Two Bananas Ladakh Ride பயணத்தின் 26 ஆவது நாள் ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி புதன்கிழமை நேற்று இரவு தூங்கிய பெட்ரோல் பங்கில் சிறப்பான உறக்கம் எழுந்ததோ 7:30 மணி அளவில்.
எழுந்தவுடன் அதிர்ச்சி என்னவென்றால் நாங்கள் எழுந்த பிறகு வேலை செய்யும் ஊழியர்கள் எங்களுக்கு தேநீர் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
இதையெல்லாம் நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவர்கள் நாங்கள் மேலும் வரை காத்திருந்து எழுந்த பிறகு வந்து கொடுத்தது மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். மக்கள் இப்படியும் இருக்கிறார்கள் அடடா என்ன ஒரு ஆனந்தம்.
தேனீரை குடித்து முடித்து விட்டு ஒன்பது மணி அளவில் அங்கே இருந்து பயணம் தொடங்கியது. அனைவருக்கும் நன்றி தெரிவித்து விட்டு சென்றோம்.
ஒன்பது முப்பது மணி அளவில் உணவு கடை ஒன்றை கண்டு அங்கு சென்று சாப்பிட்டோம். ஆனால் விலையோ அதிகம். ஒரு சமோசாவின் விலை 25 ரூபாய் ஆகும்.
ஒரு சமோசாவை அப்பில் பிச்சி போட்டு அதை நீ நூல் சுண்டல் போன்று ஏதோ ஒரு கலவையை ஊற்றி அதன் மேல் ஒரு ஸ்பூன் தயிர் இனிப்பிற்கு சிவப்பு கலரில் ஏதோ ஒன்றும் பிழைப்பிற்கு பச்சை கலரில் ஏதோ ஒன்றும் நான்கு வகையாக விதவிதமாக ஊற்றி கொடுத்தார்கள்.
அதனால் தான் அதனின் விலை அவ்வளவோ என்னவோ முந்தைய நாள் சாப்பிட்ட லட்டு போன்ற அங்கேயும் இருந்தது.
சரி ஐந்து ரூபாய் தானே சொல்லி எடுத்து சாப்பிட்டால் அதனுடைய விலையும் பத்து ரூபாயாம். இறுதியில் 35 ரூபாய் காலை உணவு.
சாப்பிட்டுவிட்டு 9:50 மணி அளவில் மறுபடியும் பயணம் தொடங்கியது. மரங்கள் நிறைந்த நெடுஞ்சாலையில் பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
பத்து நாப்பது மணியளவில் கரும்புச்சாறு கடை ஒன்றை பார்த்து குடிக்கலாம் என்று நிறுத்தி குடித்தோம்.
ஆனால் அவன் கொடுத்ததோ கண்ணாடி டம்ளர் மிகவும் பெரியதாக இருந்தது. அழகும் கூட இருந்தது. ரயில் நேரத்தில் பிடிப்பதற்கோ நன்றாக தான் இருந்தது.
ஆனால் விலை எவ்வளவு சொல்லுவான் என்று பயந்து கொண்டே குடித்தோம்.
குடித்து முடித்துவிட்டு எவ்வளவு என்று கேட்டதற்கு 40 ரூபாய் என்று பதில் அளித்தான் தெரிந்த விஷயம் தானே.
இவ்வளவு பெரிய டம்ளரில் கொடுக்கும் போது சந்தேகப்பட்டோம். சொத்தை எழுதி வாங்கி விடுவான் என்று அதன்படியே நடந்து விட்டது.
குடித்துவிட்டு 11 மணி அளவில் பயணம் தொடங்கியது. ரெண்டு மணி வரை எங்கும் நிறுத்தாமல் கடைசியாக சாப்பிடுவதற்கு மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்தோம்.
