Viduthalai Part 2 Full Movie – விடுதலை படம் எப்படி இருக்கிறது
சூரி ஹீரோவாக நடித்து இப்பொழுது திரைக்கு வந்துள்ள படம் தான் விடுதலை பாகம் 2. கடந்த வருடம் சூரி விடுதலை முதல் பாகம் திரைப்படத்தில் நடித்திருந்தார். Viduthalai part 2 tamil movie review
இந்த படத்தை வெற்றிமாறன் மிகவும் அருமையாக இயக்கியிருந்தார். இப்பொழுது விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது. எந்த படத்திலும் நடிகர் சூரி தான் நடித்திருக்கிறார்.
முக்கியமாக இந்த படத்தில் முதல் பாகம் முடியும் இடத்தில் தான் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் தொடங்குகிறது. இதனால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு புரியும் அளவிற்கு படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
முதல் பாகத்தில் நடிகர் சூரி ஹீரோவாக நடித்திருந்தார். முழு படத்திலும் அவருடைய பங்கு பெரிதும் இடம்பெற்று இருந்தது.
ஆனால் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் மக்களிடையே மிகவும் வரவேற்கப்படுகிறது.
இப்படத்தில் முதல் ஒரு மணி நேரம் மிகவும் பரபரப்பான காட்சிகளையும், நிகழ்வுகளையும் ஒரே இடத்தில் நடப்பதை பார்ப்பதற்கு அருமையாக உள்ளது.
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா அவர்களின் பாடலும், பின்னணி இசையும் ரசிக்கும் அளவிற்கு உள்ளது.
படத்தை முதல் ஒரு மணி நேரம் மிகவும் பரபரப்பான காட்சியாகவும், அடுத்து ஒரு மணி நேரம் சில தேவையற்ற காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது என்ற எண்ணமும் தோன்றுகிறது.
குறிப்பாக முதலில் தோன்றும் 30 நிமிட காட்சி ரசிகர்களை மிகவும் வியக்க வைக்கிறது. இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கம் இப்படத்திற்கு மிகப்பெரிய பங்குகளை வகுத்திருக்கிறது.
விடுதலைப் படம் பாகம் ஒன்று மற்றும் பாகம் 2 திரைப்படங்களும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த படத்தைப் பொறுத்தவரை முதல் பாதி சூப்பரா ஆக உள்ளது. இரண்டாம் பாதியில் சராசரியாக உள்ளது என்றே கூறலாம்.
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பல நிகழ்வுகளை கண் முன்னே காட்டி இருக்கிறார் வெற்றிமாறன்.