மணி சந்திர கர்நாடகா மாநிலத்தில் இருந்து பெங்களூரில் பிறந்து வளர்ந்து இருக்கிறார். அவருடைய அப்பா பெயர் ரமேஷ், அம்மா ஷீபா, தங்கை நிஷா, அண்ணன் ரவி ஆகியோர் உள்ளனர்.அவருடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு பெங்களூரில் படித்து வந்தார்.
அவர் கல்லூரியில் வணிகவியல் படித்தார். கல்லூரி படிப்பு முடித்து இருந்தாலும் அவருக்கு வேலைக்கு செல்வதில் விருப்பமில்லை. நடனத்தில் சாதிக்க வேண்டும் என்பது மட்டுமே அவர் குறிக்கோளாக இருந்தது.
அவருடைய தினமும் எந்த வேலை செய்தாலும் நடனத்தில் மட்டுமே கவனம் இருந்தது. சினிமாவில் சேர்வதற்கு சென்னைக்கு வந்ததும் சாண்டி மாஸ்டர் அவரை சேர்த்து கொண்டார். மேலும் படிக்க…
சாண்டி மாஸ்டர்டரிடம் நடனம் கற்றுக் கொள்வதற்கு அவருடைய நடன பள்ளியில் சேர்ந்தார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட டான்ஸ் ரியாலிட்டி ஷோவின் கலந்து கொண்டார். பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு நடனம் ஆடுவார்.இதன் மூலம் அவர் திரைத்துறையில் அறிமுகமானார்.
மணி பெங்களூரில் இருந்து சென்னைக்கு வரும் பொழுது சேண்டி மாஸ்டர் வீட்டிலேயே தங்குவாரம். அந்த அளவிற்கு இருவருக்கும் நட்பு உள்ளது. மணி அவரை தன் குருவாகவும் கருதுவார். சாண்டி மாஸ்டர் அவருடன் சேர்ந்து இருவரும் புதுவிதமாக யோசித்து. நகைச்சுவையாகவும், மகிழ்ச்சியாகவும் நடனமாடுவார்கள். பின்னர் கிங்ஸ் ஆப் டான்ஸ், ஜோடி நம்பர் 1 ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறவும் செய்தார்.
பெலினா, மணி ஜோடி நடனம் ஆடுவதில் சிறந்த விளங்கினர். இவர்களின் நடனத்திற்கென ரசிகர் கூட்டம் இருந்தது. அந்த அளவுக்கு பிரபலமானவர்கள். பின்னர் சில காரணங்களால் அவர்கள் பிரிந்தனர். சமூக வலைத்தளங்களில் நடனமாடி ரீள்ஸ்கள் எடுத்து பதிவிடுவார்.
சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஜோடியாக ரவீனா அவர்கள் இருவரும் சேர்ந்து நடனம் ஆடிக்கொண்டு வந்திருந்தனர். ரவீனா, மணி ஜோடி நடனம் ஆடி சமூக வலைத்தளத்தில் பதிவிடுவார்கள் அது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.
காதல் பாடலுக்கு நடனமாடி பதிவிடுவார்கள். அதனால் இருவரும் காதலிக்கிறார் என்றும் கிசுகிசு வந்தது. அதை பொருட்படுத்தாமல் தனது நோகத்தை விடாமல் வெற்றி பெற வேண்டும் என என்பதே அவருடைய குறிக்கோளாகும். மேலும் படிக்க…
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொள்ளப் போகிறார்கள் என யாருக்கும் தெரியாது இருந்தாலும் இருவரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என அறிவிக்கப்படாமல் இருந்திருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மணி அவர்கள் தன் திறமையையும், அடையாளத்தையும் வெளிகாட்டுவதற்கு ஒரு யுக்தியாக பிக் பாஸ் சீசன் 7 தேர்ந்தெடுத்துள்ளார் .
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மணியின் நடன திறமையை காட்டுவாரா! ரவீனா, மணி ஜோடி பற்றி பேசுவதற்கு கன்டென்ட் கொடுப்பாரா என பார்க்கலாம். இவர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று விளையாட போவாரா இல்லை பாதியிலேயே வெளியேறுவாரா என்ன பார்க்கலாம்.