கடையில் திறப்பு விழா
அங்கே ஒரு கடையில் திறப்பு விழா என்பதால் அனைவருக்கும் மதிய உணவு இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
நாங்கள் அங்கு சென்று சைக்கிளை நிறுத்திவிட்டு கைகளை கழுவி விட்டு கிட்ட நெருங்கினோம். பார்த்தால் உண்டானை முடி வைத்து விட்டார்கள்.
அசிங்கப்பட்டு திரும்பி நோம். ஆனால் அங்க விழாவை நடத்தும் குழுவினர் வந்து எங்களை கையைப் பிடித்து உள்ளே வாருங்கள்.
நீங்கள் இல்லையா அமர்ந்து சாப்பிடுங்கள் உணவு உள்ளே இருக்கின்றது என்று எங்களை கூட்டிக் கொண்டு சென்று உள்ளே பப்பே ஐட்டம் போல் வைத்திருந்தார்கள். செல்ஃப் சர்வீஸ் நம்மளே எடுத்து வைத்து சாப்பிடலாம்.
நல்ல விருந்து இனிப்பு பூரி சமோசா என அகவகையாக இருந்தது. சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது பள்ளி முடித்துவிட்டு குழந்தைகள் வந்து சாப்பிடுவதற்கு உள்ளே நுழைந்தனர்.
ஆனால் அவர்கள் அவர்களை தடுத்து விட்டார்கள். அனைத்தும் காலியாகிவிட்டது. யாரும் வர வேண்டாம். போங்கள் என்று உள்ளே இருந்து அவர்களை நாங்கள் பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
உடனடியாக சாப்பிட்டுவிட்டு கையை கழுவி விட்டு அந்த குழந்தைகள் வெளியில் நடந்து கொண்டு சென்று இருந்தன. அவர்களை கூட்டு மிட்டாய் கடைக்கு கூட்டிக் கொண்டு போய் அவர்களுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து அவர்களும் மிகவும் சந்தோஷமடைந்தனர்.
பின்னர் விருந்தளித்த நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துவிட்டு அங்கிருந்து பயணம் தொடங்கியது. போய்க்கொண்டு இருக்கும் வழியில் தான் அந்த சிறுவர்களோ ஒன்று சேர்ந்து கும்பலாக நடந்து கொண்டு சென்று இருந்தனர்.
அவர்களிடத்தும் போய் வருகிறோம். பாய் என்று சொல்லிவிட்டு பயணம் தொடர்ந்தது 2:50 மணி அளவில். அதன் பின்னர் வீட்டிலிருந்து அக்காவிடம் தொலைபேசியில் அழைப்பு வந்தது.
வீடியோ காலில் அம்மா யாவை பார்த்துக் கொண்டு அரை மணி நேரம் பேசி இருப்போம். அதன்பின்பு ஒரு மணி நேரம் நார்மல் கால் பண்ணி பேசிக்கொண்டு வந்திருந்தோம். நேரம் ஓடியது தெரியவில்லை.
ஒரு வழியாக வைத்துவிட்டு சிறிது நேரம் பெடல் செய்து இருப்போம். இதுக்கு மேல் முடியாது ஒரு பத்து கிலோ மீட்டர் மீது வைத்து விட்டு இன்று பயணத்தை முடித்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருந்தோம்.
போய்க்கொண்டிருக்கும் போது ஒரு பெரியவர் டிராக்டர் வண்டியை ஓட்டிக்கொண்டு எங்களுக்கு கை காமித்து சிரித்துக்கொண்டு போனார். அவரிடம் கேட்டு அவருடைய வண்டியினை பிடித்துக் கொண்டோம்.
மூன்று கிலோமீட்டர் சென்றவுடன் பெட்ரோல் பங்கில் உள் நுழைந்து பெட்ரோல் போடுவதாக செய்கையை காண்பித்தார். வண்டியை விட்டுவிட்டு பயணம் தொடர்ந்தது.
அவர் பெட்ரோல் போட்டுக் கொண்டு வந்த பிறகு வண்டியை பிடித்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருந்தோம்.
ஆனால் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியர்கள் எங்களது கை காமித்து உள்ளே வந்து தண்ணீர் குடித்துவிட்டு போகுமாறு அழைப்பு விடுத்தனர்.
