மாயா பிக்பாஸ்க்கு எதற்கு வந்தார் தெரியுமா?
மாயா பலமான போட்டியாளரா, பலவீனமான போட்டியாளரா பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தன் கனவை நிறைவேற்றுவாரா மாயா.
மாயா மதுரை மாநகரில் பிறந்து வளர்ந்திருக்கிறார். இவரின் வயது 32 ஆகிறது. மதுரையில் உள்ள டி.வி.எஸ் லட்சுமி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து முடித்தார்.
பெங்களூரில் உள்ள அமிர்தா இன்ஜினியரிங் கல்லூரி படிப்பை முடித்தாராம். சிறுவயதில் விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக இருந்தது.
ஜிம்னாஸ்டிக் அவருக்கு விருப்பமான துறை. அதிலும் அவர் நேஷனல் வரை கலந்து கொண்டு இருக்கிறார். இவர் ஒரு அத்லெட்டிக் விளையாட்டு வீரர்.
சினிமா துறையில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக 2013 ஆம் ஆண்டு சென்னையில் குடி பெயர்ந்தார். சினிமா துறையில் வாய்ப்புகள் தேடி அலைந்திருந்தார்.
ஆனால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை இருந்தாலும் வாய்ப்புகள் கிடைக்கும் வரை போராடினார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அவருக்கு விருப்பமாக இருந்தது.
இன்ஸ்டாகிராமில் வலம் வந்திருக்கிறார். சமூக வலைத்தளங்களிலும் பாட்டு பாடும் பதிவுகள் பதிவிட்டு வந்திருந்தார். இவர் திரைத்துறையில் மாடலிங் செய்து வந்திருந்தார். கலைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அவரிடம் இருந்தது.
இவர் ஒரு தைரியமான பெண். எதிலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக உள்ளவர். இவங்களுக்கு முதல் முதலில் வானவில் வாழ்க்கை என்ற ஒரு படத்தில் சிறு கதாபாத்திரம் கிடைத்தது அதில் அவர் பிரபலம் அடையவில்லை.
அதற்குப் பிறகு தொடரி , 2.0 ஆகிய படங்களில் சிறுசிறு பாத்திரங்களில் நடித்துள்ளார். பிறகு விக்ரம் என்ற படத்தில் கமல் அவர்களுடன் மாயா நடித்ததின் மூலம் பெரிதும் கவரப்பட்டார். மேலும் படிக்க…
அந்தப் படத்தில் கமல் அவர்களிடம் சேர்ந்து நடித்தால் பிக் பாஸ் வருவதற்கு அதுவும் காரணமாக உள்ளது என்று கூறினார்.
இவருக்கு தியேட்டரிங்கு மிகவும் பிடிக்கும் அதில் ஆர்வம் அதிகமாக உள்ளதால் அதைப்பற்றி தெரிந்து கொண்டார். அவருக்கென ஒரு தியேட்டர் கட்டிக் கொள்ள வேண்டும் என்பது அவருடைய குறிக்கோள்.
அதில் அவரை போல் வாய்ப்புகள் தேடி வரும் இளைஞர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக உள்ளது. இத்தனை படங்கள் நடித்து இருந்தாலும் அவருக்கென பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. மேலும் படிக்க…
அதற்காக தற்போது அவர் எடுத்துள்ள ஆயுதம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன் திறமையை வெளி காட்ட வேண்டும் என்பது அவருடைய விருப்பம்.
இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதன் மூலம் தனக்கென ஒரு தியேட்டரை கட்டிக் கொள்ள வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக உள்ளது. பிக்பாஸின் உறுதியான போட்டியாளராக மாயா வலம் வர போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் சீசன் 7 விளையாட்டுப் போட்டியில் மாயா பலமான போட்டியாளராக வலம் வருவாரா? பலவீனமான போட்டியாளராக ஒரு வருவாரா? நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதன் மூலம் தன் கனவை நிறைவேற்றுவாரா மாயா.