Ladakh Solo Ride 3ம் நாள் விடியற்காலையிலேயே பயணம்

இன்று மூன்றாம் நாள் அதிகாலையிலேயே எழுந்து நம்முடைய வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு விடியற்காலையிலேயே பயணத்தை தொடங்கினோம்.

எட்டு மணிக்குள் 30 கிலோமீட்டர் சாதாரணமாக பயணித்தோம் எந்த ஒரு கடினமும் இல்லாமல் காலை உணவாக இட்லி எங்களுக்கு கிடைத்தது மூன்றாம் நாள் இட்லி சாப்பிட்டோம்.

வழக்கம் போல் பயணம் தொடங்கியது. வெயிலின் காரணமாக ஓய்வெடுத்து நீர் ஆதாம் குடித்துவிட்டு மறுபடியும் பயணத்தை தொடங்கினான். மதிய உணவாக பிரியாணி சாப்பிட்டோம்.

மூணு மணி அளவில் ஒரு மிகப்பெரிய பாலத்தின் கீழ் தண்ணீர் வளர்ச்சி போயிருந்தது ஆனால் சிறு தொலைவில் தண்ணி இருப்பதையும் அங்கே சில பேர் துணி துவைத்துக் கொண்டிருப்பதையும் கண்டோம்.  அங்கே சென்று வந்தால் திருடிவிடும் என்று பயந்தோம்.

அதன் பிறகு எங்கு போய் சாப்பிடுவது இரவு தூங்க இடம் தேடுவது என்று யோசித்துக் கொண்டே வந்திருந்த பொழுது அருகில் ஒரு கோவில் இருப்பதை கண்டு அங்கு சென்று அவர்களிடம் தங்குவதற்கு அனுமதி கேட்டோம்.

முதலில் அவர்கள் மறுத்துவிட்டார்கள். எங்களை பார்த்து பயந்துவிட்டு அதன் பிறகு எங்களை பற்றி இன்னும் சிறிது தெளிவாக சொன்னோம், அதன் பிறகு அனுமதி கொடுத்து விட்டார்கள்.

தங்கைக்கோள்கள் என்று மிகவும் சந்தோசமாகிவிட்டது. பின்னர் அவர்களிடம் குளித்துவிட்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை நோக்கி சென்றோம்.

பல பேர் துணிகளை துவைத்து மண்ணில் காய வைத்து அவைகளை மூட்டை கட்டி எடுத்துக்கொண்டு போய் கொண்டு இருந்தார்கள்.

அவர்களிடம் விசாரித்ததில் நல்ல தண்ணீர் தான் தாராளமாக குளிக்கலாம் என்று சொன்னார்கள். Ladakh Solo Ride Day 3 Early morning journey

Who is the best serial in the world?

என்ன நாங்களும் அங்கேயே கிழித்து விட்டு எங்களது துணிகளை துவைத்துக்கொண்டு வருவ வழியாக நாங்கள் அனுமதி வாங்கிய கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.

இரவு உணவு சப்பாத்தி உடன் பின்னர் கோவில் அருகிலேயே அமர்ந்து இரவு உணவை ஒன்று விட்டு கோவில் அருகில் உள்ள திறந்தவெளியில் தூங்குவதற்கு கூடாரத்தை அமைக்க தயார் செய்து கொண்டிருந்தோம்.

அப்பொழுது அங்கிருந்து ஒரு வயதானவர்கள் வந்து பக்கத்து கோவிலில் வராண்டாவில் ஃபேன் இருக்கிறது.

நீங்கள் வேண்டுமானால் அங்கு படுத்துக்கொள்ளுங்கள் அங்கே எந்த தொந்தரவும் இருக்காது மிதிவண்டியையும் கூட அங்கேயே எடுத்துக்கொண்டு போய் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.

நானும் சரி அம்மா என்று இங்கு படுக்க தயாரித்த பொருட்களை மறுபடியும் எடுத்துக்கொண்டு போக தயார் படுத்திக் கொண்டிருந்தேன்.

அவர்கள் சாப்பிட்டாயா என்று கேட்டார்கள் இல்லையென்றால் நான் உணவு கொண்டு வரட்டுமா என்றும் கேட்டார்கள். Ladakh Solo Ride Day 3 Early morning journey

சாப்பாடு கிடைக்குமா என்ற பயத்தில் இரண்டாம் நாள் பயணம் Ladakh

இல்லையம்மா நாங்கள் உணவகத்தில் சப்பாத்தி வாங்கிக் கொண்டு வந்து விட்டோம். அதை தான் சாப்பிட்டோம் அப்படி என்று கூறியதும் எவ்வளவு தூரம் சென்று வாங்கிட்டு வந்தீர்கள் என்று கேட்டார்கள். கொஞ்சம் தூரம் தான் அம்மா போய் வாங்கிட்டு வந்து விட்டோம்.

சாப்பிட்டு விட்டோம் சாப்பாடு எல்லாம் இனிமேல் வேண்டாம் அம்மா அப்படி என்று கூறினோம். ஆனால் அவர்கள் மறுபடியும் கேட்டார்கள் வேண்டுமானால் சொல்லுங்கள் சாப்பாடு இருக்கிறது.

நான் கொண்டு வரேன் என்று இல்லை அம்மா நன்றாகவே சாப்பிட்டு விட்டோம் போதும் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்து விட்டு அவர்கள் சொன்ன இடத்தில் கூடாரத்தை அமைத்து பாதுகாப்புடன் நன்றாக தூங்கினோம். Ladakh Solo Ride Day 3 Early morning journey

Distance: 92
Food cost: 15
Night stay: Temple

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top