அக்ஷயா உதயகுமார் சினிமா துறையில் சாதிக்க வந்ததன் காரணம் என்ன?
அக்ஷயா உதயகுமார் கேரள மாநிலத்தில் பாலக்காட்டில் பிறந்து வளர்ந்து இருக்கிறார். இவர் ஒரு மலையாளி ஆவர். அவருக்கு அப்பா, அம்மா, அண்ணன் என சிறு குடும்பம் உள்ளது. பள்ளி கல்லூரி படிப்புகள் முடித்திருக்கிறார்.
பள்ளியில் சிறுவயதில் இருக்கும் பொழுது ஒரு நாடகம் ஒன்று நடித்தார். அந்த நாடகத்தில் நடித்ததின் மூலம் இவருக்கு வரவேற்பு கிடைத்தது. அப்பொழுது இருந்து இவருக்கு நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது.
இவர் தமிழ் மொழி நன்றாக பேசுவார். கேரளத்தில் இருந்தாலும் விஜய் உடைய ரசிகர். தானும் ஒரு நடிகராக வேண்டும் என்பது அவருக்கு விருப்பமாக இருந்தது.
இவருக்கு நடனம் ஆடுவதிலும் ஆர்வம் அதிகமாக இருந்தது. சமூக வலைத்தளங்களில் நடனமாடி ரீல்ஸ்ளை பதிவிட்டு வந்திருந்தார்.
இதன் மூலம் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இவர் மட்டும் நடனமாடி பதிவிடுவது மட்டுமில்லாமல் தன் அண்ணனுடன் சேர்ந்து காதல் பாடல்களுக்கு நடனம் ஆடி ரீல்ஸ், ஷார்ட்ஸ் பதிவிடுவார்.
இதன் மூலம் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அக்ஷயா படங்களில் உள்ள சீன்ஸ்களை நடிகர்களைப் போல் நடித்துக் காட்டுவார். Read more
அவருடைய அண்ணன் ஐடி துறையில் இருந்தாலும் அவருக்கு நடிப்பு மீது ஆசை அதனால் தங்களுடன் ரீல்ஸ்கள் பதிவிடுவதையும் செய்து வந்திருந்தார்.
இவர் மாடலிங் துறையிலும் வலம் வந்தவர். டிக் டாக் ரிலீஸ் போடுவதில் பெரும் பிரபலமடைந்தார்.
காதல் பாடல்களில் நடிப்பதன் மூலம் இவர்கள் இருவரையும் காதலர்கள் எனவும் கிசுகிசு வந்தது பிறகு நாங்கள் அண்ணன், தங்கை என அறிவித்தார்.
மீம்ஸிகளை அப்படியே ரீகிரேட் பண்ணி போடுவதில் வல்லவராக திகழ்ந்தார்.இதுவே அவருக்கு திரை துறையில் நடிக்க அடித்தளமாக அமைந்தது.
அக்ஷயா சினிமா துறையின் சாதிக்க வேண்டும் என்று அவருக்கு விருப்பமாக இருந்தது. சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதன் மூலம் லவ் டுடே பட இயக்குனரான பிரதீப் அவர்கள் படத்தில் நடிக்க தேர்ந்தெடுத்தார்.
லவ் டுடே படத்தில் சிறிய கதாபத்திரமாக இருந்தாலும் இவரின் நடிப்பு திறமையின் மூலம் பெரும் வரவேற்பு பெற்றார். இவருக்கென தனி அடையாளம் இப்படத்தின் மூலம் ஏற்பட்டது.
சிபி என்ற மலையாள படம் ஒன்றே நடித்துள்ளார். ஆனாலும் இவருக்கு தமிழ் திரை உலகில் நடிக்க வேண்டும் என்பது மட்டுமே அவருடைய குறிக்கோளாக உள்ளது.
தமிழ்நாட்டில் பிரபலமடைய வேண்டும் என்பதே அவருடைய விருப்பம் ஆக இருந்தது. தமிழ்நாட்டு ரசிகர்கள் தமிழ் நடிகர்களை போற்றுவதை பார்த்ததால் தானும் தமிழ்நாட்டில் நடிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அக்ஷயா கலந்து கொள்ளப் போகிறார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் இவருடைய விருப்பம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை இந்நிகழ்ச்சியில் 100 நாட்கள் இருந்து போட்டியில் விளையாடி வெற்றி பெற வேண்டும் என்பது அவருடைய குறிக்கோள். அக்ஷயாவின் குறிக்கோள்கள் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.