Vaishnavi Devi Temple பயணத்தின் 36 வது நாள் ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி வியாழக்கிழமை. நேற்று இரவு தூங்கிய பெட்ரோல் பங்கில் இருந்து சீக்கிரமே பயணம் தொடர்ந்தது. ஏனென்றால் ஊழியர்கள் வந்து பங்கை திறக்க ஆரம்பித்து விட்டார்கள்.
கற்றா என்ற பகுதியில் வைஷ்ணவி தேவி கோவில் டெம்பிள் போய் அடைவது தான் இன்றைய திட்டம். பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
உணவு கடையை தேடி ஒருவழியாக தாபாவை கண்டுபிடித்து பேரம் பேசி சாப்பிட ஆரம்பித்தோம். இரண்டு ரொட்டி ரொட்டியின் விலையோ பத்து ரூபாய்தான்.
ஆனால் அதற்கான கொழும்பின் விலை 80 ரூபாயும் அங்கேயே நூறு ரூபாய் நோய் வைத்துவிட்டு பயணம் தொடர்ந்தது.
மலைப்பகுதி என்பதால் மேடுகள் அதிகம் ஓட்டுவதற்கு இடமில்லை. முழுவதும் தள்ளிக் கொண்டுதான் சென்றோம் மிகவும் கஷ்டப்பட்டு மதிய உணவு சாப்பாடு சாப்பிடாமல் சிறிய கடையினை கண்டுபிடித்து அங்கு சென்று பிஸ்கட் போன்ற தின்பண்டங்களை ஒன்றும்.
எங்களது கண்முன் நாங்கள் போய் பார்க்க நிற்கும் கோவில் அழகாக தெரிந்து கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டே பயணம் தொடர்ந்து கற்றா என்னும் பகுதியை வந்து அடைந்தோம்.
வந்துவிட்டோம் ஆனால் சுலபமாக இல்ல மிகவும் கடினமாக. சிட்டிக்குள் நுழைந்து தங்கும் தங்கும் தங்கும் இடத்தை தேடி சென்று கொண்டிருந்தோம்.
நிறைய மக்கள் நெரிசல் நிறைந்த பகுதி வியாபாரிகள் அப்படி என்று பல ஊழியர்கள் நம்மளை தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள். ரூம் வேண்டுமா டிக்கெட் வேண்டுமா குளிக்க இடம் வேண்டுமா பார்க்கிங் பண்ண இடம் வேண்டுமா என்று கேட்டேன்.
அனைவரிடமும் பேசாமல் கடந்து வந்து ஒரு வழியாக டாக்குமெண்ட்ரி கண்டுபிடித்தோம். உள்ளே சென்று கேட்டால் ஹவுஸ் புல் என்று சொல்லிவிட்டார்கள்.
ஆனால் அதற்கு அருகிலேயே இன்னொன்று இருக்குதா அங்கு சென்று விசாரித்து பார்க்க சொன்னார்கள். அங்கு சென்றார் அதிகமான ரூம்கள் இருந்தது. ஏறக்குறைய 500க்கும் மேல் படுக்கையறை இருந்தது.
150 ரூபாய் கொடுத்து அறையை பதிவு செய்து அனைத்து பொருட்களையும் மேலே கொண்டு சென்று வைப்பதற்கு ஒரு வழியாக 5 மணி ஆகிவிட்டது.
பின்னர் பிரஷ் ஆகிவிட்டு. வெளியே சென்று சாப்பிட்டு வரலாம் சுத்தி பார்த்துவிட்டு வரலாம் என்று, அங்கே உள்ள மார்க்கெட் பகுதிகளில் ஆட்டோமடித்து விட்டு இரவு உணவு மசாலா தோசை வெஜ் ப்ரைட் ரைஸ் என நிம்மதியாக சாப்பிட்டோம்.
விலை தான் 220 ரூபாய் வந்துவிட்டது. பின்னர் அறைக்கு வந்து நாளை காலையில் மலையேறலாம் என்ற திட்டமிட்டு அனைத்து பொருட்களையும் சரி செய்து கொண்டு படுத்து விட்டோம்.
Place: Jammu Kashmir
Distance: 40
Food cost: 400
Night stay: dormitory