ஷங்கர் இயக்கத்தில் திரையரங்குகளில் இந்தியன் 2

பிரமாண்டமான இயக்குனர் ஆன ஷங்கர் இயக்கத்தில் திரையரங்குகளில் வரவிருக்கும் இந்தியன் 2 திரைப்படம்.

இயக்குனர் ஷங்கர் அவர்கள் எடுத்த படங்களில் இந்தியன் ஒன், எந்திரன், 2.0
போன்ற திரைப்படங்களை பிரம்மாண்ட வெற்றியை கொடுத்திருக்கிறார்.

சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவரப் போகும் திரைப்படம் இந்தியன் 2.

1996 ஆம் ஆண்டு இந்தியன் 1 திரைப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தின் கதை சமூகத்தில் உள்ள லஞ்சத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம்.

இந்தியன் ஒன் திரைப்படம் மக்களிடையே வரவேற்பை
பெற்றது.

இந்தியன் 2 திரைப்படத்தை லைக்காப்ரொடக்ஷன் செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளராக அனிருத் அவர்கள் இசையமைக்கிறார்.

இந்தியன் 2 படத்தில் உலக நாயகன் கமலஹாசன் அவர்களும் காஜல் அகர்வால், ,பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, ராகுல் ,சமுத்திரக்கனி
போன்ற நடித்துள்ளார்கள்.

காஜல் அகர்வால் ஒரு சயின்டிஸ்ட் ஆக வரப்போகிறார் என தெரிகிறது.

பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி போன்ற நடிகர்கள் தங்களின் கதாபாத்திரங்களில் தனது திறமைகளை வெளிகாட்டுவார். இந்தப் படத்தின் மூலம் அவர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து அவர்கள் எழுதியிருக்கிறார்.

இப்படத்தில் கமலஹாசன் அவர்கள் தன்னுடைய முழு உழைப்பையும் கொடுத்து நடித்திருக்கிறார். அவருக்கு மேக்கப் போடும் நேரம் 5 மணி நேரம் ஆகும் என தகவல் வந்திருக்கிறது.

இந்தப் படத்தில் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியன் ஒன் படத்தில் சேனாதிபதி மட்டும் கடைசியில் இருப்பார். அதன் தொடர்ச்சியாக இந்தியன் 2 படத்தில் சேனாதிபதியாக கமலஹாசன் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் கதையில் அரசியல் உள்ள குற்றங்களும் தவறுகளையும் வெளி கொணர்வது படத்தின் கதையாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கமலஹாசனின் வெறித்தனமான ரசிகர்களுக்கு விருந்து படைக்கபோவது இந்தியன் 2 படமாகும்.

அதுமட்டுமின்றி கே எம் 234 மற்றும் கே எச் 233 போன்ற படங்களும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். என தகவல்கள் வந்திருக்கின்றது.

நவம்பர் முதல் வாரத்தில் கமல்ஹாசன் பிறந்த நாளை ஒட்டி திரைப்படம் எப்பொழுது வெளிவரப் போகும் என தகவல்கள் கொடுக்கப் போகிறார்கள்.

கே எம் 234 ப்ரோமோ டீசர் 234 பிரமோ முதல் காட்சி டீசர் நவம்பர் 7 வெளியாக
போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக நாயகன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளிவரப்போகிறது.

இந்தியன் 2 படம் மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படம் இந்தியன் சினிமா கே பெயர் வாங்கி கொடுக்கும் ஒரு படமாக அமையும்.

பல விருதுகளையும் பல அங்கீகாரங்களையும் வாங்கக்கூடிய படமாக இருக்கும் என தெரிகிறது.

வரும் கோடை விடுமுறைக்கு வெளியாகப் போகும் என தகவல்கள் வந்திருக்கிறது.

உலக நாயகன் கமலஹாசனின் நடிப்பு திறமையும் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்களின் அறிவுத்திறமையை சேர்த்து வருவதால் இப்படம் ரசிகர்களுக்கு மற்றும் இந்தியன் சினிமாக்கு வரலாற்று படைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் பிரதீப் வெளியேறுவாரா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top