விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியின் விறுவிறுப்பை அதிகப்படுத்த வைல்ட் காடு போட்டியாளர்களை உள்ளே அனுப்பப்படுகிறார்கள்.
போன சீசன்களில் ஒரே வீடு என்பதால் ஒரு போட்டியாளர் மட்டுமே வைல்ட் காடாக உள்ளே வருவார்கள்.
தற்போது பிக் பாஸ் வீடு இரண்டு என்பதால் 5 போட்டிகள் உள்ளே வரப்போகிறார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
5 போட்டியாளர்களில் சிறிய பிக் பாஸ் வீட்டிற்கும் பெரிய பிக் பாஸ் வீட்டிற்கும் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வரப்போகிறார்கள்.
பிரதீப் ஆண்டனியின் தமிழ் கலாச்சார நோக்கம் |
போட்டியாளர்கள்
வைல்ட் காடு போட்டியாளர் பிக் பாஸ் செவன் வீட்டிற்கு உள்ளே வரப்போகும் போட்டியாளர்கள் அர்ச்சனா, கானா பாலா, அண்ணா பாரதி, தினேஷ், ஆர் ஜே ப்ரா ஆகியோர் வரப் போகிறார்கள்.
முதலில் வர போகும் போட்டியாளர் அர்ச்சனா. அர்ச்சனா 1997 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் ஆண்டு சென்னையில் பிறந்து வளர்ந்திருக்கிறார்.
சிறிய வயதில் இருந்து வீஜேவாக வேண்டும் என்று விருப்பம். சமூக வலைத்தளங்களில் டிக் டாக் வீடியோக்கள் செய்வதன் மூலம் பிரபலம் அடைந்தார்.
டிக் டாக் வீடியோஸ்கள் போடுவதின் மூலம் குயின் ஆப் த டிஜிட்டல் மீடியா என அங்கீகாரம் பெற்றிருந்தார்.
ஆதித்யா சேனலில் ஆர் ஜே வாக பணியாற்றினார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருந்த ராஜா ராணி தொடரில் இவர் நடித்திருந்தார்.
இதன் மூலம் பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ள முடிவெடுத்து வயல்காடு போட்டியாளராக உள்ளே வரப்போகிறார்.
இவருடைய பெயர் பாலமுருகன் அதை சுருக்கி பாலா என வைத்திருக்கிறார்.
விஜய் வர்மா அவரின் விடாமுயற்சி பயணங்கள் |
இவர் பன்னிரண்டாவது படிக்கும் பொழுது கானா பாடல்கள் பாடி இருக்கிறார்.
கலைஞர் தொலைக்காட்சியில் கானா பாடல்கள் பாடி டைட்டில் வின்னர் ஆகவும் இருந்திருக்கிறார்.
கானா பாலா கானா பாடல்கள் எழுதுவதில் வல்லவர். கானா பாடல்களுக்கு புகழ் பெற்ற தேனிசைத் தென்றல் தேவா அவர்களை தொடர்ந்து கானா பாலா என பெயர் பெற்றிருக்கிறார்.
2007 ஆம் ஆண்டு சிறகு என்ற படத்தில் பாடகராக அறிமுகம் ஆகியிருக்கிறார்.
கானா பாலா பிரபலமடைந்த பாடல் அட்டக்கத்தி படத்தில் ஆடி போன தாவணி என்ற பாடலும் நடுக்கடலில் கப்பலை இறங்கி தள்ள முடியுமா என்ற பாடல் பாடியதால் அவர் பெரும் பிரபலம் அடைந்தார்.
கானா பாலாவின் பாடல்களுக்கு என தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
அன்ன பாரதி இவர் பட்டிமன்ற பேச்சாளர். பாயிண்டுகள் எடுத்து வைத்து பேசுவதில் வல்லவர்.நகைச்சுவை கலந்த பேச்சாளர்.
ராஜ் டிவி ஜெயா டிவி போன்ற பல நிகழ்ச்சிகளில் பட்டிமன்றத்தில் பேசி இருக்கிறார்.
பிக் பாஸில் வந்து பாய்ண்ட்டுடன் எடுத்து பேசி நிகழ்ச்சியை எப்படி கொண்டு செல்ல போகிறார் என பார்க்கலாம்.
தினேஷ் ரக்ஷிதா அவர்களின் கணவர். ஜீ தமிழ் விஜய் தொலைக்காட்சியில் நாடகங்களில் நடித்திருக்கிறார்.
அதனால் இவரின் முகம் அனைவரும் அறிந்திருக்கின்றனர்.
ஆர் ஜே ப்ரா அவர்கள் துபாயில் ஆர்.ஜே வாக வேலை செய்து கொண்டிருக்கிறார். கன்டென்ட் கிரியேட்டராக இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆர் ஜே வாகா பெரிதும் பிரபலம் அடைந்திருக்கிறார். இவர் துபாய் மலேசியா போன்ற வெளிநாடுகளில் நகைச்சுவை கலந்த வீடியோஸ்கள் பதிவிடுவார்.
இதன் மூலம் இவர் பிரபலமடைந்தார் தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7ல் வைல்ட் காடு போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார்.
போட்டியாளர்கள் ஐந்து பேரும் வீட்டில் உள்ளவர்களை பற்றி அறிந்து கொண்டும் மக்களின் கருத்துக்களை தெரிந்து கொண்டு பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே வரப் போகிறார்கள் இனி என்ன நடக்கவே இருக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வந்து போட்டியை விறுவிறுப்பாக கொண்டு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.