சரவணா விக்ரம் கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்திருக்கிறார். அப்பா, அம்மா மற்றும் தங்கையுடன் கோயம்புத்தூரில் வசிக்கின்றனர். இவருக்கு குடும்பத்தின் மீது அளவு கடந்த பாசத்துடன் இருக்கிறார்.
அவருடைய தங்கைக்கு என்ன வேண்டுமானாலும் செய்வார். அந்த அளவுக்கு அவங்க தங்கையை அவருக்கு பிடிக்குமாம். வீட்டில் சரவணனுக்கு செல்லப் பெயர் குட்டி இவங்க வீட்டில மூத்த பிள்ளையாம் ஆனா அவங்க சித்தி சித்தப்பா பிள்ளைகள் என்று தங்கை, தம்பிகள் இருக்காங்க.
இவருக்கு சிக்கன் சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். இவர் குணத்தில் அமைதியானவராம். அவர் இருக்கும் இடத்திலே ஒரு பிரச்சனை வந்தால் கூட உடனே கோபத்தை காட்டாமல் அமைதியாக பேசி என்ன பிரச்சனையை சரி பண்ணுவாராம் அந்த அளவுக்கு பொறுமையானவராம் சரவணன் விக்ரம்.
சரவணன சிறு வயதில் இருந்தே நடிப்பதில் ஆர்வம் அதிகம். பள்ளி கல்லூரிகளில் நடிப்பது, பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது போன்ற போட்டிகளிலும் கலந்து கொண்டிருந்தார். அந்த அளவுக்கு நடிப்பது அவருக்கு ரொம்ப பிடிக்குமாம்.
சரவணன் விக்ரம் வீடியோ எடிட்டிங் செய்வாராம். போட்டோ கிராபரா தன்னை வெளிக்காட்டிக்கனும் என்ற நினைத்தார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்தாலும் வாய்ப்புகள் தேடி சென்னைக்கு வந்துள்ளார். வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
தங்குவதற்கு வீடு கிடைக்காத காரணத்தால் மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால் குறிக்கோளை அடைய வேண்டும் என்ற தன்னம்பிக்கையோடு தன் பயணத்தை தொடங்கி இருந்தாராம்.
திரையுலகத்தில் தானும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறு வயதிலிருந்து அவருக்கு தோன்றியது. அவர் குடும்பத்தாரும் துணை நின்று அவரை ஊக்குவித்தனர்.
சரவணனுக்கு சந்தோஷம், கோபம், கஷ்டம் எது இருந்தாலும் திரையரங்குகளுக்கு சென்று படம் பார்த்தால் மன நிம்மதியாக இருக்குமாம். திரையரங்குகளில் சரவணன் கதாநாயகனாக நடித்த படம் ஓடவேண்டும். அதை எல்லாரும் பார்க்க வேண்டும் என்பது அவருடைய குறிக்கோளாம்.
அவருக்கென ஒரு தனி கேமராவை வைத்துக் கொண்டு குறும்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டாராம். தனக்கென வரும் வாய்ப்புகளை தவறவிடாமல் அனைத்திலும் பங்கு பெற்றதால் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
சமூக வலைதளங்களில் சின்ன சின்ன வீடியோஸ் பதிவிட்டதில் அவர் பிரபலம் அடைந்திருந்தார். அதை பார்த்து பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் நடிக்க விஜய் தொலைக்காட்சியில் அழைத்தார்களாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் ஒரு காட்சியில் உண்மையாவே மொட்டை அடுத்து தன் திறமையை வெளிக்காட்டி இருக்கிறார். இந்த நாடகத்தில் கடைக்குட்டியாக நடி நடிப்பதின் மூலம் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்து இருக்கிறார்.
மக்கள் சரவணன் அவர்களை நம்ம வீட்டின் பிள்ளை என்னும் சொல்லும் அளவிற்கு நடித்துள்ளார். இதனாலேயே அவர் நல்ல நடிகர் என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்திற்காக விஜய் தொலைக்காட்சியில் அவருக்கு திறமைக்கான அங்கீகாரம் கொடுத்து கௌரவித்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் தொடர்ந்து நடித்து வந்ததின் மூலம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக் பாஸ் சீசன் 7 போட்டியில் தனது திறமைகளையும் உண்மையான குணங்களையும் வெளிப்படுத்தி கடைசி வரை பொறுமையாக இருந்து விளையாடி வெற்றி பெற்று வருவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.