பயணத்தின் 13 வது நாள் மார்ச் மாதம் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை. நேற்று இரவு ஒரு பெட்ரோல் பங்கில் தூங்கி இருந்தோம் அருமையான உறக்கம்.
குளிரும் இருந்ததால் எழுந்துவதற்கு மனம் வரவில்லை அதனால் ஆறு மணி வரை தூங்கிக் கொண்டே இருந்தோம். இறுதியாக எழுந்து தயாராகி விட்டு அங்குள்ள ஊழியர்களிடம் சென்று வருகிறோம் என்று சொல்லிவிட்டு பயணம் தொடங்கியது.
வெயிலின் தாக்கம்
10 கிலோமீட்டர் தொலைவிலேயே பஜார் ஒன்று தென்பட்டது. அங்கே சாப்பிட்டு விடலாம் என்று முடிவு எடுத்தோம்.
இங்கேயும் அதே போல் இட்லி தோசை எல்லாம் கிடையாது பஜ்ஜி போண்டா மிக்சர் போன்ற பொருட்கள் மட்டுமே இருந்தது. வேறு வழி இன்றி பஜ்ஜி சமோசா என்ன சாப்பிட்டுவிட்டு பயணம் தொடங்கியது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் சரியாக பயணம் செய்ய முடியவில்லை. அடிக்கடி மரத்தின் நிலை இல்லாமல் நின்று கொண்டு பயணம் தொடங்கி கொண்டு இருந்தது.
சாப்பிடுவதற்கு இடம் தெரியும் கடை கிடைக்கவில்லை.
சாலைக்கு எதிர்ப்புறத்தில் ஒரு தாபா கடை இருப்பதை கண்டோம் சரி என்று சைக்கிளை திருப்பிக் கொண்டு அங்கு சென்று போய் விலை நீ கேட்டோம்.
250 ரூபாய்
கேட்டவுடனே திரும்பி வந்து விட்டோம் ஏனென்றால் 250 ரூபாய் chicken fried rice.
வெகு தூரம் தேடியும் கடைகள் கிடைக்கவில்லை. அதனால் போட்டி கடையில் போய் உட்கார்ந்தே அங்குள்ள பின்பு தின்பண்டங்களை சுவைக்க ஆரம்பித்தோம்.
நூறு ரூபாய் வரைக்கும் சிறிய பொருட்களையே வாங்கி சாப்பிட்டு விட்டோம். பின்பு பயணம் தொடங்கியது.
ஆனால் மறுபடியும் வெயில் அதிகமாக இருப்பதால் மரத்தடியில் உட்கார்ந்து ஓய்வெடுத்தோம். எங்களுக்கு அருகில் ஒரு பானி பூரி கடை இருந்தது.
மகாராஷ்டிரா போண்டா பஜ்ஜி Ladakh Cycle பயணம்
ஓய்வெடுத்து முடித்துச் செல்லும்போது அதனையும் சுவைத்து பார்த்து விட்டுச் சென்றோம்.
நாலு மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது ஜியோ பெட்ரோல் பந்தினை பார்த்தவுடன் குடித்து விட்டது. புதிதாகவும் அழகாகவும் இருந்தது சரி ஒரு வார்த்தை கேட்டு பார்ப்போம் என்று அவர்களிடம் போய் கேட்டோம்.
ஆனால் அவர்கள் மேனேஜர்களிடம் கேளுங்கள் என்று கூறிவிட்டனர். இருக்கும் ஊழியர்கள் உள்ளே சென்று மேனேஜர் இடமும் உதவி கேட்டோம்.
ஆனால் இருவரில் ஒருவர் ஒற்றுக்கொள்ளவில்லை மறுப்பு தெரிவித்தார். ஆனால் மற்றொருவர் பலத்தே நான் உதவுகிறேன் என்று பல முயற்சிகள் எடுத்து ஒரு வழியாக அனைவரையும் சம்மதிக்க வைத்தார்.
எங்களிடம் ஆதார் கார்டு இணை புகைப்படம் எடுத்துக்கொண்டு எங்களுக்கு தங்கவும் வழிவகைத்துக் கொடுத்தார்.
ஆனால் அந்த பெட்ரோல் பங்கிலோ இளைஞர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு எங்களை ஒரு வழிபடுத்தி விட்டார்கள்.
அதன் பின்பு சாப்பிடுவதற்கு உணவகம் எங்கே இருக்கின்றது என்பதை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தாபா மட்டுமே உள்ளது.
அங்குதான் சாப்பிட்டாக வேண்டும் என்று முடிவெடுத்து அங்கு சென்றோம்.
சப்பாத்தி விலை பத்து ரூபாய் தான் ஆனால் அதற்கான சப்ஜியின் விலை 120 ரூபாயாம். Chicken Fried Rice 250 Rupess Ladakh Ride Day 13
அதனால் நான்கு சப்பாத்தியும் ஒரு சப்ஜியும் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தோம்.
அப்பொழுது நண்பரிடம் இருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது நான் உங்களை நோக்கி தான் வந்து கொண்டே இருக்கிறேன்.
வாருங்கள் என்று சாலையோரம் போய் அவருக்காக காத்திருந்து அவரை சந்தித்து அவரிடம் பேசிவிட்டு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டு அவரை வழி அனுப்பி வைத்துவிட்டு நாங்கள் சாப்பிட வந்து விட்டோம்.
சப்பாத்தியையும் டாலையும் சாப்பிட்டு விட்டு பெட்ரோல் பங்குக்கு திரும்பி சென்றோம். தூங்கும் வரையிலும் அங்குள்ள இளைஞர்கள் பேசிக் கொண்டும் கேள்வி கேட்டுக் கொண்டும் இருந்தார்கள். ஒரு வழியாக அன்று இரவு பத்திரமாக தூங்கினோம்.
Distance:100
Food cost: 210
Night stay: petrol bank