நான் நீ படைப்பு – 1
என்னவளை கண்டேன் குழியில் விழுந்தேன் மகிழ்ந்தேன்!
அவள் கண்ணத்தில் விழும் குழியில்!
நான் நீ படைப்பு – 2
நீ உன் வாழ்வில் நீயாக இருந்தாய்!
நான் என் வாழ்வில் நானாக இருந்தேன்-ஆனால்
என்று உன்னை சந்தித்தேனோ அத்தருணம்!
மனதில் தோன்றிய காதல்!
நான் நீயாகவும் நீ நானாகவும்
என்னை மாற்றியது!
நான் நீ படைப்பு – 3
1000 மலர்கள் தோட்டத்தில் பூத்தாலும்!
அதில் எதோ ஒரு சில மலர்கள் மட்டுமே!
என் கூந்தலில் சூடிக்கொள்ளும் பாக்கியத்தை பெற்றது!
அந்த ஒரு சில பூக்கள் மட்டும் மிக அதிஷ்ட்ட சாலிகள்!
ஏன் தெரியுமா?
அந்த பூக்கள் உன் கைகளான் என் தலையில் சூடிக்கொள்ளகொள்கின்றன.
நான் நீ படைப்பு – 4
நேரம் நெருங்க விடாமல் தடுப்பதால்!
நெளிந்து துளிகளில் தவிக்கிறேன்!
நான் நீ படைப்பு – 5
100 வயது ஆயுள் வேண்டாம்!
உன் அருகில் ஒரு ஆயுள் மட்டும் போதும்!
நான் நீ படைப்பு – 6
கண்களுக்கு அருகில் இருப்பதை விட!
இதையதிற்க்கு அருகில் இருப்பது தான் காதல்!
நான் நீ படைப்பு – 7
வெளிச்சத்தை தேடாதே!
அதை நீ உருவாக்கு!
நான் நீ படைப்பு – 8
தூரங்கள் பிரிவில்லை என் துணையே!
துயிலில் சிந்திப்போம் வ என் கணவனே!
நான் நீ படைப்பு – 9
மரணம் கூட சுகம் தான்!
நீ என் அருகில் இருந்தால்!
நான் நீ படைப்பு – 10
வெயில் கூட இதமாக தெரிகிறது!
நீ என் அருகில் நிற்கும்பொழுது!
நான் நீ படைப்பு – 11
அருகில் இருந்தால் அணைத்து மகிழ்வேன்!
தூரத்தில் இருப்பதினால் நினைத்து மகிழ்கிறேன்!
நான் நீ படைப்பு – 12
பெரும் கடலாய் என்னை ஆர்ப்பரிதுக்கொண்டாய்!
மீழ முடியாமல் தவிக்கிறேன் உன் நியாபங்களால்!