பூர்ணிமா ரவி அவர்களின் குறும்புத்தனம் மற்றும் சினிமாவிற்கு எப்படி வந்தார் என்பதை பற்றி பார்ப்போம். பூர்ணிமா ரவி வேலூரில் பிறந்து வளர்ந்திருக்கிறார்.
இவருக்கு தாய், தந்தை, ஒரு அண்ணன் உள்ளனர். அவர் அண்ணனுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது.
அந்த குழந்தையுடன் விளையாடுவது மிகவும் பிடிக்குமாம். சிறு வயதில் விளையாடுவதில் விருப்பமுடியவர். எல்லோரிடமும் ஜாலியாகவும் இருக்கும் ஒரு பெண்.
அவருக்கு நண்பர்கள் அதிகம். நண்பர்களினால் சில ஏமாற்றங்கள் அடைந்தாராம்.
பள்ளி படிப்பு பள்ளி படிப்பு முடிந்ததும் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து முடித்தார். பள்ளியிலேயே நடனம் ஆடுவார்.
அப்போது அவருக்கு நடனத்தில் ஆர்வம் ஏற்பட்டது. அம்மா கண்டிப்பானவர். தந்தை உனக்கு விருப்பமான செயலை செய் என்று கூறுபவர்.
பிக் பாஸ் 7 சீசனில் மாயா தான் பெஸ்ட் போட்டியாளர்
அவரது கல்லூரியில் நடனத்திற்கான தனி துறை உண்டு. அதில் கலந்து கொண்டு நடனம் ஆடவும் செய்து இருந்தார். அப்போது நிறத்தின் காரணமாக அவமானப்பட்டார். அவர் நிறம் குறைவாக உள்ளதால் அவரை நடனமாடும் பொழுது பின் தள்ளினார்.
அதனால் திறமைகள் இருந்தாலும் நிறத்தின் காரணமாக தன்னை தள்ளி வைக்கிறார் என வருந்தினார்.
பின்னர் கடினமாக உழைத்து கல்லூரியின் நான்காம் ஆண்டு படிக்கும் பொழுது அந்த நடன குழுவுக்கு தலைவருமானார்.
அந்த அளவிற்கு கடின உழைப்பாளி பூர்ணிமா. இதுவே அவருக்கு முதல் வெற்றியாம்.
சென்னையில் படித்து முடிந்தவுடன் ஐ டி கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தனர். ஒன்பது மணியிலிருந்து 6 மணி வரை செய்யும் இயந்திரமான வேலை அவருக்கு விருப்பமில்லை.
அக்ஷயா ஏன் சினிமா துறைக்கு வந்தார்?
அதனால் அந்த வேலையை விட்டு நின்று விட்டார். அவருக்கு நடனம் பிடிக்கும் என்பதற்காக சினிமா துறையை தேர்ந்தெடுத்தார். சினிமாவில் சாதிக்க வேண்டும் என எண்ணினார்.
சமூக வலைத்தளங்களில் வீடியோஸ் போடுவது, கன்டன்ட் கிரியேட்டர் மற்றும் எடிட்டிங் செய்வது போன்றவைகள் அவருக்குத் தெரிந்திருந்தது.
இதன் மூலம் அவரை யூடியூபில் வேலை செய்வதற்கு அழைத்தார்களாம்.
தவிர்க்க முடியாத காரணத்தினால் செல்ல முடியவில்லை. பிறகு திரும்ப அழைத்தார்களாம். அப்போது வேலையில் சேர்ந்து கொண்டார்.
இவர் எந்தப் பிரச்சனை வந்தாலும் சோர்ந்து விடாமல் தைரியமாக நின்று போராடுவார். தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சமூகவலைத்தளங்களில் நடனமாடி வீடியோஸ்கள் பதிவிட்டார்.
பிறகு அதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். அதனால் இவர் ஒரு சமூக வலைத்தளத்தில் யூடியூபராக வந்திருக்கிறார். சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதன் காரணமாக அவருக்கு லேடிஸ் சூப்பர் ஸ்டார் என அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.
இவ்வளவு செய்து இருந்தாலும் தனக்கென பெரிய வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை என நினைத்து சினிமா துறையில் நுழைந்தார்.
இவர் ஒரு யூட்யூபராகவும் நடிகராகவும் திகழ்ந்தார். படங்களும் நடித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கலந்து கொள்ளப் போகிறார். இந்நிகழ்ச்சியின் மூலம் தனது அடையாளத்தை வெளிக்காட்ட வேண்டும் என்பதே அவருடைய விருப்பம்.
அவருடைய பலம் வாய்தான் அவரின் பலவீனமும் அவருடைய வாய்தான் எனக்கு கூறினார். பிக் பாஸ் வீட்டில் அதிகமாக பேசி மாட்டிப்பாரா இல்லை வாயை வைத்து விளையாடி வெற்றி பெறுவாரா என்பதை காணலாம்.