சர்ச்சைகளில் இருந்து வெளியாகி இருக்கும் லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்ததின் கதைச்சுருக்கத்தை பார்க்கலாம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமான அனிருத் இசையில் லியோ படம் தற்போது வெளியாகி இருக்கிறது. இளைய தளபதி
விஜய் நடிக்கும் லியோ படத்தின் கதைச்சுருக்கம் பார்க்கலாம்.
லியோ படத்தில் தளபதி விஜய் அவர்கள் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கனவு கன்னி திரிஷா அவர்கள் கதாநாயகியாக நடித்துள்ளார்.
படத்தை பற்றி பார்க்க வேண்டும் என்றால் காஷ்மீரில் எடுத்து இருக்கிறார். காஷ்மீரில் ஜெயில் போன்ற செட்டிங் நிறைய செய்து இருக்கிறார்கள்.அந்த செட் செய்தவர் சரியாக செய்யவில்லை என தோன்றுகிறது.

இப்படத்தில் நடிக்கும் வில்லன் நடிகர்கள் எதற்காக வருகிறார்கள் என புதிராகவே உள்ளது. ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களுக்கு கொடுத்திருக்கும் கதாபாத்திரம் மொக்கையாக உள்ளது.
விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான முதல் பாதியில் சண்டை காட்சிகள் அதிகமாகவும் காணப்படுகிறது. விக்ரம் படத்தில் உள்ள காட்சிகள் போலிருக்கிறது. படத்தில் வரும் சண்டை காட்சிகள் போலவே இப்படத்திலும் சண்டை காட்சிகள் அதிகமாக காணப்படுகிறது. சண்டைகள் வருகிறது ஆனால் எதற்கு வருகிறது என்பதை புரிவதில்லை. இதனால் ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்படுகிறது.
கிரேஸ் என்னும் படத்தில் மேஜிக் மற்றும் பேயின் கதை போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் என்ற படத்தில் இருந்து கதை எடுக்கப்பட்டிருக்கிறது எனவும் தோன்றுகிறது.

காஷ்மீரில் உள்ள பணி பிரதேசத்திலேயே சண்டைகள் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் நடிகர் விஜய் காஷ்மீரில் பணி க்கட்டியில் சண்டைக் காட்சிகள் செய்திருக்கிறார்.
மாஸ்டர் படத்தில் சண்டைகள் காட்சிகள் இருந்தாலும் அது புரிகிறது. ஆனால் இப்படத்தில் முதல் பாதையில் சண்டை காட்சிகள் ஏன் எதற்கு வருகிறது என்று குழப்பமாக இருக்கிறது. விஜய் அவர்கள் ஒரு ரவுடி ஆக இருந்திருக்கிறார். அவர் மற்ற ரவுடிகளை பழி வாங்குகிறார்.
இரண்டாம் பாதியில் இப்படத்தில் விஜய் த்ரிஷா ஒரு குழந்தை என குடும்பமாக காட்டியிருக்கிறார்கள். குடும்பத்தின் காட்சிகளும்,சண்டை காட்சிகளும் குழப்பமாக இருக்கிறது. இந்த கதை கோர்வையாக வரவில்லை என தோன்றுகிறது. சிறு சிறு நகைச்சுவை காட்சிகளும்
இடம் பெற்றிருக்கிறது.
சர்ச்சைகளில் இருந்து வெளியாகி ஒரு பிரம்மாண்டத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் லியோ படத்தில் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு சுவாரசியமும் இல்லை.

அனிருத் இசை பரவாயில்லை என்றாலும் கதை, திரைக்கதை, வசனம் அனைத்துமே மற்ற படங்களில் இருந்து எடுத்திருக்கிறது போல் நன்றாகவே தெரிகிறது இதனால் இப்படத்தில் மக்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றப்பட்டன என தோன்றுகிறது.
விஜய் ரசிகர்களுக்கு மட்டும் ஓகே எனத் தோன்றும். மற்ற ரசிகர்களுக்கு ஒரு தடவை மட்டுமே பார்க்கலாம் எனத் தோன்றும் அந்த அளவிற்கு லியோ படம் உள்ளது.
சர்ச்சையில் இருந்து வெளியாகி இருக்கும் லியோ படம் பார்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வந்த ரசிகர்களும் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து சென்று மற்ற திரையரங்குகளில் பார்த்த ரசிகர்களுக்கும் பெருத்த ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது.