பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வெற்றிகரமாக போராடி வென்ற ஜெப்ரி

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வெற்றிகரமாக போராடி வென்ற ஜெப்ரி

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வெற்றிகரமாக எட்டு வாரங்கள் முடிவடைந்த நிலையில் ஒன்பதாவது வாரத்தை போட்டியாளர்கள் கலந்து வந்துள்ளனர்.

Jeffry won the battle successfully
Jeffry won the battle successfully

ஒன்பதாவது வாரத்தில் வீக்லி டாஸ்க் என்னும் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற போட்டியில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுவார்கள். இதனை தொடர்ந்து 17 போட்டியாளர்களும் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

Read more…ராயன்க்கு ரெட் கார்டு! விஜய் சேதுபதி ராஜினாமா செய்வாரா?

முதல் ரவுண்டில் சௌந்தர்யா வெளியேற்றப்பட்டார். நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற போட்டியில் மற்றவர்களுடைய பொம்மையை எடுத்துக் கொண்டு யார் முதலில் பொம்மை வீட்டில் வைக்கிறார் என்பது தான் இந்த போட்டியின் முடிவு.

அதன் அடிப்படையில் இரண்டாம் போட்டியில் ராணு வ வெளியேற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து தீபக் மூன்றாம் போட்டியிலும், தர்ஷிகா நான்காவது போட்டியிலும், அன்ஷிதா ஐந்தாவது போட்டியிலும், முத்துக்குமரன் ஆறாவது போட்டியிடும் வெளியிடப்பட்டார்கள்.

ஒவ்வொரு ரவுண்டும் முன்னேற முன்னேற போட்டி மிகக் கடுமையாக வைக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் ஜாக்லின் மற்றும் விஷால் இருவரும் தங்களின் பொம்மையை பொம்மை வீட்டிற்குள் எடுத்து செல்லாததால் ஏழாவது ரவுண்டில் இருவரும் வெளியேற்றப்பட்டார்கள்.

எட்டாவது ரவுண்டில் சத்யா வெளியேறினார். அதனை பின்தொடர்ந்து ரையான் ஒன்பதாவது ஆண்டிலும், ரஞ்சித் பத்தாவது ஆண்டிலும், வெளியேற்றப்பட்டனர்.

Read more…Sabarimalai Ayyapan | ஐயப்பனுக்கு மாலை போடுவதற்கு முன் இதை மறந்து விடாதீர்கள்
அதற்கு அடுத்ததாக டாப் 10 என்ற தரவரிசையின் படியில் ரஞ்சித் பத்தாவது இடத்தில் வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆனந்தி 11 வது இடத்திலும், மஞ்சுரி 12வது இடத்தில் வெளியேற்றப்பட்டார்.

மீதம் இருக்கும் பவித்ரா, அருண், சாச்சனா, சிவா மற்றும் ஜெஃப்ரி இவர்களுக்கிடையே மிகப்பெரிய போராட்டம் ஏற்பட்டது. 13 ஆவது ரவுண்டில் பவித்ரா வெளியேற்றப்பட்டார்.

பிறகு போட்டியாளர்களால் அருண் தடை செய்யப்பட்டு அதாவது அருணின் பொம்மை தடை செய்யப்பட்டு அருண் வெளியேற்றப்பட்டார்.

டாப் 3 போட்டி சாச்சனா, சிவா, ஜெஃப்ரி

கடைசியாக மூன்று போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் புது விதிமுறைகளை அறிவித்தார். சாச்சனா, சிவா, ஜெஃப்ரி டாப் 3 தரவரிசையில் இடம் பெற்று இருந்தனர்.

இவர்களில் யாராவது ஒருவர் தான் இந்த போட்டியை வெல்ல முடியும். இதன் அடிப்படையில் இதுவரை தங்களின் பொம்மைகளை தாங்களே எடுத்து மறைத்து வைத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை நீக்கப்பட்டது.

கேப்டன் தீபக் அவர்களால் பிக் பாஸ் அறிவுரையின் பேரில் தீபக் சாசன, சிவா, ஜெஃப்ரி இவர்களின் பொம்மைகளை எடுத்து அவர்களுக்கு தெரியாமல் மறைத்து வைக்க வேண்டும் என்பது தான் பிக் பாஸ் இன் அறிவுரை.

அதன் அடிப்படையில் மூவரும் யாருடைய பொம்மை எங்கு உள்ளது என்று தெரியாமல் மிகுந்த கடினத்தோடு இப்போது போட்டியை விளையாட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

டாப் 3 போட்டியில் அதிர்ஷ்டவசமாக சாச்சனா வெளியேற்றப்பட்டார். கடைசியாக ஜெஃப்ரி, சிவா இருவரும் டாப் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.

இருவரில் யார் இப்போது வெல்ல போவார் என்ற எதிர்பார்ப்பு போட்டியாளர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. கடைசிப் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் பிக் பாஸ் புதிய விதிமுறையை அறிவித்தார்.

அதாவது ஜெஃப்ரி, சிவா இருவரும் இந்த போட்டியை விளையாட போவதில்லை என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

இவர்கள் இருவருக்கு பதிலாக வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேக்ஸ் யாராவது ஒருவர் ஜெஃப்ரிக்காகவும், சிவாவுக்காகவும் விளையாட வேண்டும்.

புதிய விதிமுறையை பிக் பாஸ் அறிவித்தார். அதன் அடிப்படையில் ஜெஃப்ரி ரியான் அவரை தனக்கு பதிலாக விளையாட தேர்வு செய்தார். சிவா தனக்கு பதிலாக அருண் அவர்களை விளையாட தேர்வு செய்தார்.

இதன் அடிப்படையில் கடைசி போட்டி நடைபெற்றது யாரும் எதிர்பாராத விதமாக அருண் ஜெஃப்ரி பொம்மையை எடுத்து விட்டதால், வேற வழி இன்று பொம்மை வீட்டில் முதலில் அருண் எடுத்துக் கொண்டு போய் வைத்ததால்.

ஜெஃப்ரி இந்த போட்டியில் வின்னராக அறிவிக்கப்பட்டது. இது போட்டியாளருக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. Jeffry won the battle successfully

சிவாவுக்கு பதிலாக அருண் விளையாடினார். ஆனால் ஏன் அருண் ஜெஃப்ரி பொம்மையை எடுத்துக் கொண்டு சென்றார் என்ற கேள்வி போட்டியாளர்களிடையே எழும்பி உள்ளது.

இருந்தாலும் இந்த போட்டியில் ஜெஃப்ரி வென்றுள்ளதால் அடுத்த வாரம் இவரை யாராலும் நாமினேஷன் செய்ய முடியாது என்ற ஒரு வெற்றியை அடைந்துள்ளார்.

இந்த விளையாட்டு மக்களை பெரிதும் ஏற்றுள்ளது.

தொடர்ந்து ஜெஃப்ரியின் ஆட்டம் போட்டியாளர்களிடையே கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் மிகுந்த ஆதரவை பெற்ற ஜெஃப்ரி டாப் 10 போட்டியாளராக வருவாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

ஜெஃப்ரியின் விளையாட்டு உங்களுக்கு எந்தவிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்ற உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். Jeffry won the battle successfully

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top