ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 (இரண்டாம் பாகம்) கதாநாயகி இவரா அதிகாரப்பூர்வ தகவல்
ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 (இரண்டாம் பாகம்) கதாநாயகி இவரா அதிகாரப்பூர்வ தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி. இத்திரைப்படம் 2005ஆம் ஆண்டு வெளியாகியது. இப்படத்தில் ரஜினிகாந்த் பிரபு நயன்தாரா ஜோதிகா வடிவேலு மற்றும் பல முன்னணி நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் மக்களிடையே மாபெரும் வெற்றியை அடைந்தது. அதேசமயத்தில் வசூல் ரீதியாகவும் நல்ல வசூலை ஈட்டி தந்தது. அதனால் இந்த திரைப்படம் மக்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாகவும் வெற்றிப்படமாக அமைந்தது.
இதற்கு முக்கிய காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றும் சொல்லலாம். மொத்தம் 19 கோடி செலவு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் முதலீடுக்கு அதிகமாகவே இந்த படம் சுமார் 70 கோடி வசூல் ஈட்டி பாக்ஸ் ஆபீஸ் இடம்பெற்றது.
மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தை இப்பொழுது இரண்டாம் பாகம் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியானது. இதனால் சந்திரமுகி பாகம் 2 படத்தில் ரஜினிகாந்த் நடிப்பாரா என்ற கேள்வியும் மக்களிடையே எழும்பியது.
சந்திரமுகி படம் ரஜினிகாந்த் மற்றும் ஜோதிகா இருவரும் தான் என்று மக்கள் மனதில் அந்த கதாப்பாத்திரம் அழகாக பதிந்தது. அந்த அளவிற்கு இருந்தது.
ஆனால் இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் பதிலாக ராகவாலாரன்ஸ் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் படத்தின் முதல் போஸ்டர் வெளியிட்டது படக்குழு.
படத்தின் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் மிகப் பெரிய ஆச்சரியத்தை கண்டதுபோல் வியந்தனர். சூப்பர் ஸ்டாருக்கு நிகராக யாராவது நடிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது.
முக்கியமாக சந்திரமுகி படம் சுமார் 800 நாட்களுக்கு மேல் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் என்பதால் தான். பாகம்-2 அந்த படத்தில் பாதி அளவுக்காவது ஈடுகட்ட வேண்டும் என்ற பயம் எல்லோருக்கும் இருந்தது.
இந்த பயம் இருக்கும் தருணத்தில் தான். பாகம் 2 யார் நடித்தால் சரியாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தபோது இதற்கு முன்பு காஞ்சனா முதல் பாகம் காஞ்சனா இரண்டாம் பாகம் மற்றும் காஞ்சனா மூன்றாம் பாகம் என்று மூன்று விதமான கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்த ராகவா லாரன்ஸ் இக்கதைக்கு சரியாக இருக்கும் என்று கருதினர்.
ஆதலால் இவர் சந்திரமுகி பாகம் 2 படத்தில் நடித்தால் கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருக்கும் என்று தயாரிப்பாளரும் மற்றும் ரசிகர்களும் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்திருந்தனர்.
இந்தக் கருத்துக்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு சில மாதங்களுக்கு முன்பு சந்திரமுகி பாகம் 2 முதல் போஸ்டரை தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
அந்த முதல் போஸ்டரில் ராகவா லாரன்ஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் கதாநாயகன் கதாநாயகியாக நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அந்த போஸ்டர் இருந்தது. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
சந்திரமுகி பாகம் 2 படத்தையும் பி வாசு அவர் தான் இயக்குகிறார். முதல் பாகத்தைப் போலவே சந்திரமுகி இரண்டாம் பாகம் மக்களுக்கு பிடிக்கும் அளவிற்கு அதேசமயம் ரசிகர்கள் கொண்டாட கூடிய வகையிலும் படத்தை இயக்கப்போவதாக இயக்குனர் வாசு அண்மையில் தெரிவித்திருந்தார்.
மேலும் இப்படத்தில் காமெடி புயல் வடிவேலு நடிக்கப் போகிறார். ராதிகா சரத்குமார் லட்சுமி மேனன் போன்ற முன்னணி நடிகைகளும் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து இன்று ஒரு போஸ்டர் வெளியிட்டது கங்கனா ரனாவத் என்ற முன்னணி நடிகை நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. படத்திற்கு பலமாக அமைந்துள்ளது என்று கூறலாம்.
ரசிகர்களும் இந்த போஸ்டரை பார்த்த பிறகு இன்னும் யார் யார் இந்த படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});