பயணத்தின் ஆறாவது நாள் Ladakh Solo Cycle Ride Day 6

பயணத்தின் ஆறாவது நாள் மார்ச் 15 வெள்ளிக்கிழமை நேற்று இரவு பெட்ரோல் பங்கில் தூங்கினோம். நல்ல கவனிப்பு நல்ல மனிதர்கள் ஒரு குறையும் இல்லை.

காலையில் முடிந்த அளவிற்கு சீக்கிரம் எழுந்து அன்றாட வேலைகளை முடித்துக் கொண்டு அத்துடன் சிறிது உடற்பயிற்சியும் செய்துவிட்டு பயணம் தொடங்கியது.

காலை 8 மணி அளவில் உணவு உண்ண ஆரம்பித்தோம் நாலு இட்லி ஒரு வடை 60 ரூபாய்.

சாப்பிட்ட பிறகு தான் இலையைக் கேட்டோம் மனசடைந்து போய்விட்டது விளக்கம் சொல்கிறார்கள்.

ஒரு இட்லி பத்து ரூபாய் ஒரு வடை 20 ரூபாயும் வேறு வழி இல்லாமல் பணத்தை கொடுத்து விட்டு பயணத்தை தொடங்கினோம்.

பெரிய அளவில் எந்த ஒரு ஓய்வும் எடுக்காமல் மதிய உணவு ஒரு மணி அளவில் சாப்பிட நிறுத்தினோம். சாப்பாடும் டாளும் காலிபிளவர் மீன் ஊறுகாய் அப்பளம் என மதிய உணவு முடிந்தது ஆனால் அதனுடைய மதிப்பும் 90 ரூபாய்.

சாப்பிட்டு விட்டு பயணத்தை தொடங்கிய சிறிது தூரத்திலேயே ஓய்வு தேவைப்பட்டது. ஏனென்றால் அதிகமாக சாப்பிட்டதால் பயணத்தை தொடர முடியவில்லை. மரத்தடியில் சிறிய ஒரு உறக்கத்தை போட்டு 4 மணி அளவில் எழுந்தோம்.

Ladakh Solo Cycle ride day 6 cine times babu
Ladakh Solo Cycle ride day 6 cine times babu

மாலை நேரம் வெயில் தாக்கம் அதிகமாக இல்லை என்பதால் வேகமா அதிகரித்து சுறுசுறுப்பாக பயணம் போய்க் கொண்டிருந்தது.

சாலையோரம் ஒருவர் எங்களை கவனித்து நிறுத்தி விசாரித்த சாதனையை கேட்டதும் எங்களை புகைப்படம் எடுத்து மற்ற விவரங்களையும் சேகரித்து கைபேசி எண்ணையும் வாங்கிக் கொண்டார்.

உங்களைப் பற்றி நாங்கள் you tube’ல் போடுகிறோம் பாருங்கள் என்று. ஆனால் அவருடைய நம்பரை வாங்க மறந்து விட்டோம்.

அவரும் கொடுக்கவில்லை அவர்களைப் பற்றிய முழு விவரமும் தெரியவில்லை. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று அதன் பின்பு பயணம் வழக்கம் போல் தொடங்கியது. Ladakh Solo Cycle ride

பிறகு தூங்குவதற்கு இடம் தேடி கடைசியில் 6 மணிக்கு மறுபடியும் பெட்ரோல் பங்க்கை நாடினோம். அவர்களும் மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டனர் தங்குவதற்கு அனுமதி கொடுத்துவிட்டனர்.

பிறகு அங்கேயே சிறிது நேரம் ஓய்வெடுத்து fresh up ஆகிவிட்டு சாப்பிட ஒரு உணவகத்திற்கு சென்றோம். ஆனால் அந்த கடையின் வெளியில் யாரும் இல்லை கடையோ ஈ அடித்துக் கொண்டு இருந்தது. Ladakh Solo Cycle ride

கடுமையான பாதையில் ஐந்தாவது நாள் பயணம்

அப்பொழுது சுதாரித்து இருக்க வேண்டும் நாங்கள் அதை கண்டுக்காமல் சாப்பிட உட்கார்ந்து முட்டை சாதம் ஆர்டர் செய்தோம் வந்த பிறகுதான் உணர்ந்தோம் கடையில் ஏன் யாருமே இல்லை என்று.

என்னவென்று தெரியவில்லை எங்களுக்கும் பிடிக்கவில்லை பாதி மட்டுமே சாப்பிட்டுவிட்டு பாதி வைத்துவிட்டேன் 80 ரூபாய் waste. Ladakh Solo Cycle ride

Distance: 91
Food cost: 252
Night stay: petrol bank

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top