சமோசா, லட்டு, மிச்சர்
அதன்படி உள்ளே சென்று எங்களின் குடி தண்ணீர் நிரப்பி கொண்டு அவர்களிடம் பேசினோம். அவர்களும் இங்கே தங்கிக் கொள்ளுங்கள்.
தாராளமாக அனைத்து வசதிகளும் இருக்கின்றதோ பயப்பிடும் அளவிற்கு ஒன்றும் நடக்காது என்று கூறினார்கள்.
சரி தங்கிவிடலாம் என்று முடிவெடுத்தோம். ஆனால் அந்த பெரியவர் பெட்ரோல் போட்டு முடித்துவிட்டு எங்கள் இடம் வந்து நிப்பாட்டி என்ன செல்லலாமா என்று சிக்னல் காண்பித்தார். அவரிடம் சென்று நீங்கள் இன்னும் எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்று கேட்டோம்.
அவர் யோசித்து 17 கிலோமீட்டர் தூரம் இருக்கும். நான் செல்ல வேண்டிய ஊர் என்று சொன்னார் சரி 15 கிலோ மீட்டர் போறோமே போய்விடலாம்.
அதன் பின்புள்ள பெட்ரோல் வங்கியில் தங்கிக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்து அவர் வண்டியை பிடித்துக் கொண்டு பயணம் தொடங்கியது.
ஆனால் பாத்து கிலோமீட்டர் தூரத்திலேயே அவர் ஒரு ஊரினால் இறங்கி விட்டார். அதன் பின்பு நாம் சைக்கிள் அமைக்க ஆரம்பித்தோம். பெட்ரோல் பங்கினை தேடி மணியோ 5:35 தொடர்ந்து மிதித்து கொண்டே இருந்தோம்.
ஆறு முப்பது மணி அளவில் ஒரு பெட்ரோல் பங்கினை கண்டுபிடித்து அங்கு கேட்டதற்கு சம்மதித்து விட்டார்கள். ஆனால் அருகில் சாப்பிடுவதற்கே உணவு கடை இல்லை சாப்பிட்டு விட்டு வருகிறோம். என்று சொல்லி உணவு கடையை தேடி அலைந்து கொண்டே இருந்தோம்.
எங்களுக்கு ஏற்றார் போல் கனவு கிடைக்கவில்லை. பாலத்திற்கு அடியில் சிறுசிறு கடைகள் இருந்தது. ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கிக் கொண்டே இருந்தோம்.
எதுவும் எங்களுக்கு உகந்தது போல் அமையவில்லை. வேறு வழி இன்றி அங்கு ஒரு கடையில் சமோசா, லட்டு, மிச்சர் போன்ற பொருட்களை வாங்கி சாப்பிட்டோம்.
அதன் பின்பும் பசி அடங்காததால் இரண்டு வாழைப்பழமும் வாங்கிக் கொண்டு பெட்ரோல் பங்கிற்கு திரும்பினோம். அங்கு சென்று கூடாரம் அமைத்துவிட்டு தொலைபேசியை உபயோகித்துக் கொண்டிருந்தோம்.
10 மணி அளவில் மழை பெய்ய ஆரம்பித்தது. அனைத்து பொருட்களையும் உடனடியாக சுருட்டிக்கொண்டு அருகில் இருந்த ஒரு அறையில் வைத்துவிட்டு முழித்துக் கொண்டு இருந்தோம்.
அப்பொழுது அங்கே இருந்த இரண்டு ஊழியர்கள் அலுவலகத்திற்கு உள்ளே வந்து இருக்கையில் படுத்து தூங்கிக் கொள்ளுங்கள் என்று உதவினார்கள்.
பல நாட்களுக்குப் பிறகு அருமையான தூக்கம் அறையினால் விலை உயர்ந்த சோபாவின்.
Distance: 145
Food cost:
Night stay: petrol pump
+ There are no comments
Add yours