Who to ask without alternative பயணத்தின் 31 வது நாள் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சனிக்கிழமை. நேற்று இரவு விளையாடும் முடித்துவிட்டு அனைத்து வலைதளங்களில் வீடியோவை பதிவு செய்துவிட்டு ஒரு மணி அளவில் தூங்கினோம்.
மறுநாள் 9 மணி அளவில் தான் முடித்தோம். எழுந்து காலைகடன் முடிவதற்கு சென்றால் கழிவறை அறையோ பூட்டி இருந்தது!! வேறு வழி இல்லாமல் யாரிடம் கேட்பது என்று தெரியாமல் அறைக்கு திரும்பி வந்து உட்கார்ந்து கொண்டிருந்தோம்.
பதினோரு மணி வரையும் சாப்பிடாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து கைபேசியை உபயோகித்துக் கொண்டிருந்தோம். நடுவில் நேற்றிரவு வசதிகள் செய்து கொடுத்த அந்த மாணவன் வந்தான்.
ஆனால் அவன் வேலையாக இருந்ததான். வந்து நலம் விசாரித்து விட்டு மட்டும் சென்று விட்டான். நாங்களும் அவனிடம் ஏதும் கேட்கவில்லை.
எங்களை சீக்கிரம் சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு மறுபடியும் வரேன் என்று விட்டு போய் விட்டான் ஏதோ வேலை இருந்ததா.
ஒரு வழியாக 11.30 மணி அளவில் சாப்பிடுவதற்காக சென்றோம் நேற்று கவனித்தது போலவே கவனித்தார்கள் தலையில் துண்டு ஒன்று கட்டிக்கொண்டு போய் அமர்ந்தோம்.
காலையிலேயும் சப்பாத்தி டால் வித்தியாசமாக புதியதாக இனிப்பாக ஜிலேபி மிகவும் சுவையாக இருந்தது. நாலு சப்பாத்தி இரண்டு ஜிலேபி என்று வயிறு நிறைய சாப்பிட்டோம்.
அதன் பின்பு குளிக்கலாம் என்று திட்டமிட்டு பல நாட்களுக்குப் பிறகு குளியல் அறையில் குளித்தோம்.
கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு மேலாகிவிட்டது. கிழித்து இப்பொழுதுதான் குளித்தோம். மிகவும் சுத்தமாக அருமையாக இருந்தது. தூக்கமோ கண்ணை சொக்கி கொண்டிருந்தது. ஆனால் துணிகளை துவைக்க வேண்டும்.
அல்லவா அதனால் தூக்கத்தை அடைத்துவிட்டு துணி துவைக்க ஆரம்பித்தோம் கைகளில் அல்ல இயந்திரத்தில்.
அங்கே உள்ள துணி துவைக்கும் இயந்திரத்திலேயே துணி அனைத்தையும் போட்டுவிட்டு அரை மணி நேரம் காத்திருந்தோம்.
துணியோ பல பலவென வெள்ளையாயிற்று பின்னர் அவற்றை எடுத்து வெயிலில் காய வைத்து விட்டு சிறிது நேரம் உறங்கலாம் என்று படுத்து விட்டோம். மூன்று முப்பது மணி அளவில்.
5 மணி அளவில் அங்கு சென்று அங்கு இருப்பவர்களிடம் பேசிக்கொண்டும் அந்த இடத்தினை சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தோம்.
பின்னர் இரவு சாப்பாடை சீக்கிரமாக சாப்பிட்டுவிட்டு மறுபடியும் உடற்பயிற்சியை தொடங்கினோம்.
அங்குள்ள மக்களுடன் இணைந்து பின்னர் மறுநாள் அதிகாலையில் எழுந்து பயணம் தொடங்க இருப்பதால் சீக்கிரமாக போய் படுத்து உறங்கி விட்டோம்.
Place: Punjab
Distance:
Food cost:
Night stay: Temple