பிரதீப் ஆண்டனி தமிழ் கலாச்சாரத்தை பற்றி எடுத்துரைப்பதின் நோக்கம் என்னவென்று பார்க்கலாம். பிரதீப் ஆண்டனி சென்னையை சேர்ந்தவர் இவருக்கு 33 வயதாகிறது.
கல்லூரியில் தாய், தந்தை இருவரும் இல்லை. அவருடைய சித்தி மட்டுமே வளர்த்து வந்திருந்தார். இவர் பள்ளியில் படிக்கும் பொழுது விளையாட்டு விளையாடுவதில் மிகவும் விருப்பமாக இருந்தார்.
அதேபோல் படிப்பிலும் பள்ளியில் முதல் மாணவர். கல்லூரியில் விஸ்காம் என்ற துறையை படித்து இருக்கிறார். அது மட்டும் இன்றி பிலாசபி மற்றும் சைக்காலஜி ஆகிய படிப்புகளும் படித்திருக்கிறார்.
கிரியேட்டிவ் ஹெட் ஆக வேலை செய்து இருக்கிறார். இவருக்கு “லா” படிக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால் அவரிடம் பணம் இல்லாத காரணத்தால் படிக்க முடியவில்லை.
பிக் பாஸ் வீட்டில் உடம்பை காட்டி தான் பிழைக்குமா?
மேல்மருவத்தூரில் ஸ்டேஷன் மாஸ்டர் வேலையும் பணியாற்றி இருக்கிறார். துணிக்கடை ஒன்றிலும் வேலை செய்து கொண்டிருந்தார். விளம்பரம் நிறுவனங்களில் வேலை செய்திருக்கிறார்.
பிரதீப்புக்கு வீடியோ கேம்ஸ், அனிமேஷன் விளையாடுவதில் மிகவும் ஆர்வம் உள்ளவர். புத்தகம் படிப்பது மிகவும் பிடிக்கும்.தமிழ் மீது பற்று அதிகம். அதனால் தமிழ் கலாச்சாரம் பற்றி இயக்குனராகி படம் எடுத்து தமிழ் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பது அவருடைய விருப்பம்.
இவருக்கு நடிகராகவும் வேண்டும் என்பதும் ஆசை. இவர் அறிவு என்ற படத்தில் நடித்திருக்கிறார். கவின் நடித்த டாடா படத்தில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரித்த வாழ் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவ்வாறு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிப்பு திறமையும் இவரிடம் அதிகமாக உள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறுது இவர்தான்
பிரதீப் அவர்களுக்கு நடிகர் மயில்சாமி மிகவும் பிடிக்கும். மயில்சாமி அவர்களுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு விருப்பம்.
ஆனால் எடுக்க முடியவில்லை திடீரென ஒரு நாள் ஹோட்டலில் சந்தித்தார் அவரிடம் உங்களை எனக்கு பிடிக்கும் என கூறினாராம் அப்பொழுது அவரிடம் போட்டோ எடுத்துக் கொண்டார்.
பிரதீப் கவின் உடைய நண்பர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் கலந்து கொண்டிருந்தபோது கவின் உடைய நண்பராக வீட்டிற்கு வந்தார்.
அப்பொழுது பிரதீப், தனது நண்பரான கவினின் கன்னத்தில் அறை விட்டார். இதன் மூலம் பிரபலமடைந்தார்.
பிக் பாஸ் வீட்டிற்கு ஏற்கனவே வந்திருந்ததால் கவினுடைய நண்பர் என்பதாலும் பிக் பாஸ் விளையாட்டு பற்றி இவர் அறிந்திருக்க வாய்ப்புள்ளது.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி கலந்து கொள்ளப் போகிறார்.
பிக் பாஸில் இவர் கடுமையான போட்டியாளர் என எதிர் பார்க்கப்படுகிறது. லா படிக்க பணம் இல்லை என்பதற்காக பிக் பாஸில் விளையாடி வெற்றி பெற்று பணத்தை கொண்டு லா படிக்கப் போவாரா பிரதீப்.
பிக் பாஸ் விளையாட்டில் கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்துவாரா இல்லை தனது கோபத்தை வெளிக்காட்டி அனைவரிடமும் வெறுப்பை சம்பாதிப்பாரா.
நன்றாக விளையாடும் போட்டியாளர் என நல்ல பெயர் வாங்குவாரா பிரதீப் ஆண்டனி. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு என்ன செய்யப் போகிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.