யுகேந்திரன் மலேசியா வாசுதேவன் அவருடைய மகன் என்பது நம் அனைவரும் அறிந்ததே. மலேசியன் குடும்பமாக இருந்தாலும் அவர் தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்து வளர்ந்திருக்கிறார். அவருக்கு இரண்டு தங்கைகள் இருக்கின்றன. பள்ளி கல்லூரி படிப்புகள் சென்னையில் முடித்திருக்கிறார். அவர் தங்கையும் ஒரு பாடகி.
இவர் சிங்கப்பூரில் தொழில் நிறுவனம் நடத்தி வந்திருந்தார். தற்போது நியூசிலாந்தில் குடும்பமாக வசித்து வந்திருக்கிறார். மலேசியா வாசுதேவன் அவர்கள் இசைத்துறையில் இருந்ததால் பத்து வயதில் இருந்தே பாட்டு படுவதில் விருப்பமாக இருந்தார்.
அவர் குடும்பமும் இசை துறையைச் சார்ந்தவர்கள். சினிமாவில் நிறைய படங்களுக்கு பாடல் பாடி கொடுத்திருக்கிறார். இளையராஜா, ஏ ஆர் ரகுமான் அவர்களிடம் இசை கற்று இருக்கிறார். பாடல்கள் பாடவும் செய்திருக்கிறார்.
இவருடைய மனைவி மாலினி அவர்கள் ஸ்ரீலங்காவை சேர்ந்தவர். அவர் ஒரு ரேடியோவில் வேலை செய்து கொண்டிருந்த அப்போது அவரை காதலித்து மணந்து கொண்டார். அவரின் குழந்தைகள் விசாஷன், கிஷன், தர்ஷன் ஆகியோர் உள்ளனர். அவரின் குடும்பத்தினர் மீது
அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார்.
மலேசியா வாசுதேவன் அவர்கள் யுகேந்திரன் கதாநாயகனாக ஒரு படம் எடுத்தார் அந்த படம் ஓடவில்லை. இதனால் பணக்கஷ்டத்திற்கு ஆளானார்கள். பிறகு ஜெயா டிவி, சன் டிவி நிகழ்ச்சிகளிலும் யுகேந்திரன் அவர்கள் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்திருக்கிறார். விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.
முத்துமாரியம்மன்ஹரிஷ் ஜெயராஜ், தேவா, பரத் ஆகிய இசையமைப்பாளர்களுக்கு பாடல்கள் பாடி கொடுத்திருக்கிறார். சாமி படத்தில் கல்யாண தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா என்ற பாடலும், லேசா லேசா இல்லை என்ற படத்தில் முதன்முதலாய் இது போன்ற பல பாடல்களை தமிழ் சினிமாவில் பாடியிருக்கிறார்.
இவருக்கு இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்று விருப்பமாக இருந்தது. இவர் பாடல் பாடுவதில் மட்டுமில்லாமல் சினிமாவில் பல படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவர் நடித்த படங்கள் பூவெல்லாம் உன் வாசம், எங்கே எனது கவிதை, ஸ்டுடென்ட் நம்பர் ஒன் போன்ற நிறைய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதனால் இவர் ஒரு நடிகராகவும் திகழ்கிறார். மக்களிடையே இவருக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ளார்.
அது மட்டும் இன்றி சமூக வலைத்தளங்களில் பிக் பாஸ் ரிவ்யூ கூட செய்து வந்திருந்தார். போன சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இவரை அழைத்தார்களாம். ஆனால் இவரால் தவிர்க்க முடியாத காரணத்தினால் வரவில்லை.
அதனால் பிக் பாஸை பற்றி இவருக்கு நிறைய பரீட்சையம் உள்ளது. படங்கள் நடித்ததின் மூலமும் பாடல்கள் பாடுவதின் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நிறைய அங்கீகாரம் பெற்றிருக்கிறார்.
இவ்வளவு நாட்கள் எந்த நிகழ்ச்சியும் கலந்து கொள்ளாததால் தன்னை தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் மறக்காமல் நினைவூட்டுவதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதாக கூறினார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் யுகேந்திரன் அவர்கள் கலந்து கொள்ளப் போகிறார். இவர் வெற்றி பெறுவதற்காக அல்ல மக்களிடையே தன்னை பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என கூறுகிறார்.