகில் உள்ள கடைக்குச் சென்று அங்கேயும் நூடுல்ஸ் தான் சாப்பிட்டோம்.

ஆனால் இதனின் விலை 50 ரூபாய். பின்னர் அங்கு சாப்பிட்டு விட்டு தூங்குவதற்காக பெட்ரோல் பங்க் சென்று கூடாரம் அமைக்க ஆரம்பித்து பாதி வேலை முடிந்து விட்டது.

அப்பொழுது ஒருவன் வந்து 10 மணிக்கு மேல் கூடாரம் அழைத்துக் கொள்ளுங்கள்.  ஏனென்றால் அப்பொழுது கேமரா அனைத்து விடுவோம் என்று. ஏதோ காரணம் சொன்னான் சரி என்று காத்திருந்தோம்.

ஒரு வழியாக கொடாரம் அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். பின்னர் கூடாரம் அமைத்து தூங்கிக் கொண்டிருந்தோம்.

சிறிது நேரத்தில் மழை பெய்தது அனைத்து பொருட்களையும் சிறுக்கி கொண்டு மழை இல்லா பகுதியில் இரண்டு மணி நேரம் நின்று கொண்டிருந்தோம்.

பின்னர் கொடாரம் அமைக்காமலேயே பெட்ரோல் பங்கின் வாசலில் ஒதுங்கி அனைத்து பொருட்களையும் வைத்துக்கொண்டு தூங்கிவிட்டோம்.

Place: Jammu Kashmir
Distance: 80
Food cost: 170
Night stay: petrol pump

About Post Author

Cine Times Babu

Cine Times Babu provides Breaking News, Tamil cinema news, Kollywood cinema news, Tamil Kavithaikal, latest Tamil movie news, தமிழ் கவிதைகள், videos, audios, photos, movies, teasers, trailers, entertainment, reviews, trailers, celebrity gossip, Bigg Boss Tamil, Bigg Boss

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *