Kurangu pedal திரைப்படம் யார் பார்க்க வேண்டும்?

குரங்கு பெடல் திரைப்படம் யார் பார்க்க வேண்டும்? திரைவிமர்சனம்

குரங்கு பெடல் திரைப்படம் யார் பார்க்க வேண்டும்? திரைவிமர்சனம்
Kurangu pedal review in tamil

“மதுபானக்கடை” திரைப்படத்தை இயக்கிய கமலக்கண்ணன் அவர்களது இயக்கத்தில் வெளிவந்துள்ளது.

“குரங்கு பெடல்” எனும் அருமையான படம். ராசி அழகப்பன் எழுதிய “சைகிள்” எனும் சிறுகதையின் திரையாக்கம்தான் இப்படம். திரைக்கலைஞர் சிவகார்த்திகேயன் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

1980 – ஆம் ஆண்டு காலகட்டப் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது இத்திரைக் காவியம். சைகிள் பழகும் சிறுவர்களுக்கு எடுத்தஎடுப்பில் உயரத்திலுள்ள சீட்டு மீது உட்கார்ந்து சைகிள் ஓட்ட முடியாது.

எனவே ஹேண்டில் பாருக்கு இடையில் கால்களை நுழைத்து முதலில் ஓட்டப் பழகுவார்கள். இதுதான் “குரங்கு பெடல்” என அழைக்கப் படுகிறது.

நான் பிறந்த மண்ணிற்க்கு பெருமை சேர்க்கபோகிறேன்! LADAKH 2024

இதில் நடித்தவர்களில் பெரும்பாலோர் ஈரோட்டிலுள்ள கலைத்தாய் அறக்கட்டளையில் பயிற்சி எடுத்த மாணவர்கள். குறிப்பாக அந்த ஐந்து மாணவர்களும் கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனர் மாதேசுவரன் அவர்களது வார்ப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படைப்பின் முக்கியப் பாத்திரமான மாரியப்பன் ( உண்மைப் பெயர் சந்தோஷ்) ஈரோடு பகுதியைச் சார்ந்தவர். படம் முழுவதும் ஈரோடு, பவானி, கத்தேரி, குமாரபாளையம் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பவானி அருகே நெடிதுயர்ந்து நிற்கும் ஊராட்சிக் கோட்டை மலை, தமிழ்த் திரைப்படத்தில் இப்பொழுதுதான் முதன் முதலாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இப்பெருமலை ஒரு காவல் தளபதியைப் போல நின்று அதன் கீழ் அடிவாரத்திலுள்ள மக்களைச் சிநேகபூர்வமாகக் கண்காணித்து கொண்டிருக்கிறது என்பதை ஆத்மார்த்தமாக இப்பகுதி மக்கள் அறிவார்கள்.

இறுதிக் காட்சியில் அம்மாமலை இடம் பெறுவது சாலப்பொருத்த மிக்கதாகும். கண்களுக்கும் விருந்தாகும்.

இதில் வரும் பாத்திரங்கள் எளிய வெள்ளந்தியான மனிதர்கள். சிரிப்பும், கேலியும், கோபமுமாக அவர்களது வாழ்வு நிறைந்துள்ளது.

Who is the best Hindi serial?

‘பம்பரம் வேகமாகச் சுழன்றாலும், ஒரே இடத்தில்தான் இருக்கும். ஆனால், சக்கரம் மெதுவாகச் சுற்றினாலும் பல இடங்களைச் சென்று சேர்ந்து விடும்” என இப்படத்தில் வரும் வசனம், வாழ்வில் இயக்கத்தின் முக்கியத்துவத்தை எளிதில் பார்வையாளர்களுக்குக் கடத்தி விடுகிறது.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே நிலவும் விருப்பும் வெறுப்புமான உறவு ஈர்க்கத்தக்க முறையில் படமாக்கப் பட்டுள்ளது. தவிரவும், சிறுவர்களுக்கு இடையேயான நட்பும் நெகிழ்வாகச் செதுக்கப் பட்டுள்ளது.

அதீதமான திருப்பங்களும், எரிச்சலூட்டும் குழு நடனங்களும், நம்பமுடியாத சண்டைக் காட்சிகளும் இல்லாமல், கதை ஒரு நதியைப் போல வெகு இயல்பாக நடந்து செல்கிறது.

குடிகாரனாக வரும் பாத்திரத்தால், நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை. மரபும், நவீனமும் இணைந்து காட்சிக்குப் பொருத்தமாக இசை பதிவாகியிருக்கிறது Kurangu pedal review in tamil.

Kurangu pedal

ஏறக்குறைய 44 ஆண்டுகளுக்கு முன்னாலான கதை என்பதால், அதற்குப் பொருத்தமான உடைகளும், காட்சிப் பின்னணிகளும் அமைந்திருப்பது, படைப்பின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது.

குரங்கு பெடல் திரைப்படம் யார் பார்க்க வேண்டும்? திரைவிமர்சனம்
Kurangu pedal review in tamil

இயக்குநர் கமலக்கண்ணன் ஈரோடு பகுதியைச் சார்ந்தவர் என்பதால், உரையாடல்களில் கொங்கு மொழியின் மணம் படம் முழுவதும் பரவிக் கிடக்கிறது.

ஈரோட்டின் கலாச்சார வரைபடத்திற்குப் புதிய திசைவழியைக் காட்டி நிற்கும்,. நாட்டுப்புறக் கலைகளின் ஆசான் மாதேசுவரன் அவர்களின் உழைப்பும் கலையும் இப்படத்தின் அடர்த்திக்குப் பின்னணியில் உள்ள ஓர் அதிசயமமாகும் Kurangu pedal review in tamil.

“அப்பாக்களைப் புரிந்து கொண்ட மகன்களுக்கும், மகன்களைப் புரிந்து கொள்ளப் போகும் அப்பாக்களுக்கும்” இப்படைப்பினைக் காணிக்கை ஆக்கியிருக்கும் இத்திரைப்படம், உறுதியாகப் பரிசுகள் பலவற்றை எளிதில் வெல்லும் என உணர முடிகிறது.

ஏற்கெனவே கோவா திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டுப் பாராட்டுகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடப்பட வேண்டிய செய்தியாகும் Kurangu pedal review in tamil.

தமிழ்த் திரைப்படங்கள் அண்மைக் காலத்தில் புதிய திசையில் பயணிக்கத் தொடங்கி இருப்பது சற்று ஆறுதலளிக்கிறது. அதன் மற்றுமோர் வெளிப்பாடுதான், “குரங்கு பெடல்” திரைப்படம். இதை வெற்றி பெறச் செய்ய வேண்டியது பார்வையாளர்களின் கடமையாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top