கமலின் அதிகாரத்தை தட்டி தூக்கிய விஜய் சேதுபதி பிக் பாஸ் சீசன் 8
மக்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது தமிழில் நடத்தப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.
இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும் காலப்போக்கில் இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்களே உள்ளனர்.
எந்த பிக் பாஸ் நிகழ்ச்சி எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் அளவிற்கு வருடம் வருடம் இந்த நிகழ்ச்சியை மக்களுக்கு பிடிக்கும் அளவிற்கு நடத்தி வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி.
உலகநாயகன் கமலஹாசன்
கமலஹாசன் தொடர்ந்து ஏழு சீசனங்களில் தொகுப்பாளராக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதனால் இவர் மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு பெற்று தந்தது என சொல்லலாம்
இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஏழு சீதனங்கள் மக்களின் ஆதரவத்தோடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக போகும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கப் போவதில்லை, என்று தனது அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விஜய் தொலைக்காட்சியிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்து இருந்தார்.
பிக்பாஸ் சீசன் 8 களத்தில் இறங்கிய லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா
இதை தெரிந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏழு ஆண்டுகள் தொடர்ந்து மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சியாக இன்று வரை இருக்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் கமல் அவர்களும்.
இவர் தொகுத்து வழங்குவதில்லை என்ற அறிவிப்பு அறிவித்ததுடன் ரசிகர்கள் அடுத்து யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற ஒரு கேள்வியை எழுப்பினார்கள்.
அந்த வரிசையில் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்றும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒருபுறம் விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை இந்த உரை விஜய் சேதுபதி அவர்கள் தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜய் சேதுபதி
அவர்கள் நடிகர்களில் முக்கிய நடிகர்களாக சினிமா துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதே சமயம் இவர் வளரும் நடிகர்களில் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரை மக்கள் செல்வன் என்றும் மக்களால் போற்றப்படுகிறார்.
கடந்த வருடம் வெளியான மகாராஜா என்ற திரைப்படம் மக்களிடையே மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
இவரின் படங்கள் அனைத்தும் குடும்ப படமாகவே இருக்கும். அதே நேரத்தில் சண்டை காட்சிகள் அதிகமாக காணப்படாது.
இன்று வரை குடும்பங்கள் கொண்டாடப்படும் படங்களாகவே இவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவருக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளதால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கினால் மக்களிடையே பெரும் வரவேற்பு பெரும் என்று விஜய் தொலைக்காட்சி நிறுவனம் எண்ணுகிறது.
ஏழு வருடம் தொடர்ந்து தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன் திடீரென்று இந்த நிகழ்ச்சியை விட்டு விலகப்போவதாக அறிவித்த நாள் முதல் இன்று வரை இவருக்கு ஈடாக யார் இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளராக இருப்பார் என்ற மாபெரும் கேள்வி எழும்பி கொண்டே உள்ளது.
vijaysethupathi host biggbosstamil 8
இதனை பூர்த்தி செய்யும் வகையில் பல முன்னணி நடிகர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் முக்கியமாக மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நடிகராக இருந்தால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நன்றாகவோ இருக்கும்.
மக்களிடையே எளிதாக போய் சேரும் என்ற எண்ணத்தில் விஜய் சேதுபதி அவர்களை இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அந்த தொலைக்காட்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஏறத்தாழ 90 சதவீதம் தொலைக்காட்சி நிறுவனம் உறுதி செய்துள்ளது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிகராக வலம் வந்த அவர் இப்பொழுது தொகுப்பாளராக ஒரு புதிய ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்.
இது எந்த அளவிற்கு அவர் சினிமா துறையில் கை கொடுக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.