பயணத்தின் ஏழாவது நாள் Ladakh Solo Cycle Ride Day 7
பயணத்தின் ஏழாவது நாள்
மார்ச் 16 சனிக்கிழமை நேற்று இரவு தூங்கிய பெட்ரோல் பங்கில் அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு பிரஷ்ஷாக பயணம் தொடங்கியது.
வணக்கம் போல் காலை உணவு உன்பதற்கு முன்பு 30 km கடந்து காலை உணவாக மசால் தோசை பூரியும் சாப்டோம். இதில் தோசை 40 ரூபாய் ஆனால் பூரி 30 ரூபாய் இன்றும் பணம் செலுத்தும் போது தான் தெரிந்தது.
பின்னர் பயணம் தொடங்கியது மதிய உணவு உண்பதற்கு முன்பு ரயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் எலுமிச்சை பழச்சாறு குடித்தோம் வெயிலுக்கு இதமாக இருந்தது அதன் பிறகு பயணம் ஆரம்பித்தோம்.
ஆனால் சிறிது தூரம் போனதுமே மதிய உணவுதான் தள்ளு வண்டியில் இளைஞர் ஒருவர் வைத்துக் கொண்டிருந்தார். கடையில் யாரும் இல்லாததாள் நாங்கள் அவருக்கு ஆதரவளிப்பதற்காக சென்று அந்த கடையில் சாப்பிட்டோம்.
சாப்பாடு
Veg meals சாப்பிட்டு சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு விட்டோம். அதிக தூரம் சென்றோம் தண்ணீர் அனைத்தும் தீர்ந்துவிட்டது. வெயிலில் தாக்கம் எங்களை வாட்டி வதைத்தது சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று பேருந்து நிலையத்தில் நிறுத்தினோம்.
அங்கேயே இரண்டரை மணி நேரம் சிறிய ஒரு தூக்கமிட்டோம். ஓய்வெடுத்த பின்பு பயணம் தொடங்கியது. சுறுசுறுப்பாக ஐதராபாத்தை அணைந்து விட வேண்டும் என்று வேகமாக ஓட்டி சென்றோம்.
ஹைதராபாத்தை அடைவதற்கு பத்து கிலோமீட்டர் மட்டுமே இருந்தது ஆனால் நாங்கள் சென்ற நேரத்தில் அந்த வழியில் அதிகமாக காவலர்கள் இருந்தார்கள்.
இரவில் சைக்கிள் ஓட்டுவதும் நல்லதல்ல என்பதை உணர்ந்து அவர்களும் ஏதாவது சொல்லப் போகிறார்கள் என்று முன்கூட்டியே பயணத்தை நிறுத்தி விட்டோம். அருகில் உள்ள பெட்ரோல் பங்க் சென்று விசாரித்தோம்.
உணவகம்
இரவில் இங்கே நாங்கள் தங்கலாமா என்று தாராளமாக தங்கிக் கொள்ளுங்கள் அருகிலேயே உணவகம் இருக்கு இரவு உணவு உண்டு கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.
அதன் பிறகு அவர்களிடம் சாப்பிட்டு வரோம் என்று கூறிவிட்டு சைக்கிளை தள்ளி கொண்டு பக்கத்தில் உள்ள உணவகத்திற்கு சென்றோம்.
போகும் சிறிது தூரத்திலேயே ஒரு காவலர் மறைத்து எங்கே செல்கிறீர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று எங்களை விசாரித்தார். உங்களது முழு விவரத்தையும் கூறினான் அவருடைய ரியாக்ஷன் ஆச்சரியமாக இருந்தது. நல்லா பண்ணுங்க பத்திரமா இருங்கடா அப்படி என்பது போல் கூறிவிட்டு அவருடைய வேலையை பார்க்கச் சென்று விட்டார்.
உணவகத்தின் அருகில் லாரி ஓட்டுநர்கள் இருக்க எங்களைப் பார்த்து லடாக்கா என்று கேட்டார். அவர் கேட்கும் இடத்திலேயே தெரிந்து விட்டது.
அவர்கள் தமிழ் என்று நாங்களும் பதிலுக்கு ஆமாம் அண்ணா நீங்க. என்ன தம்பி என்னடா அப்படி என்று கேட்டோம்.
அவரும் ஆமாம் பா நான் பாண்டிச்சேரி தான் அப்படி என்று அன்பாக பேசி வருவற்கு வருவார் அறிந்து வைத்த கூட்டம்.
சிறிது நிமிடங்கள் அவரிடம் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது அருகில் இருந்த ஒரு வாட்ச்மேன் அவர் இந்தியில் என்னிடம் பேசினார்.
அவருக்கு பதில் அளித்தேன் நேரம் வரும் சல்யூட் எல்லாம் அடித்து விட்டு எங்களைக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் அவர் உள்ளே சென்று அவருடைய உயர் அதிகாரியையும் கூட்டிட்டு வந்து எங்களிடம் அறிமுகப்படுத்தினார். Ladakh Solo Cycle Ride Day 7
பின்பு அவருடைய எங்களுக்கு கைக்கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் இருவரிடமும் சென்று வருகிறோம் என்று சொல்லிவிட்டு உணவகத்திற்கு சென்றோம்.
One plate meals 80 & 4 chappathi 80 என்று சொன்னார்கள் நாங்கள் off plate rice & 3 chapathi என ஆர்டர் செய்து உண்டோம். Ladakh Solo Cycle Ride Day 7
பின்னர் விசாரித்த பெட்ரோல் வங்கியில் வந்து கூடாரம் அமைத்து தூங்க ஆரம்பித்தோம.
Distance: 130
Food cost: 220
Stay: petrol bank