Trisha

பிக் பாஸ் 7 கானா பாலா பற்றி உங்களுக்கு தெரியுமா?

Do you know about Bigg Boss Season 7 Ghana Bala?

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளர்களில் கானா பாலாவை பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியில் விறுவிறுப்பை அதிகப்படுத்த வைல்ட் காடு போட்டியாளர்களை உள்ளே அனுப்பப்படுகிறார்கள்.

போன சீசன்களில் ஒரே வீடு என்பதால் ஒரு போட்டியாளர் மட்டுமே வைல்ட் காடாக உள்ளே வருவார்கள்.

தற்போது பிக் பாஸ் வீடு இரண்டு என்பதால் 5 போட்டிகள் உள்ளே வரப்போகிறார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

5 போட்டியாளர்களில் சிறிய பிக் பாஸ் வீட்டிற்கும் பெரிய பிக் பாஸ் வீட்டிற்கும் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வரப்போகிறார்கள்.

வைல்ட் காடு போட்டியாளர் உள்ளே வரப்போகும் நபர் கானா பாலா .

இவருடைய பெயர் பாலமுருகன் அதை சுருக்கி பாலா என வைத்திருக்கிறார்.

இவர் பன்னிரண்டாவது படிக்கும் பொழுது கானா பாடல்கள் பாடி இருக்கிறார்.

இவர் படிப்பு முடித்து கல்லூரி படிப்பில் பாட்டனி படுத்திருக்கிறார்.

கலைஞர் தொலைக்காட்சியில் கானா பாடல்கள் பாடி டைட்டில் வின்னர் ஆகவும் இருந்திருக்கிறார்.

கானா பாலா கானா பாடல்கள் எழுதுவதில் வல்லவர். கானா பாடல்களுக்கு புகழ் பெற்ற தேனிசைத் தென்றல் தேவா அவர்களை தொடர்ந்து கானா பாலா என பெயர் பெற்றிருக்கிறார்.

தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகராக வளம் வந்திருக்கிறார்.

கானா பாடல்களை எழுதுவதிலும் சிறந்தவராக இருக்கிறார்.

பாடல்கள் எழுதுவதில் மட்டுமில்லாமல் பல படங்களில் நடித்திருக்கிறார்.

2007 ஆம் ஆண்டு சிறகு என்ற படத்தில் பாடகராக அறிமுகம் ஆகியிருக்கிறார். அந்தப் படத்திலேயே மெக்கானிக்காக ஒரு காட்சி நடித்திருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா ஜிவி பிரகாஷ் ஆகிய இசையமைப்பாளர்களிடம் பணியாற்றி இருக்கிறார்.

கானா பாலா பிரபலமடைந்த பாடல் அட்டக்கத்தி படத்தில் ஆடி போன தாவணி என்ற பாடலும் நடுக்கடலில் கப்பலை இறங்கி தள்ள முடியுமா என்ற பாடல் பாடியதால் அவர் பெரும் பிரபலம் அடைந்தார்.

Nh4 ,சூது கவ்வும் போன்ற படங்களில் எழுதி பாடியிருக்கிறார்.

அது மட்டும் இன்றி நிறைய ஆல்பம் பாடலும் பாடியிருக்கிறார்.

இவருக்கு அரசியல் ஈடுபாடு அதிகமாக உள்ளது.ஒருமுறை வேட்பாளராகவும் போட்டியிட்டார்.

கானா பாலாவின் பாடல்களுக்கு என தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

பல பாடல்களை எழுதியும் பாடல்கள் பாடியும் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறார்.

கானா பாலா படங்களும் பாடல்களைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருக்கும் பிக் பாஸ் சீசன் 7 போட்டியில் போட்டியாளராக வரப்போகிறார் .

வயது அதிகமானவராக இருந்தாலும் சகப் போட்டியாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வாரா கானா பாலா.

பிக் பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்களைக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

சண்டைகளும் விறுவிறுப்புகள் இருந்தாலும் சுவாரசியம் குறைந்து இருக்கிறது.

சுவாரசியம் குறைந்திருக்கும் பிக் பாஸ் வீட்டில் கானா பாலா சென்று சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துவாரா என எதிர்பார்க்கலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வந்து போட்டியை விறுவிறுப்பாக கொண்டு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *