விமர்சனங்கள் செய்வதில் வல்லவரான கூல் சுரேஷ் பிக் பாஸில் கலந்து கொள்ளப் போகும் நோக்கம். என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
கூல் சுரேஷ் அவர்கள் படங்களை பற்றி விமர்சனம் செய்வதில் வல்லவர். சென்னையில் வசித்து வந்திருக்கிறார். நிறைய படங்களில் துணை நடிகராகவும் நடித்திருக்கிறார். இவர் நடிகராகவும் திகழ்கிறார்.
நானேஇவர் நடித்த படங்களில் 2007 ஆம் ஆண்டு சாக்லேட், ஸ்ரீ, காதல் அழிவதில்லை, காக்க காக்க ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். படித்தவுடன் கிழித்து விடவும் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
சித்திரம் கொள்ளாதே கொள்ளாதே என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதனால் அவர் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவருக்கென ஒரு தனி இடம் தனியிடம் மக்களிடையே உள்ளது.
கூல் சுரேஷ் என்ற பெயருக்கென ரசிகர் கூட்டம் இருக்கிறார்கள் அந்த அளவுக்கு பிரபலம் அடைந்திருக்கிறார்.
துள்ளாத மனமும் துள்ளும் என்ற திரைப்படத்தில் தளபதி விஜய் கூல் என்ற செயின் ஒன்றை அணிந்திருப்பார். அதேபோன்று இவரும் அணிந்திருந்தார் அதிலிருந்து அவருக்கு கூல் சுரேஷ் என பெயர் வந்தது. அதிலிருந்து தளபதி விஜய் ரசிகராகவும் இருந்தார்
கூல் சுரேஷ் அவர்கள் சிம்பு வின் தீவிர ரசிகராம். சிம்புவின் படங்களை நகைச்சுவையாக விமர்சனம் செய்து கொண்டிருந்தார்.
சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு என்ற படத்தை பற்றிய விமர்சனம் செய்த போது பெரும் வரவேற்பு கிடைத்தது.
அதனால் அந்த படத்தின் இயக்குனர் ஐஸ்வர் கணேஷ் அவர்கள் இவருக்கு ஐபோன் ஒன்றை பரிசாக வழங்கினார்.
அதன் பிறகு விமர்சனம் செய்வதிலேயே இருந்தார். பொன்னின் செல்வன் என்ற படம் வெளிவந்த போது குதிரையின் மீது வந்து விமர்சனம் செய்தார்.
இது போன்ற புது விதமான நகைச்சுவை கலந்த விமர்சனங்களை செய்து வந்திருந்தார். வெள்ளிக்கிழமைகளில் வெளிவர போகும் எந்த நடிகர் திரைப்படம் ஆனாலும் விமர்சனம் தெரிவதில் முதல் ஆளாக இருப்பார். இதனால் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தார்.
சந்தானம் இவருடைய நெருக்கமான நண்பர். சந்தானம் அவர்களின் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் நடித்து கொடுத்திருப்பார். நகைச்சுவையாக விமர்சனம் செய்கிறார் என்று பல சிக்கல்களில் சிக்கிக் கொண்டிருந்தார்.
திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பது அவருடைய குறிக்கோளாம். கூல் சுரேஷ் இருக்கும் இடத்தில் மிகவும் கலகலப்பாகவும் அனைவரும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார் கூல் சுரேஷ் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிக் பாஸ் இல் போட்டியாளராக இருப்பதைவிட விமர்சனம் செய்பவராக இருப்பாரா இல்லை அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு தன் திறமையை வெளிப்படுத்துவார.
பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு போட்டியாளர்களை விமர்சனம் செய்து வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியாளர்களை விமர் செய்வதில் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.
பிக் பாஸ் வீட்டில் அனைவரிடத்திலும் மகிழ்ச்சியாக இருந்து இந்த நூறு நாளே கடந்து வருவாரா வெற்றி பெற்று விளையாடுவாரா என பார்க்கலாம்.