லோகேஷ் கனகராஜின் மாஸ் திரைப்படம் எது?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் திரைப் பயணங்கள்
லோகேஷ் கனகராஜ் அவர்கள் திரைத்துறையில் இயக்குனராக சாதிக்க வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருந்தது. கோயம்புத்தூரை சேர்ந்தவர்.
இவருக்கு நிறைய படங்களை பார்ப்பதின் மூலம் இயக்குனராக வேண்டுமென ஆர்வம் ஏற்பட்டது. இருக்கு உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் ரசிகர்.
எம்.பி.ஏ படித்து முடித்து இருக்கிறார். வீட்டில் பண கஷ்டத்தின் காரணமாக இவர் பேங்க் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார். அவருடைய மனைவிடம் எனக்கு இயக்குனராக வேண்டும் என கேட்டார்.
அதற்கு மனைவி உங்களுக்கு விருப்பமான வேலையை செய்யுங்கள் நான் வேலைக்கு போகிறேன் எனக் கூறினர். சினிமாவைப் பற்றி படிக்கவில்லை. யாரிடமும் இயக்குனராக வேலை செய்யவில்லை.
தனது நம்பிக்கையின் அடிப்படையில் இயக்குனராக சினிமாவில் அடி எடுத்து எடுத்து வைத்திருக்கிறார். குறும்படங்களை எடுத்திருக்கிறார்.
மாநகரம்
இதன் மூலம் அவரது முதல் திரைப்படமான மாநகரம் படத்தை எடுத்தார். அது வெற்றி படமாக அமைந்தது. படத்தில் ஸ்ரீ அவர்கள் நடுத்திருக்கிறார். இப்படத்தின் கதையில் கதாநாயகனின் பெயர் மற்றும் ஒரு சில கதாபாத்திரங்களின் பெயர் தெரியாமல் இப்படத்தை எடுத்திருப்பார்.
படம் முடிவில் பெயர் அறிய முடியும் அந்த அளவிற்கு யோசித்து எடுத்து இருப்பார். மாநகரம் படம் மூணு கோடி வசூலை தந்தது.
கைதி
லோகேஷ் கனகராஜ் கைதி என்ற திரைப்படத்தை எடுத்தார். இப்படத்தில் நடிகர் கார்த்திக் அவர்களை வைத்து எடுத்துள்ளார்.
இந்த படம் கைதி என்பதால் ஜெயில் செட்டிங்ஸ் நிறைய செய்திருப்பார். அப்பா மகளின் கதை, போதை பொருள் விற்கும் கும்பலை கண்டு பிடிப்பது குறித்த கதை.
நகைச்சுவை இல்லாமல் எடுக்கப்பட்ட படமாக இருந்தது. இப்படத்தில் ஸ்கிரீன் பிலே மிகவும் நன்றாக இருக்கும். கைது படத்தின் வசூல் 15 கோடி பெறப்பட்டது.இப்படமும் பிளாக்பஸ்டர் படமாக திகழ்ந்தது.
மாஸ்டர்
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் எடுக்கப்பட்டது. படத்தில் காதல் காட்சிகள் மற்றும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் விஜய் ஆசிரியராக இருப்பார்.
பள்ளியில் நடக்கும் கொடுமைகளையும் அதில் இருக்கும் வில்லனின் அட்டகாசங்களை அடக்கி பிள்ளைகளை நல்வழிப்படுத்துவார் என்பது படத்தின் கதை. இந்த படம் 125 கோடி வசூல் பெறப்பட்டது. இப்படமும் பிளாக்பஸ்டர் படமாக திகழ்ந்தது.
விக்ரம்
லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு உலகநாயகன் கமல் அவர்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என ஆசை. அந்த ஆசை விக்ரம் படத்தின் மூலம் நிறைவேறியது.
கதாநாயகனாக கமல் அவர்கள் நடித்திருப்பார். படத்தில் சண்டை காட்சிகள் அதிகமாக வைத்திருப்பார். இந்த படம் 90 கோடி வசூலை பெறப்பட்டது. இப்படமும் பிளாக்பஸ்டர் படமாக திகழ்ந்தது.
லியோ
லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து இருக்கிறார். அவர் தற்போது தளபதி விஜய் அவர்களுடன் சேர்ந்து லியோ என்ற திரைப்படத்தை எடுத்திருக்கிறார்.
இப்படம் சண்டை காட்சிகள் அதிகமாக கொடுத்திருப்பாரா இல்லை குடும்பப் பாங்கான படமா எடுத்திருப்பாரா என பார்ப்போம்.
லியோ படம் பல சர்ச்சைகளில் இருந்து இருக்கிறது வெளியாகி இருக்கிறது. நிறைய வசூலை பெற்று தருமா என பொறுத்திருந்து பார்க்கலாம். லியோ படத்தை பிளாக் பாஸ்டர் படமாக கொடுத்திருப்பாரா லோகேஷ் கனகராஜ்.